முதன்முதலாக பான் இந்தியா மூவி எடுத்த பிரவீன் காந்தியை தெரியுமா? ஏஆர் ரஹ்மானுடன் எப்படி ஆழமான நட்பு?
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற முதல்நாளே திவாகர், ஏதேதோ அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்.. அதையெல்லாம் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது.. அவர் செய்த சேட்டைகளை பார்த்தபோதே, திட்டமிட்டுதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது" என்று தன்னுடைய சேனலில் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.
Bigg Boss சீசன் ஆரம்பமாகியிருக்கு.. முதல் போட்டியாளரே வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை அறிமுகப்படுத்தியதுமே அனைவருக்குமே ஆச்சரியமாகிவிட்டது.. இவரை எதுக்கு கூட்டிட்டு வந்தாங்க? என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அடுத்தடுத்து பலூன் அக்கா, காரக்குழம்பு கனி என்று அடுத்தடுத்த நபர்கள் வீட்டிற்குள் வந்துவிட்டார்கள்., இதனால் இந்த முறை பிக்பாஸ் களை கட்ட போவதாக தெரிகிறது.

பிக்பாஸ் டிஆர்பி
கடந்த முறை பிக்பாஸை சீக்கிரமா முடிங்க என்று சொல்லும் அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை, டிஆர்பியும் குறைந்தே இருந்தது. இந்த முறை வாட்டர்மெலன் திவாகரை பார்த்ததுமே நிறைய வியூவர்ஸ் இரிடேட் ஆகிவிட்டார்கள்..
சமீபத்தில் ஒரு சேனலில் திவாகரை பேட்டி தர வைத்து, அதில் தகராறு செய்திருந்ததுகூட, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான செட்டப்போ? என்றுகூட தோன்றுகிறது.. ஏனென்றால் அவர் அந்தளவுக்கு வொர்த் இல்லாதவர்.. ஆனால், ஜிபி முத்துவை அப்படி சொல்ல முடியாது.. அவர் இயல்பாகவே இன்னசென்ட் நபர்..
வாட்டர்மெலன் ஸ்டார் என்று சொல்லக்கூடிய திவாகர், பயங்கரமான உஷாரான நபர்.. தன்னை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த மீடியாவை பயன்படுத்தி கொண்ட நபர்.. ஒரே ஒரு வாட்டர்மெலனை வைத்து கொண்டு, இவர் செய்ததெல்லாம் ஒரு செய்கையா? ஊரெல்லாம் தான் ஒரு டாக்டர் என்று சொல்லி வருகிறார்.
வாட்டர்மெலன் ஸ்டார்
பிக்பாஸ் வீட்டிற்குள் திவாகரை எதற்காக செலக்ட் செய்தார்கள்? தெரியுமா என்று கேட்ட விஜய் சேதுபதி, "திவாகர் ஒரு பிசியோதெரபிஸ்ட்.. எனவே பிசியோதெரபிஸ்ட் சம்பந்தமான கேள்விகளுக்கு திவாகர் சரியாக பதிலளித்துள்ளார், அதனால்தான் செலக்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.. ஆனால், திவாகரை செலக்ட் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா? என்றுதான் கேட்க தோன்றுகிறது.
அதற்கேற்றவாறு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற முதல்நாளே திவாகர், ஏதேதோ அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்.. அதையெல்லாம் பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது.. அவர் செய்த சேட்டைகளை பார்த்தபோதே, திட்டமிட்டுதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. அவருக்கு வீட்டுக்குள் போய் என்ன செய்வதென்றே தெரியல.. ஒரு இடத்தில் அவரால் நிற்கவும் முடியல..
ஏஆர் ரஹ்மான் நட்பு
திடீர்னு பலூன் அக்கா என்று சொல்லக்கூடிய அரோராவை பார்த்து, "உன் கண்ணுதான் ரொம்ப அழகு" என்று சொல்லவும், உடனே குறுக்கே புகுந்த விஜே பார்வதி, நிறுத்துங்க, அந்த பொண்ணு உங்க பேத்தி வயது என்று சொல்லி கலாய்த்துவிட்டார்.. இப்படி முதல்நாளே திவாகரை கலாய்க்க துவங்கிவிட்டார்கள்.
அதேபோல பிரவீன் காந்தி வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.. முதலில் பிரவீன் காந்த் என்றிருந்த பெயரை பிரவீன் காந்தி என்று மாற்றி வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ரட்சகன் என்ற முதல் பேன்-இந்தியா படம் எடுத்தவர் பிரவீன் காந்திதான்.. அந்த படம் ஏன் அன்று ஓடவில்லை என்று தெரியவில்லை..
பிரவீன் காந்தி படம் என்றாலே சற்று கூடுதலாக அக்கறை எடுத்து மியூசிக் போட்டு தருவார் ஏஆர் ரஹ்மான்.. காரணம், இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் கோடம்பாக்கத்தில் ஒரே காம்பவுண்டில் ஒண்டு குடித்தனத்தில் வசித்து வந்தவர்களாம். அதனால்தான், ரட்சகன், ஜோடி என்ற பிரவீன் காந்தியின் படங்களில் மியூசிக் தனித்துவமாக இருக்கும்..
தாக்குப்பிடிப்பாரா பிரவீன்
பொதுவாக எல்லா பிக்பாஸ் சீசனிலும், நடுத்தர மற்றும் நடுத்தர வயது தாண்டியவர்களையும் போட்டியாளராக உள்ளே களமிறக்குவார்கள்.. அப்படித்தான் பிரவீன் காந்தி வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.. இவர் ரொம்ப ஷார்ட்-டெம்பர் உள்ள நபர்.. எத்தனை நாள் வீட்டுக்குள் தாக்குப்பிடிக்க போகிறாரோ தெரியவில்லை.
பிரவீன் காந்தியிடம் சென்ற திவாகர், சார் நீங்க 25 வருடங்களுக்கு பிறகு இங்கே வந்திருக்கீங்க, ஆனால் நான் ஒரே வருடத்தில் வந்திருக்கிறேன் என்றார்.. அடுத்த செகண்டே பிரவீன் காந்தி, திவாகரிடமிருந்து மெல்ல விலகி வந்துவிட்டார்..












Click it and Unblock the Notifications