Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தி 2 சீரியலை தொடர்ந்து புது சீரியலில் இணையும் அதே ஜோடிகள்..எந்த சீரியலில் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சன் டிவியில் இவர்களின் காதலை பார்த்து உருகிப்போன ரசிகர்களை மீண்டும் இன்பமாக்க புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சித்தி 2 ஜோடிகள்.

சித்தி 2 சீரியல் நடிக்கும் ப்ரீத்தி ஷர்மாவும் நந்தனும் தான் தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடி, அதனாலேயே இந்த ஜோடியை ஜெமினி டிவி யும் தன் கைவசம் பிடித்துவிட்டது.

இனி இவர்களின் ஆட்டம் வேற லெவல் தான் என தெரிந்தாலும் அதற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்காக தினமும் இரவு ஒன்பது முப்பதுக்கு ஜெமினி டிவியில் வந்துவிட்டார்கள்.

மீண்டும் கலக்கல் ஜோடி

மீண்டும் கலக்கல் ஜோடி

சன் டிவியின் மூலமாக அனைவரின் மனதை கவர்ந்த இளம் ஜோடிகளாகவும் காதல் தம்பதிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜோடி தற்போது ஜெமினி டிவியிலும் கைகோர்த்து விட்டது. இதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கும் இவர்களின் ரசிகர்கள் இந்த புது நிகழ்ச்சிக்காகவும் காத்திருக்க தொடங்கிவிட்டார்கள். அதுவும் தற்போது இளைஞர்களை அதிகமாக கவர்ந்திழுக்கும் ஜோடி என்றால் சித்தி சீரியலில் நடிக்கும் கவின், வெண்பா ஜோடி தான். அதில் கவின் ஆக நடிக்கும் நந்தனும் வென்பாவாக நடிக்கும் ப்ரீத்தி சர்மாவும் ஜெமினி டிவியில் காவியாஞ்சலி என்னும் சீரியலில் நடிக்க இருக்கிறார்கள். இந்த செய்தியை கேட்டு இவர்களின் ரசிகர்கள் பெரும் பரபரப்பாக சீரியலுக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இனி இவர்களின் அலப்பறை அடங்காது

இனி இவர்களின் அலப்பறை அடங்காது

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டி ஆர் பி யில் முன்னிலையிலும் ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான், ஆனாலும் இதே வரவேற்பு கீதாஞ்சலி சீரியலுக்கும் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். ஆனாலும் சமூக வலைத்தளத்தில் இந்த சீரியலுக்காக ப்ரீத்தியும், நந்தனும் சேர்ந்து எடுத்த போட்டோஸ்கள் தான் பெரும் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தம் பார்த்து மீண்டும் புது கதைளத்தில் இவர்கள் எந்த மாதிரி வர போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே சித்தி சீரியல் சன் டிவியில் டாப்பில் இருப்பது போல ஜெமினி டிவியில் இந்த சீரியலும் இனி டாப்பில் வந்துவிடும் என்று இவர்களுடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்

தோளில் சாய்ந்தபடி கலக்கல் தான்

தோளில் சாய்ந்தபடி கலக்கல் தான்

இவர்கள் இருவரின் ரசிகர்கள் இதுவரைக்கும் இன்ஸ்டாகிராமில் கவின், வெண்பா பெயரில் பல பேன்ஸ் பேஜ் வைத்திருந்தனர். அந்தப் பெயர்களில் வரிசையில் தற்போது இவர்களுடைய புது சீரியலுக்கும் பேன்ஸ் பேஜ் வைரலாக பரவி வருகிறது. அதிலும் பலர் இதுவரைக்கும் கவின்- வெண்பா, நந்தன்-ப்ரீத்தி என்று ஹேஸ்டேக் பரவி வந்த நிலையில் தற்போது வின்-வெண் என்ற பெயரில் ஹேஸ்டேக் செய்து இவர்களுடைய போட்டோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ப்ரீத்தி திருமணம் சீரியலில் அனிதா கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த சீரியலிலும் இவர் சைட் ரோலில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று கேரக்டர் நன்றாகவே அமைந்திருந்தது. அதற்குப் பிறகுதான் இவருக்கு கதாநாயகியாக சன்டிவியில் வாய்ப்பு கிடைத்ததும் கலர்ஸ் தமிழில் நடித்துக்கொண்டிருந்த திருமணம் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதற்கு பிறகு முழு நேரமாக சித்தி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் தற்போது புது சீரியலிலும் நடிக்க இருக்கிறார்.

ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்

ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள்

ஆனால் புது சீரியலில் இவர் நடிக்க இருப்பதால் சித்தி 2 சீரியலில் இனி தொடர்ந்து நடிப்பாரா? அல்லது இந்த சீரியலில் இருந்தும் இவர் மாறிவிடுவாராா? என்று பல ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதிலும் இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவர் சித்தி சீரியலில் இல்லை என்றால் அந்த சீரியலே பார்ப்பதற்கு பிடிக்காது என்று கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சித்தி சீரியலில் முதல் முறையாக திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு காதல் ரசத்தைப் பிழிந்து நடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் நடிப்பை ரொம்பவே மிஸ் பண்ணுவோம் என்று பலர் தங்களுடைய பீலிங்கை கொட்டுகிறார்கள். ஆனா எப்படியும் பிரீத்தி சித்தி சீரியலைப் விட்டு போக மாட்டார் என்று உறுதியாக நம்பும் ரசிகர்கள் அந்த மாதிரியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. சித்தி சீரியலில் இவர் கேரக்டர் தான் முக்கியமாக இருக்கிறது, அதனால் இந்த சீரியலை விட்டு இவர் போக மாட்டார் என்று நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்கள்.

அழகு ஜோடி தான்

அழகு ஜோடி தான்

ஏற்கனவே சித்தி சீரியலில் இவர்கள் இருவருமே வீட்டைவிட்டு கோபமாக வெளியே வந்து கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கண்டுபிடித்து இப்போதுதான் வாடகை வீட்டில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களுக்கு வீடு கிடைக்கிறதோ இல்லையோ என பல ரசிகர்கள் இவர்கள் வீடு இல்லாமல் அலைவதை பார்த்து தவித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஒருவழியாக இவர்கள் புது வீட்டில் செட்டில் ஆனதும் இருவருமே ஒரே வீட்டில் டிரைவராகவும், வேலைக்காரப் பெண்ணாகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் இப்ப வரைக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெண்பாவின் பெற்றோர் யார் என்பதை தெரிந்துகொள்ளும் முக்கிய எவிடன்ஸ் பற்றி இந்த வாரத்தில் தெரியவரும் என ஆர்வமாக இருக்கும் நிலையில் புது சீரியலில் இவர்கள் நடிப்பதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+