பாண்டியன் ஸ்டோரில் இதை கவனிச்சீங்களா? இப்படி ஒரு சொதப்பலா? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சில சொதப்பல்கள் இருந்து வருவதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தற்போது கண்ணன் பேங்கில் கிரெடிட் கார்டில் கடன் வாங்கிவிட்டு அதை கட்ட முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் பேங்க் ஆபீஸர்ஸ் வீட்டிற்கு வந்து கண்ணனிடம் பிரச்சனை செய்து கண்ணனை அடித்து இருக்கின்றனர். அது பற்றி தான் தற்போது அதிகமாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் ஜீவா வீட்டை விட்டு வெளியேறும் போது அதிகமான ரசிகர்கள் அந்த முடிவை பாராட்டி இருந்தனர். அதைத் தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்தது என்றால் கண்ணன் ஐஸ்வர்யா கஷ்டப்பட வேண்டும் என்பதுதான்.

பாண்டியன் ஸ்டோர் கூட்டு குடும்பம் உடைபட்ட நேரத்தில் அதிகமான ரசிகர்கள் பாராட்டி வந்ததன் விளைவாகவே அந்த எபிசோடுகளும் வேற லெவலில் பிரபலமடைந்தது. அதை தொடர்ந்து தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கஷ்டப்படும் எபிசோடுகள் வந்து கொண்டிருக்கிறது அதாவது வரவுக்கு மீறி செலவு செய்ய ஐஸ்வர்யா தனக்கு கிடைத்த கிரெடிட் கார்டு மூலமாக கடன் வாங்கி வைத்துவிட்டு அந்த பில்லை கட்டாமல் நாட்களை கடத்தி வந்தார்.
இந்த நிலையில் பேங்க் ஆபீசர் தவனை மேல் தவனை கொடுத்து பார்த்து அதற்கு ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் பணத்தை கொடுக்காத போது பேங்க் ஆபீஸை வீட்டில் வீட்டில் இருக்கும் பொருட்களை தூக்கிக்கொண்டு செல்லவா? அல்லது ஐஸ்வர்யாவை தூக்கிக் கொண்டு போகவா என்று மிரட்டி இருந்தனர். அதனால் கண்ணன் அவர்களை கோபப்பட்டு அடிக்க அவர்கள் திருப்பி கண்ணனை அடித்து விட்டு சென்றிருக்கின்றார்.
கண்ணனுக்கு ஆதரவாக கதிர் பேங்க் ஆபிஸர்களை அடித்ததால் அவர்கள் கொடுத்த கம்ப்ளைன்டால் கதிர் போலீசில் கைது செய்யப்பட இருக்கிறார். இதனால் வளைகாப்பு இனி நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் சொதப்பல்கள் குறித்து நெற்றிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பேங்கில் கவர்ன்மெண்ட் வேலை பார்க்கும் கண்ணனுக்கு கிரெடிட் கார்டு வரைமுறை பற்றி எதுவுமே தெரியவில்லை. இது நம்பற மாதிரியா இருக்கு என்று ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர்.
ஏற்கனவே கண்ணன் வேலைக்கு சேர்ந்தது குறித்து அதிகமாக ரசிகர்கள் கலாய்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது கண்ணன் கலெக்சன் ஏஜென்சியில்தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு கிரெடிட் கார்டு பத்தி தெரியவில்லை. கலெக்ஷன் வாங்க வருபவர்களை பற்றி எந்த தகவல்களும் தெரியவில்லை .அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூடவா தெரியாது.
பொதுவாக பேங்க் ரூல்ஸ் படி வீட்டில் பங்க்ஷன் நடக்கும் போது கடன் வசூலிக்க செல்லக்கூடாது. துக்க நிகழ்வுகளின் போதும் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது. அதுபோல இரவு 7 மணிக்கு மேலே வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு நேரில் சென்று தொந்தரவு கொடுக்கக் கூடாது. இத்தனை ப்ராசஸ் இருக்கும்போது இதுவெல்லாம் தெரியாமல் இந்த சீரியலில் கதை எழுதி கொண்டிருக்கிறார்களா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications