சிரிச்சிட்டு போன சீமான்.. வடக்கன் பாவங்கள்.. பரிதாபங்கள் கோபிக்கு செம தில்லு! அந்த வீடியோ டெலிட்?
சென்னை: அரசியல் தொடர்பான வீடியோக்கள் என்றால், உடனே சம்பந்தப்பட்ட கட்சியிலிருந்து போன் செய்து மிரட்டல் விடுக்கிறார்கள்..இப்படியிருந்தால் எப்படி வீடியோ பதிவிட முடியும்? வீடியோ பதிவிட்டால், அவர்களுக்கு ஒருவிதமான நெருக்கடியும் தரப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் சோஷியல் வீடியோக்களை பதிவிட்டதை வரவேற்று, வாழ்த்தியாக வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
Valai Pechu Anthanan என்ற சேனலில் பேசியிருக்கும், மூத்த பத்திரிகையாளர் அந்தணன், என் சாதி உயர்ந்தது, உன் சாதி மட்டமானது என்று சொல்லியே கொடூரமான கொலைகள் இங்கு தொடர்ந்து அரங்கேறி வருகிறது.. இப்படி ஆணவ கொலைகளை செய்துவிட்டு சிறைக்கு செல்பவர்கள் பல அவமானங்களை சந்திப்பார்கள்..
ஆணவ கொலைகளுக்கு எதிராக இங்கே சட்டம் வந்து, அனைத்தும் மாறிவிடப்போகிறதா என்ன? ஆயுள் தண்டனையை அனுபவிக்கபோகிறோம் என்று, அரிவாளால் வெட்டும்போதே தெரியும், அது தெரிந்துதான்இப்படியான குற்றங்களை செய்கிறார்கள்.
15 நாளில் ஆணவ கொலைக்கு எதிரான தண்டனை நிறைவேற்றப்படும் என்று சட்டமே கொண்டுவந்தாலும், இங்கு யாரும் பயப்பட போவதில்லை..எனவே, அடிப்படையிலிருந்தே அதாவது கல்வி பயில வைக்கும்போதே, கற்று தர வேண்டும்.. 1ம் வகுப்பிலிருந்தே சாதிக்கு எதிரான விஷயத்தை கற்றுத்தர வேண்டும்.

சபாஷ் கோபி, சுதாகர்
ஆனால், பள்ளிகள் சொல்லித்தராத விஷயத்தை, அரசாங்கம் சொல்லித்தராத விஷயத்தை, கோபி, சுதாகர் இருவருமே இன்று சொல்லி தந்துள்ளனர்.
கவின் படுகொலைக்கு பிறகு, தமிழ்நாடே அவருக்காக கண்ணீர் வடித்தது.. பெண்ணை திருமணம் செய்ய பல முயற்சிகளை எடுதது வந்த நிலையில், ஏமாந்துபோய் உயிரை விட்டாச்சு.. கவினு செத்து போயாச்சு.. கவினை கொன்றவரின் எதிர்காலமும் போச்சு.. அவர்களது அப்பா, அம்மா, தங்கை எதிர்காலமும் போச்சு.. இப்போது சுயசாதி பெருமையை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்ய போறாங்க?
ஆனால், இதையெல்லாம் ஒரு பாடமாக சொல்லாமல், போறபோக்கில் மிக சாதாரணமாக சொல்லிட்டு போயிட்டாங்க கோபியும், சுதாகரும்... இதுவரை எத்தனையோ வீடியோக்களை போட்டிருந்தாலும், இது அனைத்துக்கும் சிகரம் வைத்த வீடியோவாகும்,.. அவர்களது புயல் பாவங்கள் பலரது பாராட்டையும் பெற்றிருந்தது..
வடக்கன்கள் பரிதாபங்கள்
அதேபோல, வடக்கன்கள் பாவங்கள் என்ற வீடியோவை அன்று பலரும் சிரித்து கடந்துவிட்டனர். ஆனால், இன்று தமிழகத்தில், வடக்கன்களுக்கு ஓட்டுரிமை என்ற விஷயத்தை கொண்டு வருகிறார்கள்.. இதனை தேர்தல் ஆணையம் மறுத்தாலும், அடுத்து வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் நடக்கும்படி செய்துவிடக்கூடும்.
வடக்கிலிருந்து வந்துள்ள 10 லட்சம் பேர், நம்முடைய கருத்தியலுக்கு ஒவ்வாதவர்களுக்கு ஓட்டு போடுகிறார்கள் என்றால், தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும். அங்கே உ.பி., பீகார் எப்படி பின்தங்கியிருக்கிறதோ அதைவிட மோசமாக தமிழ்நாடு சென்றுவிடும். இப்படியான விஷயத்தைதான் அன்றைய "வடக்கன் பாவங்கள் " வீடியோவில் சொல்லப்பட்டிருந்தது. இப்போதுதான் அதில் சீரியஸ்னஸ் பலருக்கும் வந்தள்ளது.
காரின் டயர்கள்
2 நாட்களுக்கு முன்பு, ஒரு பிரபலமான தலைவருக்கு மரியாதை செலுத்துவதற்காக கார் ஒன்றில், சிலர் சென்றிருந்தனர்.. அப்போது தில்லை நடராஜர் போல காலை தூக்கி வைத்து, அந்த கார் செல்கிறது..காரின் டயர்கள் ஒவ்வொரு திசையில் இருக்கிறது.. அந்த கார் டான்ஸ் ஆடிக்கொண்டே செல்கிறது..
காவல்துறையினரும் எதுவுமே செய்ய முடியாமல் விழித்து நின்றிருந்தனர்.. காவலர்கள் செயலிழந்து நிற்கும் அளவுக்கு, சாதி கூத்தாடுகிறது.. எல்லா தலைவர்களுக்குமே மரியாதை செலுத்தும்போதும் இப்படித்தான் நடக்கவே செய்கிறது.
மாணவர்கள் கையில் கயிறு
பொதுமக்களையும், காவல்துறையையும் இதுபோன்றவர்கள் அச்சுறுத்துகிறார்கள்.. இதையெல்லாம் டிப்படையிலேயே பள்ளியில் சொல்லித்தர வேண்டும். ஆனால், ஸ்கூலுக்கே கையில் கயிறு கட்டிக் கொண்டு வருகிறார்கள்.. ஸ்கூலிலேயே கஞ்சா வந்துவிட்டது.. இதையெல்லாம் எப்படி களைவது என்றே தெரியவில்லை.. இதை சுட்டிக்காட்டி கோபி, சுதாகர் போன்றவர்கள் வீடியோ போட்டார், அவர்களுக்கு மிரட்டல்களும் வருகின்றன..
முன்பெல்லாம் சமூக விஷயங்கள் குறித்து கோபி, சுதாகர் அதிகமான வீடியோக்களை பதிவிட்டனர்.. ஆனால், அவர்கள் 2 பேருக்கும் திருமணமானதுமே, மாமியார் பாவங்கள், மருமகள் பாவங்கள், ஷாப்பிங் பாவங்கள், என்று இறக்கிவிட்டார்கள் என்று என்னுடைய நண்பர் ஒருவர் வருத்தமாக கூறியிருந்தார்..ஆனால், அரசியல் தொடர்பான வீடியோக்கள் என்றால், உடனே சம்பந்தப்பட்ட கட்சியிலிருந்து போன் செய்து மிரட்டல் விடுக்கிறார்கள்.. இப்படியிருந்தால் எப்படி வீடியோ போட வேண்டும்? அவர்களுக்கு ஒருவிதமான நெருக்கடியும் தரப்படுகிறது.
சிரிச்சிட்டே போனாரே சீமான்
இந்த சூழலில், சோஷியல் வீடியோக்களை பதிவிட்டதை வரவேற்று, வாழ்த்தியாக வேண்டும்.. சீமானை பற்றி காமெடியாக வீடியோ பதிவிட்டதை கண்டு, நாம் தமிழர் தம்பிகள் கோபப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சீமானே அதை பார்த்துவிட்டு, சிரித்து ரசித்துள்ளார்.. அவர்களது நிகழ்ச்சிக்கே ஒருமுறை சீமான் சென்றிருக்கிறார்.. இப்படி வீடியோவிலுள்ள கருத்தியலை மட்டும் எடுத்துக் கொண்டு அதை ரசித்து கடப்பவர்கள் வெகு சிலரே.. அந்த வீடியோக்களை ஸ்போட்டிவ்வாக எடுத்து கொள்ளாமல், ஒருசிலர் கோபி, சுதாகரை
மிரட்டினால் என்ன அர்த்தம்?
டெலிட் ஆகிறதா வீடியோ
இப்போது பதிவிட்டுள்ள "சோஷியல் பரிதாபங்கள்" வீடியோவுக்கு மிரட்டல் வந்ததாகவும், வீடியோவை அகற்றப்போவதாகவும் சொல்கிறார்கள். யூடியூப் சேனலுக்கு பலரும் மிரட்டி மெயில் அனுப்புகிறார்களாம்.. இப்படி மெயில் அனுப்பும் அவ்வளவு அறிவுள்ளவர்கள், சாதியை தூக்கிப்பிடிப்பது வியப்பாக உள்ளது.
இங்கே ஆணவ கொலைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் போதாது.. கோபி, சுதாகர் போன்றவர்கள் இதுபோன்ற வீடியோக்களை அதிகம் பதிவிட்டு, அந்த சட்டத்துக்கே அவசியம் இல்லாமல் செய்துவிட்டால் போதும்.. யூடியூபர்கள்தானே? என்ன செய்துவிட முடியும்? என்ற கணிப்பை எல்லாம் கோபி, சுதாகரின் வீடியோ அடித்து நொறுக்கியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications