தனத்தால் நெஞ்சு வலியில் மூர்த்தி.. கண்ணன் சொன்ன பதில்.. கோபத்தில் குடும்பத்தினர்.. எதிர்பாராத முடிவு
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலின் செப்டம்பர் நான்காம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் மொத்த குடும்பத்தின் முன்பும் தனத்திற்கு தான் மார்பக புற்றுநோய் இருக்கிறது என்ற உண்மையை ஐஸ்வர்யா சொல்லிவிடுகிறார்.

அதை கேட்டு அதிர்ச்சியான மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்துவிட, மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா நான் சொன்னது எல்லாமே உண்மைதான் என்று சொல்ல, அதற்கு மீனா முதல்ல நீ உள்ள போ. லைக்குகாக தானே இப்படி எல்லாம் பேசி இருக்கா என்று மிரட்ட, அதற்கு ஐஸ்வர்யா நான் எதற்கு உள்ளே போகணும். நான் இதை லைக்குக்காகவா இதை எல்லாம் பண்ணுவேன். உண்மை எல்லாம் தெரிஞ்சு நீங்களும் முல்லை அக்காவும் தான் மறைச்சிகிட்டு இருக்கீங்க. பொய் சொல்றீங்க என்று ஐஸ்வர்யா போட்டுக் கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கு கதிர் டேய் கண்ணா உள்ளே கூட்டிட்டு போ என்று மிரட்ட, மூர்த்தி அதிர்ச்சியாகி தனத்திடம் "இந்த புள்ள ஏதோ சொல்லுதே இப்ப எல்லாரும் பொய் பேச ஆரம்பிச்சிட்டாங்க, என்ன நடக்குது" என்று தனத்திடம் கேட்க, அதற்கு கதிர் அண்ணன் அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல நீங்க முதல்ல பயப்படாதீங்க என்று ஆறுதல் சொல்ல, அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி அவா ஏதோ உளறிக்கிட்டு இருக்கா. அவ சொல்ற பேச்சை நம்பிகிட்டு நீ கேள்வி கேட்காத அண்ணே என்று சொல்கிறார்.
அதற்கு ஐஸ்வர்யா மாமா நீங்க எவ்வளவு தான் கேட்டாலும் அக்கா உண்மையை சொல்ல மாட்டாங்க. ஏன்னா அக்காக்கு தான் மார்பக புற்றுநோய் இருக்கு என்று சொல்கிறார். அதற்கு மீனா ஐஸ்வர்யா கொஞ்சம் அமைதியா இரு. எதுவும் பேசாத என்று சொல்ல, நான் நல்லது நினைச்சு ஒரு விஷயம் பண்ணா எல்லாரும் என்ன குற்றம் சொல்றீங்களா? என்று கேள்வி கேட்க அந்த நேரத்தில் மூர்த்திக்கு தலை சுற்றுகிறது.

அதற்கு தனம் மாமா எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்லா தானே இருக்கிறேன் என்று சொல்ல, தனத்தின் கையை தன் தலையில் தூக்கி வைத்து என் மேல சத்தியமா சொல்லு உனக்கு ஒன்னும் இல்லல்ல என்று மூர்த்தி கேட்க, தனம் டக்கென்று கையை எடுத்து விடுகிறார். அதை பார்த்ததும் அதிர்ச்சியான மூர்த்தி மயக்கம் போட்டு கீழே விழுகிறார். பிறகு எல்லோரும் தண்ணீர் தெளித்து அவரை தனி அறையில் படுக்க வைக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து கண்ணன் நீங்க இவ்வளவு கஷ்டத்துல இருக்கும்போது நான் வேற உங்களுக்கு கஷ்டமே இல்ல கஷ்டம் கொடுத்திருக்கேன் என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணி என்று கையெடுத்து கும்பிட்டு அழுது கொண்டிருக்க ஜீவா என்கிட்ட கூட இதை பற்றி ஒரு வார்த்தை சொல்லணும்னு உங்களுக்கு தோணல என்று கேட்க, அதைத்தொடர்ந்து குடும்பம் மொத்தமும் தனத்திடம் என்ன தனம் ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்று கேட்டுக் கொண்டிருக்க நான் நல்லாத்தான் இருக்கேன் என்று தனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அறையில் இருந்த மூர்த்தி மீண்டும் எழுந்து வந்து தனத்திடம் பேச, தனம் எனக்கு கேன்சர் வந்தது உண்மைதான். அதற்கு ஆபரேஷன் செய்ததும் உண்மைதான். கேன்சர் வந்ததில் நான் என்ன முதல் ஆளா? உலகத்துல எத்தனையோ பேருக்கு கேன்சர் வந்து இருக்கு. அதில் எத்தனை பேர் குணமாகி நல்லாத்தான வாழ்ந்துட்டு இருக்காங்க. அதே மாதிரி நானும் குணமாகத்தான் போறேன். அவ்வளவுதான். நான் சீக்கிரமா குணமாக்குவேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications