நீங்க அதை சொல்லாதீங்க.. கோடிகளில் கொட்டி பான் இந்தியா படங்கள் எதுக்கு? பிரியாமணிக்கு செம துணிச்சல்
சென்னை: பான் இந்தியா படங்கள் இந்தியா அளவில் கவனம் பெற்று வருகின்றன.. பாகுபலி, கேஜிஎப் படங்களின் கதைகள் மொழி தாண்டி ரசிக்கப்பட்டதால் வசூலில் சாதனை படைத்தன.. அதனால்தான், இந்த படங்களின் 2ம் பாகங்களும் மிகுந்த வரவேற்பை பெற்றன. எனவே தயாரிப்பாளர்களும், மேற்கண்ட படங்களுக்குக் கிடைத்த வரவேற்பால், பெரியபட்ஜெட் படங்கள் அனைத்தையும் டப் செய்து மற்ற மொழிகளிலும் வெளியிட முடிவு செய்தனர்.. ஆனால் கோடிகளில் கொட்டி படத்தை எடுத்துவிட்டு, நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.. இந்நிலையில் பிரபல நடிகை பிரியாமணி பான் இந்தியா படங்கள் பற்றி சொல்லியிருக்கும் கருத்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபகாலமாகவே பான் இந்தியா படங்கள் அதிக கவனத்தை பெற்று வருகின்றன.. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் படங்களே "பான் இந்தியா படங்கள்" ஆகும்..

அதாவது வெறுமனே ஹிந்தி மொழி படங்கள் மட்டுமல்லாமல், மற்ற மொழிப்படங்களும் கலந்து வெளியிடப்படும்போது "பான் இந்தியா" படங்களாக அவைகள் கருதப்படுகின்றன.
பிரபலமான ஹீரோக்கள்
சுருக்கமாக சொல்லப்போனால், குறிப்பிட்ட மொழியில் பிரபலமான ஹீரோ, சில மொழிகளில் பிரபலமான ஹீரோயின், வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த கேரக்டர் நடிகர்கள், பிரபலமான இசையமைப்பாளர், கேமராமேன், காமெடி நடிகர்கள் என கலவையாக சேர்த்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களே பான் இந்திய படமாக கருதப்படுகிறது.. இதனை பல்வேறு மொழிகளில் வெளியிடும்போது, வருமானமும் அதிகமாக கிடைக்கிறது..
இவை சமீப காலமாக முக்கியத்துவம் பெற்றுள்ளதற்கு காரணம், இந்த படங்களின் கமர்ஷியல் வெற்றியானது, உலகளவில் ரசிகர்களை ஈர்க்கிறது. மேலும், பான் இந்தியா படங்கள் அனைத்து மாநில டாப் ஸ்டார்களையும் ஒரே கதையில் சேர்க்கக்கூடிய வாய்ப்புகளை வழங்குகின்றன. இதனால், பல மாநிலங்களில் உள்ள ரசிகர்களுக்கு இது குஷியையே தந்துவிடும்.
அத்துடன், பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நம்முடைய நாடு, இப்படியான பான் இந்தியா படங்கள் மூலம் உலக அளவில் இந்திய சினிமாவை எடுத்து செல்ல உதவுகின்றன.. இதனால் வெவ்வேறு பாரம்பரியங்களை, வாழ்க்கை முறைகளை புரிந்துகொள்ள முடியும்.
பருத்தி வீரன் முத்தழகு பிரியாமணி
இத்தனை நல்ல அம்சங்கள் இருந்தாலும், பல பான் இந்தியா படங்கள் தோல்வியடைந்துவிடுகின்றன. காரணம், பான் இந்தியா படம் என்றால கிராபிக்ஸ், பிரம்மாண்டம் போன்றவை மூலமே நம்ப வைப்பது அதிகமாகிவிட்டதாம்.. அதுமட்டுமல்ல, எல்லோருக்குமாக படத்தை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு, யாரையுமே பிரதிபலிக்காத படங்களாக எடுப்பதாக முணுமுணுக்கப்படுகின்றன..
இந்நிலையில் நடிகை பிரியாமணி பான் இந்தியா படங்கள் குறித்து தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.. பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிப்புக்காக தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளை பெற்றவர்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்தவர். தற்போது ஒரு சில படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்..
அந்த வார்த்தையை நிறுத்துங்க
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரியாமணி, பான் இந்தியா படங்கள் குறித்து பேசும்போது, '''பான் இந்தியா' என்ற சொல்லை பயன்படுத்துவதையே முதலில் நிறுத்த வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள். அப்படியிருக்கும்போது எதுக்காக அந்த வார்த்தை?
இந்தி நடிகர் தென்னிந்திய படங்களில் நடித்தால் அவரை தென்னிந்திய நடிகர் என்று சொல்கிறோமா? ரஜினி, கமல், தனுஷ் போன்றவர்கள் பல மொழிகளில் நடிக்கிறார்கள். அவர்களை யாருமே பான் இந்தியா நடிகர்கள் என்று சொல்லவில்லையே?
எனவே இங்கு மொழி முக்கியமல்ல.. நடிக்கும் கதாபாத்திரங்களே முக்கியம்.. இனிமேல் 'பான் இந்தியா' என்ற வார்த்தையை தயவுசெய்து யாரும் சொல்லாதீங்க" என்றார்.












Click it and Unblock the Notifications