பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 “தங்கமயில்” வீட்டில் விசேஷம்.. கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாவது பாகத்தில் தங்கமயில் கேரக்டரில் நடிகை சரண்யா துரோடி நடித்து வருகிறார். இவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முதல் வரலட்சுமி விரதத்தை கொண்டாடி இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
செய்தி வாசிப்பாளராக இருந்த சரண்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லையே என்ற சீரியல் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த சீரியலில் டாக்டர் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் பசை போல ஒட்டிவிட்டார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் அது விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

இது இவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் தங்கமயில் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் அறிமுகமாகும் போது இவர்தான் இந்த சீரியலில் வில்லியா? என்ற கேள்விகள் எழுந்தது. சீரியல் வெளியான பிறகு இவர் வில்லியா கதாநாயகியா அல்லது அப்பாவி போல நடிக்கிறாரா? அல்லது அவர் உண்மையான அப்பாவி தானா என்று ரசிகர்கள் குழப்பம் அடையும் கேரக்டரில் இவர் இருந்து வருகிறார்.

சமீபத்தில் கூட தங்கமயில் ஹனிமூனுக்கு ரூம் புக் செய்ததில் 5000 அட்வான்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் இதுதான் முழு தொகை என்று பாண்டியன் தங்கமயில் புகழ்ந்து சொல்கிறார். ஆனால் அவர் கொடுத்தது அட்வான்ஸ் தான் மீதம் தொகை கொடுக்க வேண்டும் என்ற உண்மை சரவணனுக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் கதிர் சரவணனுக்கு பணம் கொடுத்து உதவி இருக்கிறார். இது பாண்டியனுக்கு தெரியாமல் இருக்கும் நிலையில் இது பற்றிய உண்மை தெரிய வரும்போது வீட்டில் பெரிய பூகம்பம் நடிக்கும்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை தங்கமயில் கொடுத்திருக்கிறார். அதாவது தங்கமயில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் சரண்யா துரோடி தான் வரலட்சுமி விரதம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். சரண்யாவிற்கு திருமணமானதே பலருக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு நான்கு வருட திருமண வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாக பதிவிட்டு இருந்தார்.
இப்போது தான் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக கொண்டாடிய வரலட்சுமி விரதம் என்று கலுத்தில் மஞ்சள் கயிறோடு நெற்றியில் குங்குமத்தோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர். சீரியல் நடிகைகள் கூட இறுதியில் உங்களுடைய மஞ்சள் கயிற்றை நாங்கள் பார்த்து விட்டோம் என்று கிண்டலாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய திருமண புகைப்படங்களை சரண்யா இதுவரைக்கும் வெளியிடவில்லையே என்று ரசிகர்கள் அந்த புகைப்படங்களையும் அப்படியே தட்டி விடலாம் என்றும் கூறி வருகிறார்கள். சரண்யா ராகுல் என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் பல வருடங்களாகவே அவர்களோடு ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அப்போதே ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவர் தங்களுக்கு திருமணம் ஆனதை சொல்லவில்லை. தற்போது தான் அந்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார். அவருக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications