வளைகாப்பை நிறுத்திய கண்ணன்.. மூர்த்தி செய்த அதிரடி.. அவமானப்படுத்திய ஜீவா.. பரபரப்பான திருப்பம்
சென்னை: கதிர் ஜெயிலில் இருக்கும் விஷயத்தை பற்றி மீனா ஜீவாவிடம் கூறுகிறார்.
கண்ணன் இனி வளைகாப்பு நடத்த வேண்டாம் என்று நிறுத்தி விடுகிறார்.

நான் பணம் வாங்கி கொடுத்தவங்களுக்கு பணம் கரெக்டா கொடுக்க வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் சித்தி மிரட்டுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 27 ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் மீனா ஜீவாவுக்கு போன் பண்ணி இங்க வரவில்லையா என்று கூப்பிட, நான் இப்ப வந்து விடுவேன் என்று சொல்ல, இங்கே வளைகாப்பு நடக்குமா? இல்லையா? தெரியல ஜீவாவை போலீஸ் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க என்று கூறுகிறார்.
ஜீவா புரியாமல் என்ன நடந்தது என்று கேட்க கண்ணன் வீட்டுச் செலவுக்காக கிரெடிட் கார்டில் லட்சக்கணக்கில் பணம் கடன் வைத்திருப்பதால் அதை கட்ட முடியாமல் இருக்க கடன்காரங்கள் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து கண்ணனையும் அடித்து விட்டு ஐஸ்வர்யாவையும் தப்பா பேசி இருக்காங்க, அதனால் கதிர் அடித்திருக்கிறார். அதான் போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க, முல்லையும் அழுதுட்டே இருக்காங்க என்று கூறுகிறார்.
ஜீவா நான் போலீஸ் ஸ்டேஷன் போய் பார்க்கிறேன் என்று கூறுகிறார். வீட்டில் ஐஸ்வர்யா அழுது கொண்டு இருக்க கண்ணன் முகத்தில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருக்க மீனா திட்டுகிறார். அப்போது போன் வர அதை எடுத்து ஐஸ்வர்யா மண்டபத்தில் இருந்து பேசுறாங்க நீ பேசு என்று கண்ணனிடம் கொடுக்க, கண்ணன் வளைகாப்பு நடக்காது எல்லாரும் வீட்டுக்கு போயிருங்க என்று கூறுகிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியான ஐஸ்வர்யாவின் சித்தி வளைகாப்பு நடக்கும் பணம் கிடைக்கும் என்று சொன்னதால்தான் நான் வட்டிக்கு பணம் வாங்கி தந்திருக்கிறேன். நான் வட்டிக்கு வாங்கி இருக்கவங்க லேசு பட்டவங்க கிடையாது. எப்படியாவது பணம் தந்துவிடு என்று சொல்ல, எல்லாமே இங்கே எதிர்பார்க்காமல் நடக்குது என்று ஐஸ்வர்யாவும் அழுது கொண்டிருக்கிறார்.
இதை தொடர்ந்து மீனா முல்லையின் வீட்டிற்கு செல்ல அங்கு முல்லை அழுது கொண்டிருக்க, முல்லையின் அம்மா மாப்பிள்ளை எதுக்காக இப்படி பண்ணினாரு என் பொண்ணு அழுது கிட்டு இருக்கா என்று சொல்ல, மீனா வளைகாப்பு பங்க்ஷனை கண்ணன் வேண்டான்னு சொல்லிட்டான் அவனால் வந்த பிரச்சனைதான் என்று நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
முல்லை அம்மா கண்ணனை திட்டிக் கொண்டிருக்க அதே நேரத்தில் கண்ணன் கதிரை பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் கண்ணனை திட்டுகின்றனர். எத்தனை பேர் தான் இப்படி வருவீங்க என்று திட்ட கண்ணன் கதிரிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு வெளியே வந்து நிற்க, அப்போது ஜீவா அங்கே வர, ஜீவாவும் கதிரிடம் போய் பேசிவிட்டு வெளியே வந்து கண்ணனை திட்டுகிறார்.

பிறகு மூர்த்தி வக்கீல் இடம் பேசிக் கொண்டிருக்கும்போது ஜீவா, அண்ணா எப்படியாவது கதிரை வெளியே எடுத்து விட வேண்டாம் என்று பேசிக் கொண்டிருக்க கண்ணனை பார்த்ததும் மூர்த்தி கோபத்தோடு இவனை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தா? எல்லாத்துக்கும் காரணமே இவன்தான் என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications