கையில் குழந்தையுடன் பிரியா பவானி சங்கர்.. லீக்கான போட்டோ! இது எப்போ நடந்தது! விஷயம் இதுதானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் ஒரு குழந்தையை மடியில் தூக்கி வைத்து அன்புடன் பார்க்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த ஒரு படம் தான் தற்போது பல்வேறு தவறான புரிதல்களுக்கும், விவாதங்களுக்கும் காரணமாகியுள்ளது.

Priya Bhavani Shankar Viral News Kollywood

வைரலாகும் அந்த புகைப்படம்

இந்த புகைப்படத்தை பார்த்த சிலர், "ப்ரியா பவானி சங்கருக்கு குழந்தை பிறந்துவிட்டதா?", "இவருக்கு கல்யாணமே ஆகவில்லையே... எப்படி குழந்தை?" என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். கமெண்ட் பக்கங்களில் இதுபோன்ற கேள்விகள் மலைபோல குவிந்தன.

ஆனால் உண்மையில், அந்த குழந்தை ப்ரியா பவானி சங்கரின் குழந்தை அல்ல. அந்த குழந்தையின் பெற்றோர் தங்களுடைய சமூக வலைதள பதிவில், "என் குட்டி பையன் எல்லாரையும் கவர ஆரம்பிச்சுட்டான்... குறிப்பாக அவன் 'அத்தை'யை!" என்று குறிப்பிட்டு இருந்தனர். அதாவது, ப்ரியா அந்த குழந்தைக்கு 'அத்தை' உறவாக இருப்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதை கவனிக்காமல் சிலர் தொடர்ந்து தவறான புரிதல்களுடன் கமெண்ட்ஸ் போடுவதால், இந்த விஷயம் மேலும் வைரலாகி வருகிறது.

யார் இந்த ப்ரியா பவானி சங்கர்?

ப்ரியா பவானி சங்கர் முதலில் டெலிவிஷன் உலகில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான "கல்யாணம் முதல் காதல் வரை" சீரியல் மூலம் அவர் இல்லத்தரசிகளில் வீட்டு மகளாக மாறினார். பின்னர் சினிமாவுக்கு வந்த அவர், தனது இயல்பான நடிப்பால் விரைவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

காதல் வாழ்க்கை

ப்ரியா பவானி சங்கர் தனது நீண்டகால காதலராக ராஜவேல் என்பவருடன் லிவ்விங்கில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பல ஆண்டுகளாக இருவரும் உறவில் இருப்பதாகவும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருவதாகவும் அவர் பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளார். திருமணம் குறித்து பல முறை கேள்விகள் எழுந்தாலும், இதுவரை அவர்கள் இருவரும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Priya Bhavani Shankar Viral News Kollywood

சினிமா பயணம் மற்றும் படங்கள்

சின்னத்திரையில் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகு, ப்ரியா பவானி சங்கர் பெரிய திரைக்கு வந்தது அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. மேயாத மான் திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அவருடைய இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் போன்ற குடும்பக் கதையில் நடித்ததன் மூலம், கிராமத்து பெண் கதாபாத்திரத்தையும் திறம்பட கையாள முடியும் என்பதை நிரூபித்தார். தொடர்ந்து மாஃபியா போன்ற திரில்லர் படங்களில் நடித்த அவர், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நடிகையாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

அதேபோல் ஓ மணப்பெண்ணே திரைப்படத்தில் அவரது நடிப்பு இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் குருதி ஆட்டம் மற்றும் பொம்மை போன்ற படங்களின் மூலம் பல்வேறு கதைகளில் நடித்த அவர், இன்று தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்று வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

சமூக வலைதளங்களில் கிளம்பிய விவாதம்

ஒரு சாதாரண புகைப்படம் எப்படி பெரிய தவறான புரிதலாக மாறுகிறது என்பதற்கே இது ஒரு உதாரணமாக உள்ளது. ஒரு பக்கம் உண்மை தெரிந்த ரசிகர்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், மற்றொரு பக்கம் முழு விவரம் அறியாமல் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+