Parasakthi: பராசக்தி பார்க்க தியேட்டருக்கு போன சிவகார்த்திகேயன்.. வாசலில் செய்தியாளர்கள் முன்பு சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த படம், இன்று காலை 6 மணிக்கு கேரளாவில் முதலில் திரையிடப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியான உடனே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
படத்தின் முதல் நாள் வரவேற்பை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், சிவகார்த்திகேயன் சென்னை சத்தியம் திரையரங்கிற்கு நேரடியாக சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "காலையிலிருந்து நல்ல ரிவ்யூக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மதுரையில் இருந்து ஒரு ரசிகர் அனுப்பிய மெசேஜை நான் இப்போதுதான் பார்த்தேன். 'இது அமரனை விட பெட்டர்' என்று மூன்று ஹார்ட் எமோஜியுடன் அனுப்பியிருந்தார். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் பேசுகையில், "ஒவ்வொரு நடிகரும் நடிக்கும்போது, இந்த இடத்தில் ரசிகர்கள் ரசிப்பார்கள், இந்த காட்சி அவர்களுக்கு பிடிக்கும் என்ற எண்ணத்துடன்தான் நடிக்கிறோம். அதே மாதிரிதான் இந்த பராசக்தி படத்தையும் உருவாக்கியிருக்கிறோம். இது நம்முடைய தமிழ் பற்று, நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதால், ரசிகர்களை இன்னும் அதிகமாக கனெக்ட் செய்யும் என்று நம்புகிறேன். மக்கள் இந்த படத்தை கண்டிப்பாக சப்போர்ட் செய்வார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து, ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்க்க போவதாகவும், அவர்களை எண்டர்டெயின் செய்ய முடிந்தது தான் தன்னுடைய மிகப்பெரிய சந்தோஷம் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பராசக்தி படத்தை பார்ப்பதற்காக சிவகார்த்திகேயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் காலை முதல் காட்சிக்கே தனியாக வந்திருந்தனர் என்பதும் ரசிகர்களிடையே கவனம் பெற்ற விஷயமாக மாறியுள்ளது. குடும்பத்தினரே முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்த்தது, படத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், சமூக உணர்வும், தமிழ் அடையாளமும் பேசும் பராசக்தி திரைப்படம், ரசிகர்களிடையே விவாதங்களையும், பாராட்டுகளையும் ஒருசேர பெற்று வருகிறது. முதல் நாள் ரிலீஸ் முடிந்ததும், இந்த படம் வருங்கால நாட்களில் இன்னும் வலுவான வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications