“எப்படி மாற்ற முடியும்?” மேடையில் நடந்தது இது தான்..! சாதி சர்ச்சைக்கு பார்த்திபன் நேரடி பதில்.. அடுத்த பஞ்சாயத்து!
சென்னை : தமிழ் சினிமாவில் வித்தியாசமான கருத்துகளால் அடிக்கடி பேசப்படும் பார்த்திபன், இந்த முறை தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால் அதற்கான விளக்கமும் அவர் தரப்பில் இருந்து வந்திருக்கிறது.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத் சிங் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், "நான் ஒரு நாயுடு பையன்... நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது" என்று கூறியிருந்தார். இந்த ஒரு வரியே சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. இது குறித்து பார்த்திபன் இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

எழுந்த கேள்விகள்
பார்த்திபன் பேசிய அந்த வீடியோ வெளியானதும், "ஏன் சாதியைக் குறிப்பிட வேண்டும்?" "இது தேவையில்லாத பேச்சு" என்று பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். தமிழ்நாட்டில் ஜாதிகள் இல்லை என்று பேசும் பார்த்திபன் அவருடைய சொந்த ஊரில் இப்போது ஜாதிகள் பற்றி பெருமையாக பேசி இருக்கிறாரே என்று சிலர் நேரடியாக அவரை குறிவைத்து கருத்துக்கள் பதிவிட்டனர்.
விளக்கம்
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பார்த்திபன் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அதில் அவர் கூறும்போது, "என் பேச்சு யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எந்த லாபமும் இல்லாமல் சில விஷயங்கள் பெரிய விவாதமாகி விடுகிறது" என்று ஆரம்பித்தார்.
பிறப்பை எப்படி மாற்ற முடியும்
தொடர்ந்து அவர், "நான் எவ்வளவு தமிழ் மீது பற்று வைத்திருந்தாலும், என் பிறப்புச் சான்றிதழை மாற்ற முடியாதுதானே. எப்படி மாற்ற முடியும்? ஏன் மாற்ற வேண்டும்? என் பிறப்பு என் பொறுப்பு அல்ல. எந்தக் குழந்தையும் இப்படி பிறக்க வேண்டும் என்று கேட்டு பிறக்காது"
என்று விளக்கம் அளித்துள்ளார்.
என் வாழ்க்கை தமிழுக்காக
அதோடு, "நான் வாக்கப்பட்டிருப்பது தமிழுக்காக. சோறு, சுகம் எல்லாமே தமிழ் தந்தது. நான் எங்கு இருந்தாலும் தமிழை பெருமையாக சொல்வேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
விழாவில் ஏற்பட்ட பதட்டம்
மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசும்போது தான் பதற்றமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். "எனக்கு தெலுங்கில் சரியாக பேச தெரியாது. அதனால் திணறாமல் ஏதாவது பேசிவிட்டு இறங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசினேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், அந்த படத்தில் அவருக்குப் பதிலாக மற்றொருவர் தெலுங்கில் டப்பிங் செய்ததாகவும், தமிழ் பதிப்பில் தான் பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "இதைக் பெரிய பிரச்சனையாக்காமல் நல்லபடியாக முடித்து விடுங்கள். தமிழ் உயர்ந்த மொழி... அதில் அன்பும் கருணையும் இருக்கு" என்று கேட்டுக்கொண்டார் பார்த்திபன்.
முடிவில்
ஒரு மேடை பேச்சாக ஆரம்பித்த இந்த விஷயம்... சமூக வலைதளங்களில் சர்ச்சையாக மாறி, இப்போது விளக்கத்துடன் முடிவுக்கு வருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. பார்த்திபன் அளித்த இந்த விளக்கம் சர்ச்சையை அடக்குமா? அல்லது விவாதம் இன்னும் தொடருமா? என்பதே தற்போது பேசப்படும் விஷயமாக உள்ளது.
-
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
நான்கு பேருக்கே தெரிந்த ரகசியம் லீக் ஆனது எப்படி? ஜனநாயகனுக்காக களத்தில் வந்த நடிகர் விஷால், ஜீவா! -
TN 2026 Review: இளைய தளபதி விஜய் தாக்கப்பட்டாரா? தநா 2026ல் கதை இதுதான்! இந்திரஜா நெகிழ்ச்சி -
TN 2026 First Review : நட்டி நட்ராஜின், அரசியல் கலந்த தநா 2026 படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ -
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி -
ஜனநாயகன் விஷயத்தில் நடந்தது இதுதான்! எல்லாமே வதந்தி! ஓபனாக உடைத்த ஜீ5 கௌஷிக் -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
"விஜய் மன்னிப்பு கேட்டே ஆகணும்".. ஒரு வார்த்தையால் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. என்ன மேட்டர்? -
விஜய் நாளை காரைக்குடியில் பிரச்சாரம்.. மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. ப்ளூ சட்டை மாறன் -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா -
"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருங்க.." புதுச்சேரி வாக்காளர்களுக்கு விஜய் வைத்த வேண்டுகோள்! -
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்!











Click it and Unblock the Notifications