Pandian stores serial: முல்லையை சீண்டிப் பார்க்கும் கதிர்...! அட முல்லையும் பொஸசிவ் ஆகிறாளே!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல குடும்ப பாங்கான சீரியல். எந்த சண்டை சச்சரவும் இருக்காது. அப்படியே இருந்தாலும் உடனே காணாமல் போயிரும்.
முல்லை ஜீவாவுக்கு என்று இருந்த நிலையில்,ஜீவா மீனாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான். அதனால், கதிருக்கு முல்லையை கட்டி வச்சுடறாங்க. இருவருக்கும் மனசுக்கு பிடிக்காமலிருந்து இப்போதுதான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஆரம்பிச்சு இருக்காங்க.
இந்த சமயத்தில் முல்லையை சீண்டிப் பார்த்து ரசிக்கிறான் கதிர். ராத்திரி திடீர்னு ஒரு பையுடன் வீட்டுக்கு வருகிறான்.

பை எல்லாம்
என்னங்க புதுசா பையில் என்னவோ வாங்கிட்டு வந்து இருக்கீங்க.அதிலென்ன இருக்குன்னு கேட்கிறாள் முல்லை. அதான் நாளைக்கு அக்கா பொண்ணு .வருதில்லை..அவளுக்கு அல்வா வளையல்னா ரொம்ப பிடிக்கும். அதான் வாங்கிட்டு வந்தேன்னு சொல்ல, எரிச்சலாகி விடுகிறாள் முல்லை.

நீ சாப்பிட்டுடாதே
அப்புறம் அவளுக்கு அல்வா பிடிக்கும்.அது எனக்கு பிடிக்கும். அதனால அல்வா வாங்கிட்டு வந்திருக்கேன். நீ எடுத்து சாப்பிட்டுட போறேன்னு வம்புக்கு இழுக்கிறான். இன்னும் கடுப்பான முல்லை.. ஏங்க..எனக்கு அல்வா எல்லாம் பிடிக்காதுங்க...நான் சாப்பிடவும் மாட்டேன்னு சொல்றா கடுப்பில். ஆனால் ,அவளுக்கு பிடிக்கும்... அவளுக்கு அல்வா பிடிக்கிறது எனக்கும் பிடிக்கும்னு மறுபடியும் சொல்றான்.

நான்தான் அவளுக்கு
சின்ன வயசுல அவ தண்ணின்னா பயப்படுவா. நான்தான் அவளைத் தூக்கி தண்ணியில போட்டு நீச்சல் கத்துக் குடுத்தேன்னு சொல்றான்.. அப்புறம் சைக்கிள் ஓட்ட கத்துக் குடுத்தேன்..அது ஒரு காலம்னு இவன் சொல்ல.. ஏங்க தூங்குங்க.. என்னிக்கும் இல்லாம இன்னிக்கு இவ்ளோ பேசறீங்கன்னு முல்லை சொல்ல.. அக்கா பொண்ணு வர்ற சந்தோஷத்துல தூக்கம் வரலேன்னு சொல்றான்.

வடை பாயசம்
பூண்டு சட்னி.. அப்புறம் அந்த வடை பாயசம் எல்லாம் ரெடியான்னு கேட்கறான் கதிர். எல்லாம் பண்ணியாச்சுங்க. எங்கே அந்த பாயாசம்னு பார்த்து ருசி பார்க்கிறான். இவள் பாயசத்தை எடுத்து வைக்கலாம்னு பாத்திரத்தை எடுக்க..எதுக்கு தொடறேன்னு கேட்கிறான். இல்லைங்க அதை எடுத்து வைக்கலாம்னுதான் எடுத்தேன்னு சொல்றா முல்லை.

பொண்ணுக்கும் அக்காவுக்கும்
இதோ பாரு யாருக்கும் இது இல்லை.அக்காவுக்கும், அக்கா பொண்ணுக்கும்தான் இது. யாரும் தொடக்க கூடாதுன்னு கதிர் ரொம்ப சீண்ட ஏங்க பாயாசம் செய்த்தவங்க கூட சாப்பிட கூடாதான்னு கேட்கிறாள். ஆமாம்.. சொல்லிப்புட்டேன்னு அவன் போக, இவளுக்கு வந்த ஆத்திரத்தில் பாயாசத்தில் உப்பை அள்ளிக் கொட்டுகிறாள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications