மீண்டும் ஐஸ்வர்யா செய்த செயல்.. பதறி அடித்து வந்த தனம், முல்லைக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: மருத்துவமனையில் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்த கண்ணன் கதிருக்கு போன் போடுகிறார்.
மருத்துவமனைக்கு வந்த தனம் மற்றும் முல்லை ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் செயலை பார்த்து அதிர்ந்து போகின்றனர்.
மருத்துவமனையில் இருக்கும் ஐஸ்வர்யா அங்கேயும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மே ஒன்றாம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் மருத்துவமனையில் கண்ணன் பணம் இல்லாமல் மெடிக்கலில் கொஞ்ச நேரத்தில் வந்து பணம் தருவதாக கூறி மருந்துகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்.
ஐஸ்வர்யாவின் சித்தி தனக்கு வீட்டில் வேலை இருக்கிறது என்று கூறி வீட்டுக்கு போவதாக கிளம்பி செல்கிறார். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெரியாமல் தவித்து இருக்கும் கண்ணன் கதிருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறார். கதிர் தனம் மற்றும் முல்லையிடம் ஐஸ்வர்யா வயிறு வலியால் மருத்துவமனையில் சேர்த்திருக்கப்பதாக சொல்கிறார்.
அடுத்ததாக அவசரமாக கதிர் மருத்துவமனைக்கு வருகிறார். வந்து கண்ணனுக்கு உதவியாக இருக்க, அப்போது தனமும் முல்லையும் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக ஓடி வருகின்றனர். பிறகு அவர்களிடம் கதிர் பயப்படற மாதிரி ஒன்னும் இல்லன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க என்று சொல்கிறார். ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலி என சொன்னதைக் கேட்டு தனம் ரொம்பவே பயப்படுகிறார்.

ஐஸ்வர்யா தனம் மற்றும் முல்லை, கதிரை பார்த்ததும் எல்லோரும் வந்து இருக்கீங்களா என்று கேட்கிறார். பிறகு முல்லை உனக்கு எப்படி வயிற்றில் அடிபட்டது உனக்கு எப்படி வயிறு வலி வந்தது என்று கேட்க சேனலை நீங்க எல்லாரும் பாத்தீங்களா? நாங்க தொடர்ச்சியா வீடியோ போட்டுட்டு இருக்கேன்ல என்று பேச நான் உனக்கு எப்படி அடிபட்டது என்று கேட்டேன் என்று முல்லை திட்டுகிறார். பிறகு டான்ஸ் ஆடும் போது தனக்கு கீழே விழுந்து அடிபட்டதை ஐஸ்வர்யா சொல்கிறார்.
இதைக் கேட்ட அதிர்ச்சியான தனமும் முல்லையும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் திட்டுகின்றனர். யாராவது இப்படி பண்ணுவாங்களா என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது டாக்டர் வந்து இனி பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை என்று கூறி இப்படி டான்ஸ் எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கக் கூடாது என்று திட்டி விட்டு செல்கிறார்.

பிறகு எல்லோரும் வெளியே இருக்கும் போது ஐஸ்வர்யா கண்ணனிடம் நாம போட்ட வீடியோ நல்லா போயிருக்கா என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு நாம மருத்துவமனையில் சேர்ந்து இருப்பதையும் வீடியோவாக போட்டால் நல்ல வியூஸ் வரும் நிறைய பேரு நம்மளுக்கு அனுதாபமாக பேசுவாங்க என்று கூறி மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது வெளியே தனம், முல்லை, கதிர் இவர்களுடைய வீடியோவை பார்த்து திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
பிறகு முல்லை யதார்த்தமாக ரூமில் எட்டிப் பார்க்க அங்கே இவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து தனத்தையும் கதிரையும் கூப்பிட்டு காட்டுகிறார். அப்போது தனம் அவளுக்குத்தான் புத்தி இல்லை இந்த கண்ணனும் ஏன் இப்படி செய்கிறான் என்று திட்டுகிறார். கதிரும் கோபத்தில் இருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications