அய்யோ 13 வருஷம் ஆச்சு.. தந்தையை நினைத்து மேடையில் கண்கலங்கிய பிரியங்கா!
சென்னை: தனது தந்தையை நினைத்து தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே மேடையிலேயே கண்கலங்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.
நடிகைகளுக்கு இணையாக தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா மக்களின் பேவரைட் தொகுப்பாளினியாக உள்ளார்.
அவரது நிகழ்ச்சியை கண்டால் வயிறு வலிக்க சிரிப்பது கேரண்டி. அந்த அளவுக்கு அவரது பேச்சும் சுட்டித்தனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனாலேயே அவர் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்துவிட்டார்.

விஜய் டிவி
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல சீசன்கள் கடந்து பிரியங்காதான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரவீன் விஜய் டிவி தயாரிப்பு குழுவில் பணியாற்றி வருபவர்.

பிரியங்கா
திருமணத்திற்கு பிறகும் பிரியங்கா தனது தொகுப்பாளினி பணியை விடாமல் செய்து வந்தார். விஜய் டிவியில் ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யார், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கினார். மேலும் கலக்க போவது நிகழ்ச்சியின் நடுவராகவும் பிரியங்கா பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5
பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொள்ள பிரியங்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எவிக்ஷனில் சிக்கினாலும் மக்கள் அவரை காப்பாற்றி வந்தனர். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி
இதையடுத்து அவர் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணிகளை தொடங்கினார். ஆனால் இவர் ஷூட்டிங்கிற்கு வராமல் தனது பிக்பாஸ் போட்டியாளர்களான அபிஷேக், மதுமிதா உள்ளிட்டோருடன் பாவனியின் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு பிரியங்கா சென்றுள்ளார்.

மைனா நந்தினி
இதனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து அவரை நீக்கிவிட்டு மைனா நந்தினியையே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு விஜய் டிவி கூறிவிட்டதாக தகவல்கள் வந்தன. இந்த நிலையில் பிரியங்காவிற்கு ஐகானிக் வுமன் என்ற விருது கிடைத்துள்ளது. அதாவது தொகுப்பாளினியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஐகானிக் வுமன் விருது
அந்த விருதை பெறும் போது பிரியங்கா பேசுகையில் பல தடைகளை தாண்டிதான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன். 13 ஆண்டுகள் தினமும் டிவியில் இந்த முகத்தை மக்கள் பார்த்துள்ளார்கள். அதற்கு பெருமைப்படுகிறேன். எத்தனை கவலை இருந்தாலும் மேடை ஏறியது, மற்றவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். எத்தனை கவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறைத்துக் கொண்டு இருப்பேன்.

கண்கலங்கிய பிரியங்கா
இதெல்லாம் என் அம்மாவிடம் நான் கற்றுக் கொண்டது. என் அப்பாவின் நினைவு என் அம்மாவிற்கு வந்து விட்டால் அதை என்னிடமோ என் தம்பியிடமோ காட்டிக் கொள்ள மாட்டார். அவர் இல்லை என்றால் நாங்கள் இல்லை என கூறிய பிரியங்கா அப்பாவை நினைத்து உருக்கமாக பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications