Pandian Stores Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் செல்ஃபி... முல்லைக்கும் கதிருக்கும் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிங்க ஜாலியா செல்ஃபி.. எடுத்துக்கறாங்க... இந்த முல்லைக்கும் கதிருக்கும் என்ன ஆச்சு?

முல்லைக்கும் ஜீவாவுக்கும்தான் முதலில் கல்யாணம் ஆவதாக இருந்தது. ஜீவா மீனாவை காதலிச்சதால முல்லைக்கு கதிரை கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.

பிடிக்காத கல்யாணம்.. இருவருமே முகத்தைத் திருப்பிக்கறதுன்னு இருந்த நேரத்தில்தான் முல்லையும்,கதிரும் கொஞ்சம் கொஞ்சமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஆரம்பிக்கறாங்க.

கதிர் முல்லை

கதிர் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் ரெண்டு பேருக்கான கதைதான் சீரியல் விரும்பிகளால் ரொம்ப ஆர்வமா பார்க்கப்படுது. என்னவோ நல்லா ஜாலியா போயிகிட்டு இருந்த அவங்க ஊடல் வாழ்க்கையில இப்போ என்னாச்சோ புயல் வீசும் அறிகுறி.

குடிச்சுட்டு வரான்

குடிச்சுட்டு வரான்

திடீர்னு கதிர் குடிச்சுட்டு ராத்திரி லேட்டா வீட்டுக்கு வர்றான். முல்லை காத்திருந்து கதவைத் திறக்கறா. லேட்டா வர்றதா இருந்தா எனக்கு போன் பண்ண கூடாதா.. எல்லாரும் தூங்கிட்டாகன்னு முல்லை சொல்ல, நீயும் தூங்கி இருக்க வேண்டியது தானேன்னு கேட்கிறான். நானும் தூங்கிட்டா கதவை யாருங்க தொறப்பாக.. விட்டத்தை பார்த்துகிட்டே உட்கார்ந்து கிடேந்தேன்னு சொல்றா.

கஷ்டத்தை உனக்கு

கஷ்டத்தை உனக்கு

இனிமே இந்த கஷ்டத்தை உனக்கு தர மாட்டேன்.. கண்ணன்கிட்டே சொல்லிட்டு போறேன்.அவன் கதவைத் திறந்து விடுவான்னு சொல்றான். பிறகு பேச ஆரம்பிக்கிறான்..எனக்கும் உனக்கும் பிடிக்காமதான் கல்யாணம் நடந்துச்சு. நான் என்னை எவ்வளவோ உனக்காக மாத்திக்கிட்டேன் .இப்போதும் என்னை பிடிக்கலேன்னா என்ன வீட்டில் யார்கிட்டேயும் நீ நடிக்க வேணாம். நீ உன் இஷ்டத்துக்கு வாழலாம். இந்த வீட்டில் கூட இருக்க இஷ்டம் இருந்தா இரு. இல்லேன்னா உன் விருப்பப்படி வாழலாம்னு சொல்லிட்டு வெளியில போயிடறான்.

இவுகளுக்கு பிடிக்கலையா

இவுகளுக்கு பிடிக்கலையா

அவன் பேசியதை புரிஞ்சுக்காத முல்லை...என்ன இவுக நடிச்சாகளா? என்னை இவுகளுக்கு பிடிக்கலையா...என் இஷ்டப்படி வாழலாம்னு சொன்னா என்ன அர்த்தம்... இத்தனை நாள் என்னை பிடிக்காம இருந்தவுக கிட்டேயே நான் பல்லை இளி ச்சுகிட்டு நின்னேன்னு புலம்பறா அழறா.

ஆசையா செல்ஃபி

ஆசையா செல்ஃபி

இங்கே அண்ணன் தம்பிங்க மூணு பேரும் மீனா பிறந்த வீட்டுக்கு படிச்ச சர்டிஃபிகேட் வாங்கப் போனவ வரவே இல்லை. இதை நினைச்சு ஜீவாவிடம் கவலைப்பட அண்ணன் நம்ம குடும்பத்தை பிரிச்சுருவாங்களோன்னு பயமா இருக்குடான்னு சொல்றார். அண்ணே நம்மை யாராலும் பிரிக்க முடியாதுண்ணே...வாண்னே நாம் செல்ஃபி எடுத்துக்கலாம்னு சந்தோஷமா போட்டோ எடுத்துக்கறாங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+