பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கதறி அழுத பிரியங்கா...இப்படி ரசிகர்களை பீல் பண்ண வைத்து விட்டாரே
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிரியங்கா தற்போது கதறி அழுத வீடியோ அனைவரையும் பீல் பண்ண வைத்துள்ளது.
Recommended Video
பிரியங்காவிற்க்கு இப்படி ஒரு நிலைமையா??மனதிற்குள் இவ்வளவு சோகங்களா என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ரன்னர் ஆக வெற்றி
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்துகொண்டிருந்த பிரியங்கா தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததும் அவருடைய ரசிகர்கள் இந்த முடிவு வேண்டாம் என்று அட்வைஸ் மழை பொழிந்து வந்தார்கள். யார் பேச்சையும் கேட்காமல் தன்னுடைய முடிவில் இறுதியாகவும், உறுதியாகவும் இவர் செயல்பட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து விட்டார். ஆரம்பத்திலிருந்தே இவர் விஜய் டிவியின் ப்ராடைட் அதனால் விஜய்டிவி இவரைத்தான் வெற்றிபெற வைக்கும் என்று பலரும் இவருக்கு எதிராக கமெண்டுகளை அனுப்பி வந்தனர்.

விரைவில் வெளியாகும் திரைப்படங்கள்
இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்கள் தற்போது குதூகளித்து வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் மத்தியில் இவருக்கு கிடைத்த வரவேற்பு சினிமா துறையில் தற்போது கிடைத்திருக்கிறது. சினிமாக்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும், இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது. எப்போது இவருடைய திரைப்படம் வெளியாகும் என்று ஆர்வத்தோடு காத்து இருந்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.

மனதில் ஏற்பட்ட சந்தேகம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதும் இவருக்கு இந்த நிகழ்ச்சியில் மீண்டும் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைக்குமா?? என்பது அடிக்கடி மனதில் எழும் சந்தேகங்கள் தான். தன்னுடைய சந்தேகங்களை இவருடைய நண்பரான மாகாபாவிடம் கூட இவர் கேட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவர் எப்படியும் வெளியே வந்த பிறகு மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவந்தனர்.

சிவாஜிக்கே டப் கொடுப்பாங்க போல
தற்போது மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பி விஜய்டிவி செட்டுக்குள் இவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பல மாதங்களுக்கு பிறகு இவர், தான் அதிகமாக ரசித்த இடத்தை மீண்டும் பார்த்த நேரத்தில் உணர்ச்சி பெருக்கெடுத்து கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நையாண்டி தனத்தோடு சேர்ந்து ஒவ்வொரு இடங்களாக தொட்டு தழுவி படையப்பா படத்தில் சிவாஜி கணேசன் செய்ததை விடவும் ஓவர் ஆக்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கலாய்த்தாலும் இவருடைய அழுகையை பார்த்து பீல் பண்ணி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications