கண்ணடிச்சு.. உதடு கடிச்சு.. செம லுக் விட்ட "ரோஜா".. சொக்கிப் போன ரசிகர்கள்!
சென்னை : ராத்திரி வேளையில் விளக்கு வெளிச்சத்தில் தேவதையாக மின்னும் பிரியங்காவை பார்த்ததும் அடடா இது நம்ம ரோஜா வா நாங்க கூட தேவதையோனு யோசித்தோம் என ரசிகர்கள் உருகி வருகின்றனர்.
ஒரு பக்கமாக நாக்கை கடித்து கண்ணை மூடி கலக்கலான போஸ் கொடுத்துள்ளார் நடிகை பிரியங்கா நல்கரி .
இரவு நேரத்தில் இவரை இப்படி பார்த்தா எங்க நிலைமை எப்படி.....என ரசிகர்கள் புலம்பியும் வருகின்றனர்.

குறையாத ரோசா வின் வாசம்
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்கரி. தற்போது விளக்கு வச்ச நேரத்தில் விளக்கொளியில் கலக்கலாக பார்ப்பவர்களை மயக்கி இருக்கிறார். இந்த சீரியலில் இவரை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தற்போது இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் விதவிதமாக வர்ணித்து வருகின்றனர்.

எதுவுமே வேண்டாமே
இவர் ரசிகர்களின் மனதில் உயரமான இடத்தில் இருக்கிறார். இவருடைய நடிப்பை மட்டுமல்லாமல் கேரக்டரையும் புரிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் இவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இவருக்கு இவருடைய புன்னகைதான் ப்ளஸ் எப்போதும் சிரித்த முகமாக இருப்பது இவருக்கு கூடுதல் அழகு என பார்க்கும் ரசிகர்கள் பரவசமடைந்து கூறிவருகின்றனர்.

சூப்பர் ஜோடிங்க
சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் இந்த ரோஜா சீரியலுக்கு முக்கியமான காரணம் பிரியங்கா நல்கரிதான். அந்த சீரியலில் அவருடன் அர்ஜுன் கேரக்டரில் நடிக்கும் இவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்து தான் செம ஜோடி என்று ரசிகர்கள் இவர்களை ரசித்து வருகின்றனர் . அதனால் தான் இவர்களை கல்லூரி பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் ரசித்து வருகின்றனர் .

தமிழில் இதுதான் ஃபர்ஸ்ட்
வீட்டில் தன்னுடைய மகனும் மருமகளும் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காத சில மாமியார்கள் கூட இந்த சீரியலில் ரோஜாவும் அர்ஜுனும் சேர்ந்து வாழ வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர். இவர் பெங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் பல மொழிகளிலும் திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்து இருக்கிறார் . ஆனால் முதல் முதலில் ரோஜா சீரியலில் காலடி எடுத்து வைக்கும் போது இவருக்கு தமிழ் தெரியாததால் ரொம்பவே பயந்து இருக்கிறார் .

அதிக வரவேற்பு
ஆனால் தமிழ் ரசிகர்கள் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை அவர் அறியவில்லை .ஆனால் தற்போது இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து இவர் ரொம்பவே சந்தோஷம் அடைந்து இருக்கிறார் .எப்பவுமே வந்தாரை வாழவைக்கும் ஊர் தானே நம்ம என்பதை தமிழ் ரசிகர்கள் நிரூபித்து விட்டனர். இவர் சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் பல விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார் .

அடிக்கடி போட்டோஷூட்
அதனால் சூட்டிங் இல்லாத நேரங்களில் மாடலிங் போட்டோ ஷூட் களை எடுத்து குவித்து வருகிறார் . அதனால் அடிக்கடி இவர் வெளியிடங்களுக்கு சென்று வருகிறார் .ஆனால் செல்லும் இடங்கள் எல்லாம் சில பல போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார் .அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இவர் விதவிதமாக களமிறங்குவார்.

மாடர்ன் உடையில்
அதுபோலத்தான் தற்போது கூட லேட்டஸ்ட்டாக டிரடிஷனல் ஆக மாறிவிட்டார். சிலருக்குத்தான் மாடர்ன் உடை அழகாக இருக்கும் .ஆனால் வேறு சிலருக்கு டிரடிஷனல் உடை அழகாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் தான் எந்த டிரஸ் போட்டாலும் அழகாக இருக்கும் . அதில் இவர் கடைசி ரகம் . இவருக்கு எந்த உடை போட்டாலும் பக்காவாக செட் ஆகிவிட்டதே என அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.

ஜொலிக்கும் அழகு
தற்போது இவர் புடவையில் படு பவ்வியமாக அமர்ந்திரந்தாலும் , விளக்கு ஒளியில் இவரது முகத்தைப் பார்த்த ரசிகர்கள் அந்த ஒளியிலே தெரிவது தேவதையா இல்ல நம்ம பிரியங்கா நல்கரியா என்று குழம்பி வருகின்றனர் .அவரை நினைத்து உருகி உருகி கமெண்ட்களையும் போட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications