பிரியங்காவின் டான்ஸ் தெரியுது, ராபர்ட்டுக்கு வாய் திறக்கல? ஆம்புலன்ஸை சுற்றிய மதன் பாப் மனைவி! பாவம்
சென்னை: ரோபோ சங்கர் இறந்தபோது, அவருடைய மனைவி பிரியங்கா, தன்னுடைய கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடி தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தார்.. கணவர் மீது பிரியங்கா கொண்டிருந்த காதலின் வெளிப்பாடு என்று பலரும் சொல்லி வரும் நிலையில், ஒருசிலர் இந்த துக்கத்தில் பிரியங்கா இப்படி நடனமாட வேண்டுமா? என்று விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இதுகுறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பிரியங்கா, தன்னுடைய கணவர் மீதான அன்பை நடனமாடி வெளிப்படுத்தியிருக்கிறார்.. கணவருக்கு தன்னுடைய கடைசி மரியாதையை செய்திருக்கிறார்.. பிரியங்கா-ரோபோ சங்கர் இருவருமே நடனக்கலைஞர்கள்.. நிறைய நடன நிகழ்ச்சிகளை செய்திருக்கிறார்கள்.. இவர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள்.. ஜோடியாகவும் நடனமாடியிருக்கிறார்கள்..

இவர்கள் இருவருமே அந்நியோன்யமான தம்பதி.. ரோபோ சங்கர் இந்த உயரத்துக்கு வர காரணமே பிரியங்காதான் என்று பல பிரபலங்கள் பேட்டிகளை தந்து வருகிறார்கள். திருமணநாள், பிறந்தநாள் என்றாலும், சின்னத்திரை கலைர்களை தங்களுடைய வீட்டுக்கு அழைத்து, விருந்து தந்து மகிழ்விப்பதை, ரோபோ தம்பதியினர் வழக்கமாக வைத்திருந்துள்ளனர்..
அன்னியோன்யமான தம்பதி
மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.. மகளின் திருமணத்தின்போது, ரோபோ சங்கரும், பிரியங்காவும் பிரம்மாதமாக நடனமாடியிருந்தனர்.. இந்திரஜாவின் கணவரும் நடனமாடினார்.. மொத்தத்தில் இதுஒரு கலைக்குடும்பம்.
2 வருடங்களுக்கு முன்பிருந்தே ரோபோ சங்கருக்கு உடல்நலம் பாதித்துவிட்டது.. அப்போது ரோபோ சங்கர் படுத்திருக்கும்போது, மூச்சு இருக்கா? இல்லையா? என்று பயந்துகொண்டே அருகில் சென்று பிரியங்கா பார்ப்பாராம்.. தீவிர நோய்த் தாக்குதலில்
ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா
ரோபோ இருந்தபோது, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் பிரியங்கா. தீவிர மருத்துவ சிகிச்சைகளை தந்து, ரோபோவின் உயிரை தன்னுடைய கடுமையான முயற்சிகளால் 2 வருடங்களுக்கு முன்பு மீட்டெடுத்தது பிரியங்காதான். தமிழகத்திலுள்ள அத்தனை அம்மன் கோயில்களுக்கும் சென்று விரதமிருந்து, பூஜைகளை செய்தார் பிரியங்கா.. இதற்கு பிறகு உடல்நிலை தேறியும் வந்தார் ரோபோ.
இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன்புதான், கவுதம் வாசுதேவன் படத்திற்கான பூஜை நடந்துள்ளது.. அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ரோபோ சங்கர் நடிக்கவிருந்தார்.. பூஜை போட்ட முதல்நாள் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே உடம்பில் ஏதோ அவருக்கு அசௌகரியம் தென்பட்டுள்ளது.. எனினும், முதல்நாள் ஷூட்டிங்கிலேயே கிளம்பி சென்றால் நன்றாக இருக்காது என்று நினைத்து, யாரிடமும் தன்னுடைய உடல்நல பிரச்சனையை சொல்லாமல், மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அங்குமிங்கும் நடந்தவாறே இருந்துள்ளார்..
கணவனுக்கு பிரியங்காவின் இறுதி மரியாதை
பிறகுதான் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துவிடவும், அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.. சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்..
25 வருடம் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கணவனை இழந்த மனைவிக்கு எப்படி இருக்கும்? அந்த வீட்டை விட்டு கடைசியாக அவருக்கு பிரியாவிடை தரப்படுகிறது. இனிமேல் அந்த கணவனை பார்க்கவே முடியாது என்பதால், தன்னுடைய துக்கத்தை நடனமாடி வெளிப்படுத்தினார் பிரியங்கா..
ஆம்புலன்ஸை சுற்றிய மதன்பாபு மனைவி
பல பேர் தங்களுடைய துக்கங்களை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.. மதன்பாபு இறந்தபோது அவரது மனைவி, அந்த ஆம்புலன்ஸையே பித்து பிடித்ததுபோல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.. இதுபோன்று எமோஷனல்களின் வெளிப்பாடு வேறு வேறு விதங்களில் இருக்கலாம்.
அந்தவகையில், கணவனுக்கு நடனமாடி மரியாதை செலுத்தினார் பிரியங்கா.. கொஞ்சம் விட்டால் வெடித்து கதறியிருப்பார்.. ஆனால், இப்படி நடனமாடி தன்னுடைய துக்கத்தையும் குறைத்து கொண்டார் பிரியங்கா.. இதை எதற்காக விமர்சனம் செய்ய வேண்டும்? ஒருவரின் தனிப்பட்ட உணர்வு, வேதனையை எப்படி விமர்சிக்கலாம்? இப்படி குறை சொல்வது மிகவும் தவறானது.
ராபர்ட் மாஸ்டர் தெருவெல்லாம் நடனம்
சமீபத்தில் ராபர்ட் மாஸ்டரின் அம்மா இறந்தபோது, தெருவெல்லாம் சவ ஊர்வலத்தில் ராபர்ட் மாஸ்டர் நடனமாடி கொண்டே சென்றார்.. காரணம், அவரது அம்மா ஒரு டான்சர், அப்பா ஒரு டான்சர், அக்கா ஒரு டான்சர், இவரும் ஒரு டான்சர்.. அதனால் தன்னுடைய அம்மாவுக்கு செலுத்தும் கடைசி மரியாதையாக நடனமாடினார்.
ராபர்ட் மாஸ்டரை யாருமே அப்போது விமர்சனம் செய்யாமல், இப்போது ரோபோ சங்கர் மனைவி டான்ஸ் ஆடியதும் விமர்சிப்பது ஏன்? ஒரு பெண் என்பதால் இந்த விமர்சனங்கள் சொல்லப்படுகிறதா? ஆணுக்கு பெண் சமம் என்று புரட்சி பேசுவதெல்லாம், வெறும் பேச்சுதான்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications