யோகிபாபுவை அசிங்கப்படுத்திய பாவனா? வினையான "வன்ம" விளையாட்டு.. ரஜினிகாந்த்தை விடவா இவர்கள்?: பிரபலம்
சென்னை: சமீபத்தில் நடிகர் ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் துவக்க விழாவை சென்னையில் நடத்தியிருந்தார்.. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா, அதற்கு யோகிபாபு, "என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு, அந்த படம் நல்லா வரணும். அவரது தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் என யோகிபாபு கூறினார். உடனே பாவனா, "நல்லவரு மாதிரி பேசுறீங்க" என்று சொல்ல, இந்த பேச்சுக்கள்தான் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து, பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "மைன்ட் வாய்ஸ் விளையாடலாம்னு ஆரம்பிச்சு, யோகி பாபுவிடம், "எங்க இருந்தீங்க நீங்க, உங்கள நான் பார்க்கவே இல்லையே" எனச்சொல்லியபடி உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன சொல்லுது என கேட்டார்.

அதற்கு யோகிபாபு, என்னை வச்சு ரவி சார் படம் பண்றாரு, அந்த படம் நல்லா வரணும். அவரது தயாரிப்பு நிறுவனமும் நல்லபடியா வளரணும் " என்றார்..
ஜெர்க் ஆன யோகிபாபு
உடனே பாவனா, "நல்லவரு மாதிரி பேசுறீங்க" என்ற யோகிபாபுவை பொதுவெளியிலேயே வைத்து கேட்டுவிட்டார்.. உடனே சற்று ஜெர்க் ஆன யோகிபாபு, ஏம்மா, நான் நல்லதுதானே நினைக்கிறேன் என்றார்.
அதேபோல, பாவனா யோகிபாபுவிடம், என்ன சார், இவ்ளோ நேரமா இங்கேயே இருந்தீங்க? என்று கேட்டார்.. இதனால் இரிடேட் ஆன யோகிபாபு, "ஆமா,ம்மா.. உனக்கு பின்னாடிதான் நான் நின்னுட்டு இருந்தேன்.. பின்னாடி இருக்கறவங்க, முன்னாடி வந்துடக்கூடாது, அவங்களுக்கு சேர் போடாதேன்னு சொல்ற ஆளு நான் கிடையாதும்மா" என்று பதிலடி தந்தார்.. யோகிபாபுவின் இந்த பதிலை பாவனா எதிர்பார்க்கல.
கொடி கட்டி பறந்தவர்
யோகிபாபு, பாவனா இருவருக்குள்ளும் தற்செயலாக நடந்த சம்பவம் போல இது தெரியல.. பிரபல தொலைக்காட்சியில் விஜே-வாக இருந்தவர்.. கொடி கட்டி பறந்தவர்.. பாப்புலர் விஜேவாக பணியாற்றியவரும்கூட..
இப்போது ஜெயம் ரவி நடத்திய விழாவில்கூட, சிவகார்த்திகேயனிடம் கமாண்டிங்காகவே பேசினார் பாவனா.. அன்று பாவனாவைவிட ஜூனியராக காம்பியர் செய்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன், இன்று மக்கள் மனதில் இடம் பிடித்த முக்கியமான ஹீரோவாக வந்துவிட்டார்.. இன்று 75 கோடி சம்பளம் வாங்கக்கூடிய அளவுக்கு உயர்ந்துவிட்டார்..
பழைய பழக்கத்தின் காரணமாக பாவனா உரிமையாக பேசுவதாக எடுத்துக் கொண்டாலும், ஒருநிகழ்ச்சிக்கு நெறியாளராக வந்திருக்கும்போது, அந்த நிகழ்ச்சிக்கு உரிய மரியாதையை பாவனா தந்திருக்க வேண்டும்.
மைன்ட் வாய்ஸ் விளையாட்டு
டிவி வாய்ப்புக்காக தேடி அலைந்த காலகட்டத்தில், யோகிபாபுவை பாவனா பார்த்திருக்கலாம்.. ஆனால், இன்று யோகிபாபு வளர்ச்சி அனைவருக்குமே ஆச்சரியம்தான்.. யாருமில்லாத ஊரில் தான்தான் ராஜா என்று சேர் போட்டு உட்கார்ந்துள்ளார்..
ரஜினி, கமல், விஜய், அஜித்துடன் நடித்து, கோடிகளில் சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்.. இப்போதுகூடு, ஜெயம் ரவி தயாரிக்கும் படத்தில் யோகிபாபுதான் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால், வேண்டுமென்றே யோகிபாபு அசிங்கப்படுத்தி, அவரை எங்காவது சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே பாவனா, இந்த மைன்ட்வாய்ஸ் விளையாட்டை விளையாடியதாக தெரிகிறது.
யோகிபாபு மீது வன்மம்
பாவனா ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளணும்.. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக 8 லட்சம் ரூபாய் சம்பளத்தை வாங்கி கொண்டு, அதற்குரிய பணியைதான் செய்திருக்கவேண்டும்.
ஆனால், யோகிபாபுவை பார்த்ததுமே வன்மத்தை கொட்டிவிடவும், யோகிபாபுவும் பதிலுக்கு வெளுத்துவிட்டார். தொடர்ந்து பேசியிருந்தால் இவர்களுக்குள் மிகப்பெரிய சண்டையே வெடித்திருக்கும். எனினும் யோகிபாபுவை அசிங்கப்படுத்திய பாவனா என்று சொல்வதே, யோகிபாபுவுக்கு அசிங்கம்தானே?
எப்போதுமே, புகழ், பதவி, பணம் வரும்போது, பணிவும் சேர்ந்து வேண்டும்.. அப்போதுதான் அனைத்தையும் நிரந்தரமாக தக்க வைத்துகொள்ள வேண்டும்.. ஆனால், ஆங்கர் பிரியங்காவுக்கு டாமினேஷன் வந்துவிட்டது.. அதிலும் மணிமேகலை சேனலுக்குள் நுழைந்து, பெயர் எடுத்துவிடவும், அது பிரியங்காவுக்கு பிடிக்கவில்லை.. ஒன் டூ ஒன் நபராகவே இருக்க வேண்டும் என்று அவரிடம் சண்டைக்கே போய்விட்டார்.
ரஜினிகாந்த் உயரம்
பாவனா, பிரியங்கா யாராக இருந்தாலும், தங்களுக்கு வரும் புகழை உள்ளுக்குள் ஏற்றுக் கொள்ள கூடாது.. ரஜினிகாந்த்துக்கு கிடைக்காத பேரா? புகழா? பணமா? அவரைவிட எளிய மனிதர் வேறு யார் இருக்க முடியும்? மாதம்பட்டி ரங்கராஜ் மிகப்பெரிய சமையல் வல்லுநர்தான்.. ஆனால், வாழ்க்கையில் ஒரு சறுக்கல் வந்துவிட்டதே?
யாராக இருந்தாலும், சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும்.. சக நண்பர்களிடம் அன்பாக பேசி பழகினாலே மரியாதை என்பது தானாகவே கிடைத்துவிடும், அதுதான் நிலையான மரியாதையும்கூட என்று தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications