பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி நாள் எபிசோட்.. இப்ப கூட இப்படியா ஆகணும்? தனம் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அக்டோபர் 28ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இந்த சீரியலின் கடைசி நாள் எபிசோடு இன்று தான். இன்றுடன் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையிலும் கடைசி நேரத்தில் தனம் வழக்கம்போல வீட்டில் நாட்டாமை செய்கிறார்.

அதோடு இனி எல்லாருடைய பிசினஸையும் அவர்களே பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எல்லோரும் பொங்கல் வைப்பதற்காக கோவிலில் நிற்கின்றனர். அப்போது முல்லை தன்னுடைய அம்மாவிடம் எதுவும் தேவை இல்லாம பேசிடாத என்று சொல்லி கூட்டிட்டு போகிறார். அங்கு தனத்தின் அம்மா வழக்கம் போல முல்லையின் அம்மாவிடம் சண்டைக்கு மல்லு கிட்ட அப்போது முல்லையின் அம்மா அமைதியாக இருக்கிறார்.
இதை பார்த்து ஆச்சரியமான மீனா, முல்லையிடம் உங்க அம்மா மாதிரி இருக்கிற வேற யாரையாவது இங்க கூட்டிட்டு வந்துட்டீங்களா? என்று கேட்கிறார். அதற்கு எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து எல்லோரும் பொங்கல் வைக்கும் போது ஏற்கனவே மூடிய சூப்பர் மார்க்கெட்டை மீண்டும் திறப்பதற்கு பெர்மிஷன் கிடைத்துவிட்டது என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
அதோடு மீனாவின் அப்பா ஜனார்த்தனன் சொத்து பத்திரத்தை ஜீவாவிடம் கொடுத்து இனி நீங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேசுகிறார். அதற்கு ஜீவா என் கஷ்டங்களில் என் கூடவே இருந்தது மீனாதான். மீனாதான் என்னுடைய சொத்து எனக்கு வேற எதுவும் வேண்டாம் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து தனம் எல்லார் முன்னாடியும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப் போறேன், அதாவது இனிமேல் வீட்டுக்குள்ள எல்லாரும் ஒன்றாய் இருந்தாலும் அவங்க அவங்க பிசினஸை அவங்களே பார்த்துக்கட்டும். ஜீவா சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக்கட்டும். மாமா கடையை பார்த்துக்கட்டும். கதிர் ஹோட்டலை பாத்துக்கட்டும்.

கண்ணனுக்கு பேங்க் வேலை இருக்கு அதை அவன் பார்த்துக்கிடட்டும். அதுபோல இனி அவங்கவங்க விஷயத்தில் அவங்களே முடிவெடுக்கட்டும் என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா கண்ணனுக்கு அனுப்புவதற்காக எல்லோரோடும் சேர்ந்து வீடியோ எடுக்கிறார். இப்படியாக சீரியல் இனிதே முடிவடைகிறது.
இந்த சீரியலை நீங்க எவ்ளோ மிஸ் பண்ணுறீங்க என்பதை கமெண்ட்ல்ல சொல்லுங்க. இல்ல இந்த சீரியல் ஒரு வழியா முடிவுக்கு வந்ததால் நீங்கள் சந்தோஷப்படுறீங்களா? அதையும் சொல்லுங்க..












Click it and Unblock the Notifications