பார்த்திபன் சீதா அன்பு.. நளினி ராமராஜன் புரிதல்.. நட்சத்திர தம்பதிகளின் கண்ணியம் இதுதான்.. பிரபலம்
சென்னை: திரைத்துறையில் உருகி உருகி காதலித்து திருமணம் செய்துகொண்டு, அதற்கு பிறகு கருத்து வேறுபாடுகளால் பல நட்சத்திர தம்பதிகள் பிரிந்துவிட்டனர்.. எனினும், அதில் ஒருசில தம்பதிகள் ஒருவர் மீது குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் சொல்லி கொள்ளாமல், கண்ணியம் காத்து வருகிறார்கள்.. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.. அந்தவகையில், நடிகை சீதா - பார்த்திபன் குறித்து தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருந்தார்.
Behind Cinema என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், நடிகை சீதாவுக்கு எப்படி பட வாய்ப்பு கிடைத்தது? குடும்ப பாங்கான நடிகையாகவே அவர் நடிக்க என்ன காரணம் என்பது குறித்தெல்லாம் விரிவாகவே பேசியிருந்தார்.

அதில், "ஒரு திருமண வீட்டில் பாவாடை தாவணியுடன் ஓடியாடி வேலை பார்க்கும் சீதாவை நடிகர் பாண்டியராஜன் கவனித்து, தன்னுடைய ஆண் பாவம் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்தார்.
ஆனால், தனக்கு சினிமா வேண்டாம் என்று சீதா மறுத்தும்கூட, அவரை அவரது அப்பா, கட்டாயப்படுத்தி சினிமாவில் நடிக்க வைத்தார்.. 15 வயதில் ஆண் பாவம் படத்தில் ஒப்பந்தமான சீதாவின் ஒரிஜினல் பெயர் சொர்ணபுரி சைதன்யா.. இதை மாற்றி சீதா என்று பெயர் வைத்தது பாண்டியராஜன்தான்.
ஹோம்லி கேரக்டர்கள்
பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பியில் சீதா நடித்தது, மிகப்பெரிய புகழை பெற்றுத்தரவும், உடனே ரஜினியின் குரு சிஷ்யன் படத்தில் சீதா ஒப்பந்தமானார்.. அதில் சிறிது கிளாமராக சீதா நடித்திருந்தார்.
ஆனால், பாலச்சந்தர், விசு போன்றோர் சீதாவிடம், "குடும்ப பாங்காக நடிப்பதற்கு நீ ஒருத்திதான் இப்போதைக்கு இங்கே இருக்கே.. நீயும் கிளாமர் ரோல் செய்தால் எப்படி?" என்று அட்வைஸ் செய்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், வெறும் குடும்ப பாங்கான கேரக்டரிலேயே நடித்தாராம் சீதா.
பிரிந்த பார்த்திபன் - சீதா
புதிய பாதை படம் தயாரானபோது, புதுமுக டைரக்டர், புதுமுக ஹீரோ என்பதால், பார்த்திபனுடன் நடிக்க மாட்டேன் என்றார் சீதா. ஆனால், மறுபடியும் சீதாவின் அப்பாதான், நல்ல கதை, திறமையான இயக்குனராக உள்ளார் என்று சொல்லி மகளை சமாதானம் செய்து நடிக்க வைத்தாராம். அரைகுறை மனதுடன் சீதா நடித்தாலும், அதுதான் அவரது வாழ்க்கையையே மாற்றியது.
புதிய பாதையும் தேசியவிருது பெற்றது.. இந்த படத்துக்கு பிறகு, பார்த்திபன் தன்னை விரும்புவதாக சீதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.. ஆரம்பத்தில் இந்த காதலை சீதா ஏற்காவிட்டாலும், பேசி பேசியே தன்னுடைய காதலை உணர்த்தியிருக்கிறார் பார்த்திபன்.
இறுதியில் சீதாவின் மனம் மாறியது.. தன்னுடைய அப்பாவின் அடி, உதையை வாங்கி, கடைசியில் வீட்டுக்கு தெரியாமல் பார்த்திபனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.. இதற்கு பிறகு தம்பதிக்குள் விரிசல் வந்து, இருவருமே பிரிந்துவிட்டனர்.. எனினும், பார்த்திபனை இதுவரை வன்மையாக சீதா பேசியது இல்லை" என்றெல்லாம் அதில் சீதாவை பற்றி கூறியிருந்தார்..
நளினி - ராமராஜன் கண்ணியம்
அதேபோல, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் , பிரபல சேனல் ஒன்றுக்கு தந்திருந்த பேட்டியில், "பார்த்திபன் சீதா இருவருமே அடிக்கடி கருத்தால் உரசிக் கொண்டாலும், ஒருவரையொருர் தாக்கியோ, அசிங்கமாக புகார் சொல்லியோ பேசிக் கொண்டதில்லை..
அதேபோல, என்னுடைய மிகச்சிறந்த கணவர் ராமராஜன், ஏதோ விதி எங்களை பிரித்துவிட்டது என்று நடிகை சொல்கிறாரே தவிர, இதுவரை கணவரை தவறாக பேசியதில்லை.. அதேபோல ராமராஜனும் நளினியை எங்குமே மதிப்பு குறைவாக பேசியதில்லை.. அந்தவகையில் பிரிந்த தம்பதிகளாக இருந்தாலும், நாகரீகத்தை கடைப்பிடிக்கிறார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications