கோபத்தை காட்டிய அண்ணாச்சி...இந்த மாதிரி பிரியங்காவை பார்க்க கஷ்டமாக இருக்கு.. ரசிகர்களின் குமுறல்
சென்னை: அண்ணாச்சி, பிரியங்காவின் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படையாக பேசியதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து விட்டனர்.
ஜாலியாக பேசுகிறேன் என்று பிரியங்கா பேசியது தற்போது பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்ணாச்சியின் கோபத்தை பார்த்து பிரியங்காவின் முகம் வாடிப்போனதை பார்த்ததும் ரசிகர்களால் தாங்க முடியவில்லையாம்.

சுயரூபம் வெளி வருதா
பிக்பாஸ் அதாவது சீசன் தொடங்கிய முதல் வாரத்தில் எப்போதுமே ஜாலியாகவும், கலகலப்பாகவும் இருந்த போட்டியாளர்கள் தற்போது தங்களுடைய சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். காரணம் ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் கேலியும் கிண்டலுமாக இருந்தவர்கள் தற்போது எதிலும் குற்றம் குறை காண ஆரம்பித்து விட்டார்கள்.

பிரபலமான போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தாலும் ஒருசில போட்டியாளர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமானவர்கள் தான். அதில் தொகுப்பாளர் பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சியும் அடங்குவர். இவர்கள் இருவரும் காமெடி பேச்சாலும், டைமிங் காமெடியாலும் அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தவர்கள், தற்போது வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இதை பார்த்ததும் ரசிகர்கள் என்னதான் நடக்குது அங்கே என்று குழம்பி வருகின்றனர்.

தொடரும் கருத்து வேறுபாடு
டாஸ்க் என்று வந்தால் அதில் தன்னுடைய திறமையை காட்டி வரும் பிரியங்கா தன்னுடைய வழ வழ பேச்சு எப்போதுமே மாற்றிக் கொள்வது இல்லை. அதை பார்த்து யார் என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்வதும் இல்லை. அது போல தான் தற்போது அண்ணாச்சியை இவர் கலாய்த்திருக்கிறார். ஆனால் அது தனக்கு பிடிக்கவில்லை என்று முகத்துக்கு நேராக அண்ணாச்சி பேசியதை பார்த்ததும் பிரியங்காவின் முகம் சோகத்தில் ஆழ்ந்து விட்டது. எப்போதுமே ஜாலியாக இவரைப் பார்த்து வந்த இவருடைய ரசிகர்கள் தற்போது இந்த மாதிரி ஒரு நிலைமையில் அவரை பார்த்ததும் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
ஆரம்பத்தில் பிரியங்கா, அண்ணாச்சியை கலாய்க்கிறேன் என்கிற பெயரில், 'ஏல என்ன சொல்ற' என்று எல்லாம் அவருடைய பாணியிலே பேசி அவரை கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம கண்டுகொள்ளாத அண்ணாச்சி, தற்போது இது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியது தான் சிலருக்கு வினோதமாகவும் இருக்கிறது. இதுவரைக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரில் இருந்த இவர்கள் இருவரும் சில நாட்களாக செய்யும் ஒரு சில செயல்கள் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்த மாதிரி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கிறது!!?? என்று இவர்களுடைய நலம் விரும்பிகள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications