வேதனை! பிரபல தமிழ் சீரியலில் நடித்தவர்களுக்கு இந்த நிலைமையா? பச்சை பச்சையா திட்டிய இயக்குநர்
சென்னை: பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் மிருகத்தின் பெயரில் தொடங்கும் ஒரு சீரியலில் நடிக்கும் ஜூனியர் நடிகர் நடிகைகள் தங்களிடம், அந்த சீரியலில் அசிஸ்டன்ட் இயக்குனர்கள் தவறாக நடந்து கொள்வதாக திடீர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு அந்த வீடியோவில் ஜூனியர் நடிகர்கள் பல குற்றச்சாட்டுகளையும் கூறியிருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக திறமை இருந்தாலும் பலரால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாத நிலை தான் இருக்கிறது. அதிலும் ஆரம்ப கட்டத்தில் தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்காக பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சினிமா மற்றும் சீரியலில் நடித்து ஜெயிக்க வேண்டும் என்று பலர் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஒரு சிலருக்கு எதிர் பார்க்காத வகையில் நல்ல வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அவர்களுடைய திறமையும் வெளிவர அவர்கள் அடுத்தடுத்து வெற்றி அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் அதில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதுபோலத்தான் இப்போது பிரபல சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்கும் ஜூனியர் நடிகர் கண்ணீரோடு திடீர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.
அவர்கள், மிருகத்தின் பெயர் கொண்டு தொடங்கும் டைட்டிள் கொண்ட ஒரு சீரியலில் நடித்து வரும் நிலையில் அந்த சீரியலில் உதவி இயக்குனர்கள் தங்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், ஏதாவது கேட்டால் சட்டையை பிடித்து அடிக்க போவது போன்று செயல்படுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் பெண் நடிகைகளிடம் நீங்கள் என்ன மேட்டர் பண்ண வருகிறீர்களா? பல்லைக்காட்டி கிட்டு இருக்கீங்களே? என்றெல்லாம் கேவலமாக பேசுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
அதுபோல ஜூனியர் நடிகர்களுக்கு சரியான சாப்பாடு, பாத்ரூம் வசதி கூட செய்து தர மாட்டாங்க என்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை அந்த ஜூனியர் நடிகர்கள் சொல்லி இருக்கிறார்கள். டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் அந்த சீரியல், மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில், அதில் நடிக்கும் நடிகர்களின் நிலைமை இவ்வளவு கஷ்டமாகவா இருக்கிறது என்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
எல்லோரும் பிரபலமாக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் இவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களால் தாங்க முடியாத அளவிற்கு இந்த சீரியலில் எங்களை கொடுமை படுத்துகிறார்கள் என்று ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் எத்தனையோ சீரியல்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்திருக்கிறோம்... ஆனால் அதில் இப்படி எல்லாம் நடந்தது கிடையாது. இந்த மிருகத்தின் பெயர் கொண்ட சீரியலில் தான் இவ்வளவு பிரச்சனைகள் பண்ணுறாங்க என்று தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்கள்.
பிரபலமான அந்த டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், பெண்ணை உயர்த்தி காட்டும் வகையில்தான், மிருகத்தின் பெயரோடு சேர்த்து, தனது தலைப்பையே வைத்துள்ளது. ஆனால் அதில், நடிக்கும் பெண்களுக்கு இந்த நிலைமைதானா? சீரியல் பெயருக்கும், இயக்குநர் நடந்துகொள்வதற்கும் சம்மந்தமேயில்லையே, இதையெல்லாம்தான் நம்பிக்கொண்டு சீரியல் பார்க்கிறோமா என்றெல்லாம் கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications