கண்ணனை வீட்டுக்கு கூட்டிட்டு போகும் கதிர்..முல்லை கேட்கும் கேள்வி..மூர்த்தி முடிவு? பரபரப்பான தருணம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மே 31 ஆம் தேதியில் இருந்து ஜூன் 3ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
ஜெயிலிலிருந்து வெளியே வந்த கதிர் கண்ணன் ஐஸ்வர்யாவை மீண்டும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருகிறார்.
இதை மூர்த்தி ஏற்றுக் கொள்வாரா என்று முல்லை கேள்வி எழுப்ப அனைவரும் பயப்படுகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோவில் ஜெயிலிலிருந்து கதிர் வெளியே வந்து விடுகிறார். நேராக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டிற்கு செல்கிறார்.
அங்கே கண்ணனிடம் வாங்குற சம்பளத்தில் பாதி காசையாவது சேர்த்து வச்சிருக்கலாம்ல? நீ என்னன்னா கடன் வாங்கி வச்சிருக்க என்று கேட்க அதற்கு கண்ணன் எனக்கு பிழைக்கவே தெரியல அண்ணே என்று பீல் பண்ணியபடி கூற, பேசாம நீங்க ரெண்டு பேரும் கிளம்பி என் கூட வாங்க என்று இருவரையும் காரில் கூட்டிக்கொண்டு செல்கிறார்.
நேராக தன்னுடைய வீட்டிற்கு வரும் கதிர் தனம் மற்றும் முல்லையை வெளியே அழைத்துக் கொண்டு வருகிறார். இருவரும் வாசலில் நிற்கும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இவங்கள நம்ம வீட்டுல இருக்க சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன் என்று கதிர் சொல்ல, முல்லை அதிர்ச்சியாகி இதுவெல்லாம் மாமாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் என்று கேட்கிறார்.
பிறகு கண்ணன் எனக்கும் பயமா இருக்கு அண்ணி என்று சொல்ல, அதையெல்லாம் பேசிக்கலாம் உள்ளே வா என்று கண்ணன் கையைப் பிடித்து வீட்டிற்குள் கூட்டி வர அடுத்த சிறிது நேரம் கழித்து மூர்த்தி வீட்டிற்குள் வருகிறார். அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவை தனியாக ரூமிற்கு கூட்டிக் கொண்டு வந்து விடுகிறார். இனி மூர்த்தி எடுக்கப் போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டுக்குள் சேர்க்கக்கூடாது என்றும், கடனை அடைக்க ஐஸ்வர்யா போடும் புது பிளான் என்றும் கண்டிப்பா கதிரும் தனமும் இருக்கிற வரைக்கும் கண்ணனும் ஐஸ்வர்யாவும் வாழ்க்கையில் உருப்பட போவதில்லை என்றும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications