வீட்டுப் பெண்களை அவமானப்படுத்தும் கடன்காரர்கள்..பாசத்தால் சிக்கும் கதிர்..மூர்த்தியின் அதிரடி முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் இ எம் ஐ பணம் கட்டாததால் பேங்க் ஆபீஸர் கண்ணன் வீட்டில் பெண்களை தவறாக பேசி கண்ணனை அடிக்கின்றனர்.
கண்ணனுக்கு ஆதரவாக கதிர் பேங்க் ஆபீஸர்களை அடித்ததால் போலீசால் கைது செய்யப்படுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கான இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இதில் கண்ணன் வீட்டிற்கு மீண்டும் வரும் பேங்க் ஆபிஸர்கள் கண்ணனிடம் பணம் கேட்க கண்ணன் இன்னும் இரண்டு நாட்கள் டைம் வேண்டும் என்று கேட்கின்றனர்.
அப்போது மிஸ்டர் கண்ணன் நீங்கள் கிரெடிட் கார்டுக்கான பணம் கட்டாததால் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துட்டு போறோம் என்று சொல்லி பணத்தை கொடுத்துட்டு நீங்க பொருளை எடுத்துட்டு போங்க என்று ஒருவர் கூறுகிறார். அப்போது அருகில் இருக்கும் இன்னொரு நபர் பணத்தைக் கட்ட முடியலன்னா உன் பொண்டாட்டிய வேணா தூக்கிட்டு போகட்டுமா என்று கேட்கிறார்.
பிறகு அந்த நபர் ஐஸ்வர்யாவின் அருகில் செல்ல கண்ணன் நீ என்னடா பணத்துக்காக வீட்டில் பொம்பளைகளை எல்லாம் பத்தி பேசுவியா என்று கன்னத்தில் அடிக்க அந்த நபர் கீழே விழுந்து விடுகிறார். பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து பணத்தைக் கொடுக்க வக்கு இல்ல உனக்கு என்னடா மரியாதை என்று கண்ணனை அடிக்கின்றனர். தடுக்க வந்த ஐஸ்வர்யாவை ஐஸ்வர்யாவின் சித்தி பிடித்து வைத்துக் கொள்கிறார்.
ஏற்கனவே ஊருக்கு சென்று இருந்த கதிர் இடம் கண்ணன் நடந்தது எல்லாம் சொல்ல, கண்ணனை பைக்கில் ஏற்றிக்கொண்டு வரும் கதிர் அந்த இரண்டு பேங்க் ஆபீஸர்களும் டீக்கடையில் இருக்கும் போது பணம் கொடுக்கணும்னா வீட்டில் பொம்பளைங்கள பத்தி தப்பா பேசுவியா என்று அடித்து நொறுக்குகிறார். இதனால் அவர்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கின்றனர்.

பிறகு வீட்டிற்கு வந்த கதிர் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே வரும் போலீசார் இங்கு கதிர் யாரு நீதானா பேங்க் ஆபீஸர் அடிச்சது? உன்னை கைது செய்ய வந்திருக்கோம் என்று தரதரவென இழுத்துக்கொண்டு செல்கின்றனர். முல்லை அவருக்கு எதுவும் தெரியாது சார் விட்டுருங்க என்று கெஞ்சி கொண்டிருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் கோபத்தில் மூர்த்தி நின்று கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இனி வரும் எபிசோடில் மூர்த்தி கண்ணனை திட்டி உன்னால் எங்களுடைய நிம்மதி எல்லாம் போகிறது. உனக்காக அவன் கஷ்டப்பட்டு வேலை செஞ்ச பணத்தையும் கொடுத்துவிட்டு உனக்காக நீ செஞ்சு வச்ச வேலையால் இப்போ அவன் போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கான் என்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை திட்ட இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications