பாண்டியன் ஸ்டோர் 2வில் இதனால் தான் நடிக்கல.. விஜய் டிவியில் நேரடியாகவே கேட்டாங்க.. சுஜிதா ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதல் பாகத்தில் தனம் கேரக்டரில் நடித்த நடிகை சுஜிதா எதனால் இரண்டாவது சீசனில் தான் நடிக்கவில்லை என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தன்னிடம் விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து பல்வேறு விஷயங்களை கூறினார்கள். ஆனாலும் தான் அந்த சீரியலில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று அதற்கான காரணம் பற்றி பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் குழந்தை நட்சத்திரங்களாக சீரியல் மற்றும் சினிமாக்களில் அறிமுகம் ஆகி இப்ப வரைக்கும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகை சுஜிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் பாக்கியராஜின் மகனாக சுஜிதா தான் நடித்திருந்தார்.

குழந்தையாக இவர் பிறந்து 45 நாட்களுக்குள்ளே இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இப்ப வரைக்கும் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு இவர்தான் செஃப் ஆப் த வீக் பட்டத்தையும் வென்றிருக்கிறார். அதே நேரத்தில் ஐந்து வருடத்திற்கு மேலாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டரில் நடித்திருந்தார்.
ஆனால் அந்த சீரியல் முடிந்த பிறகு இவர் இரண்டாவது சீசன் தொடங்கப்படும் போது ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்து வந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மட்டும் தான் இவர் நடிக்கவில்லை மற்ற சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் தான் எதற்காக இரண்டாவது பாகத்தில் நடிக்கவில்லை என்று பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் முதல் பாகத்தில் நான் நடிக்கும்போது நான் தான் அந்த வீட்டில் மூத்த மருமகள் எனக்குப் பிறகு என்னுடைய கொழுந்தன்மார்களும் தங்கைகளும் தான் வருவார்கள். ஆனால் இரண்டாவது பாகத்தின் கதையை வேறு, நான் அங்கு அம்மாவாக நடிக்க வேண்டிய நிலை இருந்தது. எனக்கு மகன்கள் இருப்பது போன்று கதை இருந்தது. அதிலும் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்று கதை இருக்கிறது.
இதில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என்று நினைத்தேன். அதற்கு சேனல் தரப்பிலிருந்து என்னிடம் உங்களுக்காக கதையை வேண்டும் என்றால் மாற்றிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். ஏற்கனவே ஐந்து வருடமாக ஒரே கதையில் நடித்து விட்டோம். அதனால் இனி ஒரு மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனாலும் சேனல் தரப்பில் இருந்து எனக்காக பல சலுகைகள் செய்வதாக சொன்னார்கள்.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் பெயரை கூட மாற்றிவிடுகிறோம் உங்கள் கேரக்டர் பெயரை அந்த சீரியலில் வைத்து விடுகிறோம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு தனம் மற்றும் மூர்த்தி ஜோடி போல மீண்டும் ஒரு ஜோடியை கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள் அது எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. அதனால் தான் நான் அந்த சீரியலில் நடிக்கவில்லை. சேனல் தரப்பில் இருந்து நேரடியாக என்னிடம் பல சலுகைகளை சொல்லி மீண்டும் என்னை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் நான் விடாப்பிடியாக மறுத்துவிட்டேன் என்று அந்த பேட்டியில் சுஜிதா பேசியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications