உண்மை தெரிந்து மூர்த்தி சொன்ன வார்த்தை.. ஆடிபோன ஜீவா.. வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்த தனம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் செப்டம்பர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் மொத்த குடும்பத்திற்கும் தனத்திற்கு தான் மார்பக புற்றுநோய் இருக்கிறது என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் தனத்திற்கு கேன்சர் என்பதை தெரிந்த மூர்த்தி அதிர்ச்சியோடு தனத்திடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மூர்த்தி அழுது கொண்டே இருப்பதை பார்த்து அதெல்லாம் ஒன்றுமில்ல மாமா எனக்கு சீக்கிரமா சரி ஆகிடும். ஆபரேஷன் செய்து கட்டியெல்லாம் எடுத்தாச்சு மாமா நீங்க கவலைப்படாம இருங்க என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஆனாலும் மூர்த்தி அழுது கொண்டே இருப்பதை பார்த்து கோபமான தனம் நீங்க தானே எனக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். நீங்களே இப்படி இருந்தா நான் என்ன பண்றது. இதனால் தான் நான் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னது. நீங்க இப்படி அழுதுட்டு இருந்தா. நான் எங்கேயாவது போயிருந்தேன் என்று கிளம்ப, அதற்கு மூர்த்தி வேண்டாம் இனி நான் அழ மாட்டேன் என்று என்று சொல்லிக் கொண்டிருக்க, மீனா எல்லோரும் சிரிங்க நம்ம சந்தோஷமா இருந்தா தான் அக்காவும் சந்தோஷமா இருப்பாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தனத்தின் அண்ணனும் அண்ணியும் எல்லாம் சரியாயிடும். உனக்கு ஏதாவது தேவை என்றால் எங்களை கூப்பிடு என்று சொல்லிவிட்டு கிளம்ப அதை தொடர்ந்து முல்லையின் அப்பா கிளம்புகிறார். அவரைத் தொடர்ந்து மீனாவின் பெற்றோரும் உடம்பைப் பார்த்துக்கோ தனம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகின்றனர்.
அப்போது இத்தனை நாட்களாக எதுவுமே எங்ககிட்ட சொல்லாம மாத்திரை மருந்து நீங்களா சாப்பிட்டுகிட்டு எவ்வளவு கஷ்டத்தை தாங்கிக்கிட்டு இருந்திருக்கீங்க என்று கண்ணன் கேட்க, அதற்கு ஐஸ்வர்யா அது மட்டுமல்ல நாம இத்தனை நாளா தனம் அக்கா குழந்தைக்கு அவங்க தான் பால் கொடுத்து கொண்டு இருந்ததாக நினைச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா இத்தனை மாசமாக முல்லை அக்கா தான் யாருக்கும் தெரியாம அந்த குழந்தைக்கு பால் கொடுத்துட்டு இருந்திருக்காங்க என்று சொல்ல, முல்லை அதெல்லாம் பெரிய விஷயமா அது என்னுடைய குழந்தை தானே என்று சொல்கிறார்.
நான் செஞ்சது பெரிய விஷயம் இல்ல. உண்மை தெரிஞ்சு அக்காவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக சம்மதிக்க வைத்து ஆபரேஷன் செய்து முடிக்க வைத்தது மீனா அக்கா தான். அவங்க தான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க என்று சொல்ல, தனம் முல்லையையும் மீனாவையும் நான் ரொம்பவே பாடா படுத்திட்டேன். அவங்க ரெண்டு பேரும் இல்லை என்றால் என்னால் ஆபரேஷன் பண்ணி இருக்க முடியாது என்று சொல்கின்றனர்.
இதையெல்லாம் கேட்டு ஜீவா மீனாவை ஆச்சரியப்பட்டு பார்க்கிறார். அதற்கு மீனா என்னாச்சுடா ஏன் இப்படி பாக்குற என்று கேட்க, இவ்வளவு பெரிய உண்மை திடீரென தெரிய வந்திருக்கு அதிலிருந்து வெளியே வர கொஞ்சம் நேரம் ஆகும் என்று சொல்ல, ஐஸ்வர்யாவுக்கு இன்னைக்கு தான் விஷயம் தெரியும். முதல் முதலில் ஐஸ்வர்யா இன்னைக்கு போட்ட வீடியோவால்தான் நல்லது நடந்திருக்கு என்று அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த மீனா, ஐஸ்வர்யா, முல்லை என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
அதைத் தொடர்ந்து எல்லோரும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க ஜீவா பீல் பண்ண அதற்கு கதிர் அடுத்ததாக என்ன பண்ணனும் எப்படி அண்ணியை இதிலிருந்து மீட்டு கொண்டு வரலாம் என்று யோசிப்போம் என்று சொல்கிறார். அதற்கு மூர்த்தி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தனம் பக்கம் நின்றாலே அவளை இதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து விடலாம் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications