கிறிஸ்தவ மதமாற்றம் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பும் பரமசிவன் பாத்திமா திரைப்படம்! விமர்சனம் இதோ
சென்னை: இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில், விமல் மற்றும் சாயாதேவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'பரமசிவன் பாத்திமா' திரைப்படம் சாதி மற்றும் மத பிரச்சினைகளை நேரடியாக சொல்லும் முயற்சியில் உருவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு மலை கிராமம், சாதி சண்டையின் காரணமாக மூன்று பகுதிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், காதலர்களாக இருக்கும் விமல் மற்றும் சாயாதேவி அந்த கிராமத்தில் சில இளைஞர்களை கொலை செய்கிறார்கள். இந்த கொலைகள் குறித்து விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி இசக்கி கார்வண்ணன் உண்மையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். கதையின் மையம் இந்த ஜோடி ஏன் கொலை செய்கிறார்கள்? அதன் பின்னணி என்ன? என்பதே.
விமல் தனது இயல்பான நடிப்புடன் ஆத்திரம் மற்றும் வலியை மிக நன்கு வெளிப்படுத்தியுள்ளார். சாயாதேவி விமலுக்கு இணையாக தன்னுடைய கதாபாத்திரத்தில் உயிரோட்டத்துடன் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர் பாதிரியாராக தனது அனுபவம் தெரியும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார். இசக்கி கார்வண்ணன் (போலீஸ்), சுகுமார் (வில்லன்) மற்றும் மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை நன்கு செய்துள்ளனர்.

ஒளிப்பதிவு
பனி சூழ்ந்த கிராமப்புறங்கள் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவு மற்றும் தீபன் சக்ரவர்த்தியின் இசை படத்திற்கு தேவையான உணர்வை கொடுக்கிறது. கிராம வாழ்க்கையின் உண்மையான நிலையை வெளிப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது. முக்கிய நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தில் நன்கு பளிச்சென்றுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் இசை தொழில்நுட்ப தரம் சிறப்பாகவே இருந்தது. இருப்பினும் சில காட்சிகள் கிறிஸ்தவ மதமாற்றம் என்பதை குற்றச்சாட்டாக முன்வைக்கின்றன.
மதமாற்றம்
நேரடியாக இதுபோல கிறிஸ்தவ மதமாற்றத்தை பகடி செய்யும் காட்சிகளுடன் தமிழில் வந்த படங்கள் மிக மிக சொற்பம். அதில் பரமசிவன் பாத்திமா படமும் இணைகிறது. இது சமூகத்தில் ஒரு தரப்பினருக்கு அதிருப்தியை தரக்கூடும். ஏனெனில் இந்த காட்சிகள் பகடியை தாண்டி, நேரடி குற்றச்சாட்டுகளாகவே முன் விரிகின்றன. குறிப்பாக மனைவியின் கட்டாயத்தால் மதம் மாறியவர், சுடலை மாடன் வந்து சாமியாடும் காட்சியில், பாதிரியாரை நோக்கி கண்டிக்கும் வார்த்தைகள், மற்றும் விமல், பாதிரியாரை பார்த்து யாக்கோப்புபுரமாக ஒரு ஊரை மாற்றிவிட்டீர்கள், சுப்பிரமணியபுரத்தையாவது அதே பெயரோடு விட்டு வையுங்கள் என கூறும் காட்சியாகட்டும், ஏற்கனவே சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. எனவே இயல்பாக வலதுசாரியினர், பாஜக ஆதரவாளர்கள் இப்படத்தை பாராட்டுகிறார்கள்.
குறைகள்
திரைக்கதையில் சில இடங்களில் குழப்பம் தெரிகிறது, மேலும் சமூக பிரச்சினைகளை மிக நேரடியாக சொல்லும் முயற்சி சிலருக்கு கடுமையாகத் தோன்றலாம். மொத்தத்தில் 'பரமசிவன் பாத்திமா' சாதி, மதம் மற்றும் சமூக பிரச்சினைகளை நேரடியாக சொல்லும், உண்மையை மறைக்காத படம். இது சர்ச்சையை உறுதி செய்யும் வகையில் சமூகக் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கிறது. சினிமா ரசிகர்களிடையே விவாதத்தையும் சிந்தனையையும் ஏற்படுத்தும் இந்த முயற்சி பார்க்க வேண்டியதுதான், ஆனால் சர்ச்சையை எதிர்பார்த்து செல்லவேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications