Pandian Stores Serial: ஒரு குழந்தை உண்டானாலும் உண்டாச்சு... பாவம் தனம்!
Recommended Video
சென்னை: மீனாவுக்கு ஒரு குழந்தை உண்டானாலும் உண்டாச்சு.. தனத்தின் பாடுதான் திண்டாட்டம்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதைதான் மேற்படி சொன்னது.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு இன்னிக்கு வழக்கம் போல விஜய் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்பாகத் துவங்கியுள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா குழந்தை உண்டாகி ரெண்டு மாசம் ஆச்சு. முதலில் அத்தை தனத்தை இந்த விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லாதே.. கண் வச்சுருவாங்கன்னு சொல்லி திட்டினாங்க. இதனால தனம் மனசு நொந்து போனாளோ இல்லையோ, வீட்டில் உள்ள கடைக்குட்டி கண்ணன் முதற்கொண்டு புருஷன் மூர்த்தி வரை நொந்து போனார்கள்.

அடுத்து மீனா
அடுத்து மீனா வந்து எங்க அப்பா அம்மாகிட்டே இந்த நல்ல விஷயத்தை சொல்லக் கூடாதா? எங்கிருந்தோ வந்த பாரதி கண்ணம்மா வரைக்கும் நான் கர்ப்பமா இருக்கற விஷயம் தெரிஞ்சு போச்சு. எங்க அப்பா அம்மாகிட்டே சொன்னா என்னங்க தப்புன்னு கேட்டு தனம் மனசை நோகடிச்சா.

அம்மா போன்
மீனாவின் அம்மா விஷயத்தை கேள்விப்பட்டு, மீனாவுக்கு போன் செய்து பேசிட்டு அழறாங்க. உங்க குடும்பத்து ஆட்கள் அப்பாகிட்டே முறைப்படி நீ உண்டான விஷயத்தை சொல்லலேன்னு அப்பா கோபமா இருக்கார். நான் எப்படி உன்னை வந்து பார்க்க முடியும்னு கேட்க, இந்த கோபத்தையும் தனத்திடம் காண்பிக்கிறாள் மீனா.எங்க அப்பா முறைப்படி சொல்லலேன்னு வரலே.. நல்லாருக்குங்க.. நீங்க எல்லாம் சந்தோஷமா இருங்கன்னு சொல்லிட்டு போறா.

பொறுமையான தனம்
இவ்வளவு நடந்தும் தனம் ரொம்ப பொறுமையா இருக்க. தனக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு நினைக்கலை. இது எல்லாம் எப்போது எல்லை மீறுதோ.. அப்போது அந்த சீரியலுக்கு வெற்றின்னு நினைக்கறதா, இல்லை தோல்வின்னு நினைக்கறதா தெரியலை.ஆனால், நிச்சயம் இதெல்லாம் ஒரு நாள் நடக்கும். நடக்காமலும் கதையை கொண்டு போகலாம். அது யதார்த்தத்தை மீறிய கதையாக இருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications