ரச்சிதா மகாலட்சுமி சட்டையுடன்? "போய் உங்க கண்ணை செக் பண்ணுங்க"! வசூல் மழையில் ஃபயர்.. பிரபலம் பேட்டி
சென்னை: சமூக விழிப்புணர்வுக்காக, குறிப்பாக இளம்பெண்களின் விழிப்புணர்ச்சிக்காக ஃபயர் படத்தை எடுத்திருப்பதாக இயக்குனரும், தயாரிப்பாளருமான சதீஷ் கூறியிருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்திருக்கிறார்
AG Modern Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு டிவி சீரியல்களில் கதாநாயகியாக நடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர், சின்னத்திரை சரோஜாதேவி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

ஆபாசமாக நடித்திருக்கிறார்
சமீபத்தில் இவர் சதீஷ்குமார் எழுதி இயக்கிய ஃபயர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.. கதாநாயகனாக பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார்.. பாலாஜி முருகதாஸுடன் ரச்சிதா மகாலட்சுமி, சட்டை, பேன்ட்டுடன் பாடல் காட்சியில் ஆபாசமாக நடித்திருக்கிறார். இந்த பாடல் காட்சி இப்போது வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனாலும் சிலர் ரச்சிதா மகாலட்சுமி, ஆபாசமாக நடித்திருப்பதை புகாராக சொல்லி வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்து ரச்சிதா மகாலட்சுமி பேசும்போது, "இந்த படத்தின் கதை தெரிந்துதான் நான் நடித்தேன்.. இந்த கதைக்கு அது தேவைப்பட்டது. அதனால் அந்த காட்சிகளில் நடித்தேன்.. எனவே, எனக்கு அது ஆபாசமாக தெரியவில்லை. ஆபாசமாக தெரிந்தவர்கள், அவரவர் கண்களை பரிசோதித்து கொள்ளுங்கள்" என்று சொல்லியிருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.
வசூலை அள்ளி வருகிறது
ஃபயர் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி மட்டுமல்ல, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், காயத்திரி ஆகிய 3 பெண்களுடனும், ஆபாசமாக உடலுறவு காட்சிகளிலும் நடித்து, வாழ்ந்து, தூள் கிளப்பியிருக்கிறார் பாலாஜி முருகதாஸ். சமீபத்தில் வந்த படங்களிலேயே, வசூலை அள்ளி குவித்து கொண்டிருக்கிறது ஃபயர்.
இந்த படம் வெறும் கவர்ச்சி படமல்ல.. இன்றைய இளம் பெண்கள் எந்த அளவுக்கு எளிதில் மற்றவர்களின் வலையில் சிக்கி, தங்களுடைய கற்பை இழந்துவிடுகிறார்கள், அதற்கு பிறகு, குய்யோ முய்யோ என்று அழுது புலம்புகிறார்கள். எனவே, சமூக விழிப்புணர்வுக்காக, குறிப்பாக இளம்பெண்களின் விழிப்புணர்ச்சிக்காக இந்த படத்தை எடுத்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ஃபயர் பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சதீஷ்" என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
சமூக விழிப்புணர்வுக்கான படம்
இந்த படம் நாளை அதாவது பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது.. தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜேஎஸ்கே சதீஷ், பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி, விழிப்புணர்வு காட்சிகள் அடங்கிய நிஜ சம்பவத்தை பின்னணி கொண்ட படமாக உருவாகியிருக்கிறதாம். எனவே ஒருபக்கம் இதற்கு ஆதரவுகள் கிடைத்து வந்தாலும், மறுபக்கம் 4 ஹீரோயின்களுமே கவர்ச்சியை எல்லைமீறி கொட்டியிருப்பது சலசலப்புகளை உருவாக்க வருகிறதாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications