ஜெயிலுக்கு போகும் கதிர், ஜீவா..கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை.. இப்படி ஆகிடுச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறதாம்.
அதாவது இந்த சீரியல் இந்த மாதத்தின் கடைசியோடு முடிவுக்கு வர இருக்கிறது என்று செய்திகள் வலம் வந்தது. ஆனால் இப்போது அதில் சீரியல் தரப்பில் இருந்து ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கதிர் மற்றும் ஜீவா பிரசாந்தின் சூழ்ச்சியால் ஜெயிலுக்கு போகின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் பல வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் நல்ல நிலையில் இருக்கும் இந்த சீரியல் கதையில் சமீபத்தில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
அதே நேரத்தில் இத்தனை வருடங்களாக இந்த சீரியல் கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்போது அடுத்தடுத்து பிரச்சனைகள் மட்டுமே சீரியலில் வந்து கொண்டிருந்தது. அது ரசிகர்களுக்கு சலிப்பு தட்ட வைத்து இருந்தது. இதனால் சீரியல் தரப்பிலிருந்து இந்த சீரியல் இந்த மாதத்தில் இறுதியோடு முடிவுக்கு வந்து அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடங்கப்படும் என்ற தகவல்கள் வெளியானது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் எல்லோருக்கும் குழந்தைகள் பிறந்து விட்டது. இனி இந்த குழந்தைகள் வளர்ந்து அவர்களின் பாசத்தை வைத்து கதை நகரும் என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சீரியல் நடிகர்களுக்குள் சில மனக்கசப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. ஒரு சிலர் இரண்டாவது சீசனில் தொடர்வார்களா? என்றும் பல்வேறு கேள்விகளும் எழும்பி வந்தது.
ஆனால் தற்போது இந்த சீரியல் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு விரிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஜீவாவிற்கும் மீனாவின் அப்பாவிற்கும் ஏற்பட்ட மனக்கசப்பு அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்த வகையில் ஜீவாவின் அப்பா தன்னுடைய இரண்டாவது மருமகன் பிரசாந்தை நம்பி தன்னுடைய பிசினஸ் எல்லாவற்றையும் கொடுக்க அவர் மொத்தமாக எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டார்.
இந்த நிலையில் இதுவெல்லாம் தெரிந்ததால் அவரை அடிக்கப் போக அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தில் ஜனார்த்தனனின் கணக்குப்பிள்ளை பிரசாந்த்தை கீழே தள்ளி விடுகிறார். அவர் தலையில் அடிபட்டு இறந்து போவது போன்று கிடக்கிறார். அதை பார்த்து கோபமான ஜனார்த்தனன் பிரசாந்தை பார்க்க போகிறார். ஆனால் பிரசாந்த் அவரை தடுத்து அந்த கத்தியால் மாமனாரை குத்தி விடுகிறார்.
அதோடு தன்னுடைய வயிற்றிலும் காயத்தை ஏற்படுத்திக்கொண்டு போலீசாரிடம் தன்னையும் தன்னுடைய மாமனாரையும் இப்படி செய்தது ஜீவா மற்றும் கதிர் தான் என்று சொல்லிக் கொடுக்க இதனால் போலீஸ் அவர்கள் இருவரையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றுக்கொண்டு போகின்றனர். ஏற்கனவே ஜீவாவும் கதிரும் ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்று அவரையும் அவருடைய மனைவியையும் எச்சரிக்கை செய்துவிட்டு வந்திருந்தனர். இதனால் இவர்கள்தான் செய்திருப்பார்களா? என்று நினைத்த மீனா எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அப்படியே அதிர்ச்சியில் நிற்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவர் மீதும் விழுந்த கொலை வழக்கில் இருந்து இவர்களை மீட்டெடுக்கும் கதை இன்னும் கொஞ்சம் நாட்கள் நகரப் போகிறதாம். அதோடு இதுவரைக்கும் மீனா ஜீவாவிற்கு பக்கபலமாக இருந்து வந்தார். ஆனால் இப்போது தன்னுடைய அப்பா பக்கம் மாறப் போகிறாரா? அல்லது ஜீவா மீது நம்பிக்கையில்லாமல் மீனா இருப்பாரா என்பது கேள்வியாக இருக்கிறது.
அதே நேரத்தில் சீரியலின் முடிவில் ஜீவாவை புரிந்து கொண்டு கடந்த உண்மைகளை எல்லாம் ஜனார்த்தனன் சொல்லி குடும்பத்தை சேர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்படியும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு இந்த கதை பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications