Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீரியல் திடீர் முடிவு.. காரணம் இதுதானா? லாங் டைம் சீரியலின் பரிதாப நிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலின் கிளைமாக்ஸ் சூட்டிங் இந்த மாத இறுதியில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த சீரியலுக்கு பதிலாக புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் பிரைம் டைம் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ஆற அமர மாலை நேரத்தில் பார்க்கும் சீரியல்கள் பலருக்கும் பரிட்சயமாக இருக்கும். அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஆண்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக அதை பார்க்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் கூட பல வீட்டில் இருக்கிறது.

Ponni Serial VijayTV

சீரியல் கொடுமை

வீட்டில் சாப்பிட ஆண்கள் வந்து உட்காரும் நேரத்தில் பல வீட்டில் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதை பார்க்க விருப்பம் இல்லாமல் போனை பார்த்துக் கொண்டிருந்தாலும் காதில் அந்த சீரியலின் கதைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனாலே அடுத்த நாள் என்ன நடக்கப்போகிறது என்று பலருடைய எதிர்பார்ப்பாகவும் வந்து விடுகிறது. அதே நேரத்தில் நான் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அதிகமாக பெண்கள் தான் விரும்பி பார்க்கிறார்கள்.

கதையில் மாற்றம்

அதுபோல விஜய் டிவியில் லாங் டைம் சீரியலாக நான் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் பொன்னி சீரியல் பல பெண்களுக்கு ஃபேவரிட் சீரியல். இந்த சீரியலில் கதாநாயகி தன்னுடைய அப்பாவின் உடல்நிலை காரணமாக அப்பாவின் நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் கதாநாயகனின் திடீர் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத கதாநாயகனின் அம்மா கதாநாயகி பொன்னியே வேலைக்காரி போல நடத்திக் கொண்டிருக்கிறார்.

பொன்னி சீரியல் கதை

ஒரு கட்டத்தில் பொன்னியை கதாநாயகன் புரிந்து கொள்கிறார். ஆனாலும் சில சூழ்நிலைகளால் பொன்னி வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். இப்போது தன்னுடைய சுய கவுரவத்தை காப்பாற்றுவதற்காக பொன்னியும் அவருடைய அப்பாவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொன்னி மீது இருக்கும் காதலால் அவருடைய கணவர் பொன்னியை மீண்டும் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவேன் என்று வீட்டில் சபதம் போட்டு கொண்டு வந்திருக்கிறார்.

நீண்ட நாள் சீரியல்

இந்த நிலையில் தான் இந்த சீரியல் விரைவில் முடிய வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொன்னி சீரியல் விஜய் டிவியில் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. நான் பிரைம் டைமில் இந்த சீரியல்தான் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியல் திடீரென முடிவுக்கு வருவது சீரியல் ரசிகர்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது. இந்த சீரியலுக்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற சீரியல்தான் ஒளிபரப்பாக போகிறது. இதற்கான ப்ரோமோ நேற்று முன்தினம் தான் வெளியானது.

புதிய சீரியல் ப்ரோமோ

இந்த ப்ரோமோ வெளியான போதே இது பிரைம் டைமில் வரப்போகிறதா? அல்லது நான் பிரைன் டைமில் வரப்போகிறதா? என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால் இந்த சீரியல் நான் பிரேம் டைமில் வரப்போகிறது. பொன்னி சீரியலுக்கு ரீப்ளேஸ்மெண்ட் தான் தென்றலே மெல்ல பேசு சீரியல். ஆனால் பொன்னி சீரியல் கிளைமாக்ஸ் சூட்டிங் இந்த மாத கடைசியில் தான் எடுக்கப் போகிறார்கள். அதனால் அடுத்த மாதத்தில் தான் இந்த சீரியல் தான் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னி சீரியலை மிஸ் பண்ணுபவர்கள் இருக்கிறீர்களா? அல்லது இந்த சீரியலை எல்லாம் சீக்கிரமா முடிச்சு விடுங்கப்பா என்று நீங்கள் நினைக்கிறீரகளா நண்பர்களே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+