மகனும் எங்களை மாதிரியே.. மூட்டை தூக்கி கூட வாழ முடியல.. அதனால் “இந்த“ வேலை.. கண்ணீரோடு பேரழகன் நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பேரழகன் திரைப்படத்தில் சினேகா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்தான் கற்பகம்.

இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்து இருந்தார் ஆனால் தற்போது திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் தன்னுடைய குடும்பம் ரொம்பவே ஏழ்மையில் இருப்பதாக கூறி இருக்கிறார்.

Perazhagan Sneha shared her situation about her children and husband

அத்தோடு தன்னுடைய குழந்தைகள் குறித்தும் கணவர் குறித்தும் தன்னுடைய நிலைமையை பிரபல சேனல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவருமே ஊனமுற்றவர்கள் போல நடித்து பல விருதுகளை வாங்கி குவித்த திரைப்படம் தான் பேரழகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் உணர்வு பூர்வமான கதைக்களமும் அதே நேரத்தில் காமெடி காட்சிகளும் பலருடைய மனதை கவர்ந்தது. அந்த வகையில் உடல் ஊனமுற்ற சூர்யா பெண் பார்க்க போகும்போது நடந்த களேபரம் பலரையும் ரசிக்க வைத்திருக்கும்.

இந்த நிலையில் அந்த காட்சிகளில் நடித்த கற்பகம் தன்னுடைய நடிப்பு வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில், எங்க குடும்பத்தில் நான் மட்டும்தான் குள்ளமாக பிறந்து விட்டேன். இதுபோல நான் குள்ளமாக இருப்பதால் என்னுடைய கணவர் ராஜாவும் குள்ளமாக இருப்பதால் அவரை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. என்னுடைய விருப்பத்தை மீறி அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்களே என்று கோபத்தில் தான் நான் இருந்தேன்.

அதனால் அவரை விட்டு பிரிந்து வந்து விடலாம் என்று கூட நினைத்தேன். பிறகு நாட்கள் செல்ல செல்ல அவருடைய உண்மையான குணத்தை பார்த்து நான் என்னுடைய மனதை மாற்றிக் கொண்டேன். அப்போது நாங்கள் இருவரும் உயரம் குறைவாக இருப்பதால் எங்களுக்கு பிறக்கும் குழந்தையும் எங்களை மாதிரியே இருக்கும் என்று பலர் கூறினார்கள். எல்லாம் விதிப்படி நடக்கட்டும் என்று நாங்கள் நினைத்தோம்.

அந்த நிலையில் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாள். ஆனால் அவள் சராசரியாக எல்லோரும் இருக்கும் உயரத்தில் இருந்தார். முதல் குழந்தை சரியாக இருப்பதால் இரண்டாவது குழந்தையும் அப்படியே பிறக்கும் என்று இல்லை. அதனால் இன்னொரு குழந்தை வேண்டாம் குடும்ப கட்டுப்பாடு பண்ணிவிடலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் வீட்டில் இருப்பவர்களின் வற்புறுத்தலினால் இன்னொரு குழந்தையும் பெற்றுக் கொண்டோம்..

இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தான். ஆனால் அவன் எங்களைப் போலவே உயரம் குறைவாக பிறந்து விட்டான்.அதுபோல நான் பேரழகன் திரைப்படத்தில் நடிக்கும் போது ரொம்பவே பயந்து போய் விட்டேன். சூர்யா சார் ரோடு என்னால் நடிக்க முடியுமா? என்று நான் பயந்து கொண்டு இருந்தேன். அந்த திரைப்படத்தில் நான் நடிக்கும் போது பலர் என்னை கிண்டல் செய்தார்கள். ஆனாலும் எனக்கு இந்த சம்பளம் வேண்டும்.

Perazhagan Sneha shared her situation about her children and husband

என்னுடைய குழந்தைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தில் நடித்து முடித்தேன். பிறகு நான் வெளியே போகும் போதெல்லாம் பலரும் "சினேகா" என்று கூப்பிடுவார்கள். இந்த நிலையில் என்னுடைய மகனின் கல்யாணத்துக்கு கூட நான் சூர்யா சார் வீட்டுக்கு சென்று அவருக்க இன்விடேஷன் கொடுத்துட்டு வந்தேன். அப்பா அவர் வீட்டில் இல்லை. ஒரு சில நாட்கள் கழித்து என்னுடைய வீட்டிற்கு அவருடைய பெயரில் ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அதற்குப் பிறகு நான் ரொம்பவே கஷ்டத்தில் இருக்கும்போது சூர்யா சாரை சந்திக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தேன். ஆனால் அது முடியவில்லை. அதுபோல சினிமா தொழில் எங்களுக்கு வாழ்க்கை கொடுத்தது. ஆனால் இப்போது அது கை விட்டு விட்டது. நடிகர் சங்கங்களும் முன்னணி நடிகர்களும் கூட எங்களை கைவிட்டு விட்டார்கள். நலிந்த கலைஞர்களாக நானும் என்னுடைய கணவரும் கஷ்டப்படும்போது கூட யாரும் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

நாங்களும் சராசரியான உயரத்தில் இருந்தால் கூட மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது அதுவும் முடியவில்லை. கடவுள் விட்டது போல நடக்கட்டும் என்று தான் நாங்கள் இப்போது துணி வியாபாரம் செய்து வருகிறேம் என்று அந்த பேட்டியில் கண்ணீரோடு உருக்கமாக கற்பகம் பேசி இருக்கிறார். இதற்கு பல ரசிகர்களும் நடிகர் சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் இந்த மாதிரி கஷ்டப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்யலாம் அல்லது இவர்களுடைய நடிப்புக்கு ஏதாவது வழி செய்யலாம் என்று கருத்து கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+