“ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும்” – செகண்ட் ஹாஃப்பில் இருக்கும் சம்பவம்.. கெனிஷா இப்படி சொல்லிட்டாங்களே
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் அன்-கட் வெர்ஷனாகவும், இந்தியாவில் சென்சார் குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் படமும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர்.
இந்த நிலையில், சென்னையில் நடிகர் ரவி மோகன் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுடன் பராசக்தி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். அவரை கண்ட ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரையரங்கின் முன்பு ஆள் உயர மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25-ஆவது படமான இதில், முதன்முறையாக இன்னொரு ஹீரோவுக்கு எதிராக ரவி மோகன் முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த காரணத்தாலேயே, அவர் எப்படி அந்த பாத்திரத்தை டெலிவர் செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் இருந்தது.
படத்தை பார்த்த பிறகு, ரவி மோகனின் நடிப்பு குறித்து கெனிஷா பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. அவர் பேசுகையில், "எனக்கு நேர்மையாக சொல்லணும்னா, ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும். என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. அவருக்காகவே இந்த படம் பண்ணுன மாதிரி இருக்கு. இந்த படத்துல அவர் தான் நம்பர் ஒன். குறிப்பாக செகண்ட் ஹாஃப்புல அவரை தாண்டி படமே இல்ல" என்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

கெனிஷாவின் இந்த கருத்துகள், ரவி மோகனின் வில்லன் நடிப்பு படத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருநாடன் என்ற கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ், மிரட்டலான தோற்றத்தில் ரவி மோகன் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் விசில் சத்தமும் கரகோஷமும் குறையவில்லை என்பதே முதல் நாள் ரிவ்யூக்களின் சுருக்கமாக இருக்கிறது.

படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், "திரையரங்குகளில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது. குறிப்பாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக வரும் வசனங்களை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள்" என்று தெரிவித்தார். மேலும், ஜனநாயகன் படம் ரிலீஸாகாதது குறித்த கேள்விக்கு, "அது கண்டிப்பாக வரும். இப்போதைக்கு போகட்டும் என்று விஜய் அண்ணா விட்டிருக்கிறார்" என்றும் கூறினார்.
மொத்தத்தில், பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகனின் வில்லன் நடிப்பு, அவரது கரியரில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. கெனிஷாவின் பாராட்டுகள் போலவே, ரசிகர்களும் ரவி மோகனை இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications