எல்லாரும் எங்களை மட்டமா பார்க்குறாங்க! பிரேம்ஜியை நான் டீகிரேட் செய்துட்டேனாம்! மனைவி இந்து உருக்கம்
சென்னை: எங்களை பல பேர் மட்டமாகத்தான் பார்க்கிறார்கள். நான் என் கணவர் பிரேம்ஜியை தரக்குறைவாக நடத்துவதாகவும் பேசினார்கள். ஆனால் என் கணவர் எதையும் காதில் போட்டுக் கொள்ளாதே என கூறியதாக பிரேம்ஜியின் மனைவி இந்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜிக்கு திருமணமாகவில்லையே என கங்கை அமரன் நிறைய முறை கவலைப்பட்டுள்ளார். இந்த சூழலில்தான் கடந்த ஜூன் 20ஆம் தேதி இந்து என்பவரை பிரேம்ஜி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.

45 வயதான பிரேம்ஜியின் மனைவி இந்து வங்கியில் பணியாற்றியவர் என்கிறார்கள். அது போல் இருவருக்கும் இடையே வயது வித்தியாசமும் அதிகம் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் மனம் ஒத்து போனால் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என பலர் ஆதரவாக பேசினர்.
இந்த நிலையில் பிரேம்ஜியின் மனைவி இந்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது சொந்த ஊர் சேலம். நான் சேலத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் வங்கியில் பணியாற்றினேன். அப்போது தான் எனக்கு பிரேம்ஜியை தெரிய ஆரம்பித்தது.
இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி காதலிக்க ஆரம்பித்தோம். 2 வருஷமாக காதலித்தோம். இது வெளியுலகத்திற்கு தெரியாவிட்டாலும் என் நண்பர்கள் எல்லாருக்கும் தெரியும். நாங்கள் வெளியே சுற்றியிருக்கிறோம். எங்களை யாரும் கண்டுபிடித்ததே இல்லை.
கல்யாணம் குறித்து பேசிய போது சொந்தக்காரர்கள் எல்லாம் நெகட்டிவ்வாக பேசினார்கள், சினிமா குடும்பம் வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் என் காதலில் உறுதியாக இருந்தேன். இதனால் வீட்டில் வேறு வழியில்லாததால் எங்களை சேர்த்து வைத்தார்கள். ஆனால் இப்போது எங்கள் குடும்பத்தில் அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட எனது உறவினர் திருமணத்திற்கு போன போது அவரை உட்காரவே விடலை, வந்து வந்து செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க! எனக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது மசாலா பிசினஸ் குறித்து என் அம்மா ஷர்மிளா சொன்னாங்க. அது குறித்து பிரேம்ஜியிடம் டிஸ்கஸ் செய்தேன்.
அவரும் எது பிடிக்கிறதோ அதை செய் என்றார். மசாலாதான் உணவுக்கு சுவையை கொடுக்கும். அதையே நாம் தரமாகவும் சுவையாகவும் கொடுத்தால் பிசினஸ் நன்றாக போகும் என்ற நம்பிக்கை இருந்தது. இதனால் இந்த பிசினஸ் செய்யலாம் என முடிவு செய்தோம்.
இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் அவர் டிஸ்கஸ் செய்தார். அப்போது பிரேம்ஜி மாமியார் மசாலா என வைக்கலாமா என அவர் போட்ட கமென்ட்டுகள் அதிக லைக்குகள் வந்தது. இதனால் அந்த பெயரையே வைத்துவிட்டோம்.
ஆனால் பலர் இந்த மசாலா பிசினஸை மட்டமாக பார்த்தார்கள். நான் ஏதோ அவரை மசாலா பிசினஸ் செய்ய வைத்து தரம்தாழ்த்திவிட்டதாக பேசினார்கள். சினிமா குடும்பத்தை சேர்ந்த ஒருவரை மசாலா பிசினஸ் செய்ய வைக்கிறாயே என்றார்கள். ஆனால் இந்த மாதிரி நெகட்டிவ் கமெண்ட்டுகளை எல்லாம் இக்னோர் செய்துவிடுங்கள் என அவர்தான் சொன்னார். அதனால் நானும் இப்போதெல்லாம் நெகட்டிவ் கமெண்ட்டை கண்டுக் கொள்வதே இல்லை.
பிரேம்ஜிக்கு மீன் வறுவல், கோழி வறுவல் என்றால் மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் அவரே சமைப்பார். நான் கொஞ்சம் கவலையாக இருந்தாலும் எனக்கு சப்போர்ட் செய்துக் கொண்டே இருப்பார். மிகவும் ஜாலியான நபர். மசாலா எல்லாமே ஊரில் இருந்து தயாரித்து வருகிறது. அதை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறோம்.
பிசினஸ் பிக்கப் ஆனதும் விரைவில் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை கொடுக்க வேண்டும். சென்னையில் தொழிற்சாலை வைப்பதை விட கிராமத்தில் இருந்தால்தான் அங்குள்ள பக்குவத்திற்கு மசாலா நன்றாக வரும். எல்லாத்துக்கும் ஒரே மசாலாதான். சிக்கன் வறுவல், மீன் வறுவல், சுக்கா என எல்லாத்துக்கும் ஒரே மசாலாதான். என் அம்மா சமையல் நன்றாக செய்வார். அதனால்தான் அவர் ஒரு ஆளாகவே இந்த மசாலாவை ரெடி செய்கிறார். இவ்வாறு இந்து தெரிவித்தார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications