நண்பர் வீட்டில் ஹோம் டூரில் துப்பாக்கி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதாவிற்கு வந்த பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டரில் பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை சுஜிதா சமீபத்தில் ஒரு ஹோம் டூர் வீடியோ ஒன்றை தன்னுடைய youtube சேனலில் வெளியிட்டு வந்த நிலையில் அது இப்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி இப்போது சீரியல் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் நடிகை சுஜிதா சின்னத்திரையில் பெரிய அண்ணி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் பல சீரியல்களில் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டர் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

Television

இந்த நிலையில் தான் சுஜிதா "மருதமலை அடிவாரத்தில் ஒரு ஹோம் டூர்" என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதுதான் இப்போது அவருக்கு பிரச்சனையாக அமைந்திருக்கிறது. நடிகை சுஜிதா கதை கேளு கதை கேளு என்ற youtube சேனல் வைத்திருக்கிறார். அதில் தன்னுடைய மகனோடு சேர்ந்து பல குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு பயனுள்ள பல கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த சேனலில் தன்னுடைய ஹோம் டூர் வீடியோக்கள் மற்றும் தன்னுடைய சொந்த ஊர் மற்றும் சுற்றுலா இடங்கள் பலவற்றையும் வீடியோக்கள் ஆக சுஜிதா வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தான் சமீபத்தில் அவர் மருதமலை அடிவாரத்தில் என்று ஒரு ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோவில் தன்னுடைய நண்பர் ஒருவருடைய வீட்டை சுற்றி காட்டி இருக்கிறார். மலை அடிவாரத்தில் இருக்கும் அந்த வீட்டில் இயற்கை காற்று மற்றும் பல வேலைபாடு அமைந்த பல்வேறு பொருள்கள் பற்றி பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது சுஜிதா அங்கிருந்த இரண்டு துப்பாக்கிகளை பற்றி விசாரித்திருக்கிறார். அதுதான் இப்போது இவருக்கு சிக்கலை தேடி தந்திருக்கிறது. துப்பாக்கி குறித்து அந்த நண்பரிடம் சுஜிதா கேட்டதற்கு அவர் இது ஒரிஜினல் துப்பாக்கி தான் ஏர் ரைபிள் வகையை சார்ந்தது என்பதால் இதற்கு உரிமம் தேவை இல்லை என்றும் பதில் அளித்திருக்கிறார். அந்தத் துப்பாக்கியில் வெறுமனே ஏர்கன்ஸ் குண்டு போட்டு லோடு செய்து டார்கெட் பிக்ஸ் பண்ணி சுஜிதா ஒரு இடத்தை நோக்கி சுட்டு இருக்கிறார்.

அதையும் அந்த வீடியோவில் இணைத்திருக்கிறார். இந்த வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களிலே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு துப்பாக்கிகளும் மெரினா பீச்சில் பலூன்கள் சுடும் துப்பாக்கிகள் போல இருந்தாலும் இது வனப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏர்கன் துப்பாக்கிகள் வைப்பதற்கு அனுமதிகள் தேவை இல்லை என்றாலும் காட்டு பகுதியில் ஏற்கனவே வன விலங்குகளுக்கு அச்சுறுதல் ஏற்பட்டு வரும் நிலையில் இது உண்மையான ஏர்கன் துப்பாக்கிகள் தானா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சுஜிதா தான் துப்பாக்கி வைத்து சுட்ட காட்சிகள் எல்லாம் இப்போது அவர் வெளியிட்ட வீடியோவில் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனாலும் அவர் வீடியோ வெளியிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே அது சிலரால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் இப்படித்தான் ஒரு ஹோம் டூர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் அதில் அவர் வளர்த்த கிளி வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அனுமதி வாங்காமல் கிளி வளர்த்ததற்காக அந்த நேரத்தில் ரோபோ சங்கருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது சுஜிதா விஷயத்தில் என்ன நடக்கப்போகிறது என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+