சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர்.. கண்ணீரை காணிக்கையாக்கிய சீரியல் நடிகை!
சென்னை: காமெடியிலும் பகுத்தறிவையும் சிந்தனையையும் வளர்த்த சின்ன கலைவாணரின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் அவருடைய ரசிகர்கள் துக்கத்தில் இருக்கும் நிலையில் நடிகர்களும் தங்களுடைய துயரத்தை பகிர்ந்து வருகின்றனர் .
Recommended Video
அதிலும் சீரியல் நடிகை ரக்ஷிதா கண்ணீரோடு அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர் .இதற்கு கூடுதல் துயரம் தரும் வகையில் பலருடைய இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.

தொடரும் இழப்புகள்
அதிலும் தொடர்ந்து திரைத்துறையில் பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன கடந்த வருடமும் சரி இந்த வருடத்திலும் சரி பல முன்னணி நடிகர்களையும் திறமையானவர்களையும் இந்த நாடு இழந்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது திடீரென நெஞ்சுவலி யினால் உயிரிழந்த நடிகர் விவேக்கின் மரணமும் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

சிரிக்க வைத்தவர்
இவர் தன்னுடைய சோகத்தை மறைத்து பல பேருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி தங்களுடைய கவலைகளை மறக்க வைத்து அவர்களை தன்னை மறந்து சிரிக்க வைக்கும் அளவிற்கு காமெடியாளும் அந்த காமெடியிலும் சமூக சிந்தனைகளை பகுத்தறிவினையும் பார்ப்பவர்களுக்கு வளர்க்கும் விதமாக தன்னால் முடிந்த அளவிற்கு கருத்துக்களை கூறியிருக்கிறார்.

வேதனையில் ரசிகர்கள்
இவருடைய இறப்பை கேள்விப்பட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் அவருடைய ரசிகர்கள் அவருக்கு கண்ணீரினை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். ரசிகர்களைப் போலவே நடிகர் நடிகைகளும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர் .அதிலும் திரைத்துறை இவரை மிஸ் பண்ணி விட்டவிட்டது என பலரும் கமெண்ட் போட்டு இவருக்கு அஞ்சலி செலுத்த வரும் நிலையில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் ரக்ஷிதா தன்னுடைய மனதில் இருக்கும் வலிகளை கண்ணீரினால் வெளிக்காட்டி கவலையோடு வீடியோ வெளியிட்டிருக்கிறார் .

வருத்தத்தில் ரசிகர்கள்
இதை பார்த்ததும் பதறி போன அவருடைய ரசிகர்கள் தயவு செய்து இந்த மாதிரி காலை வேலையில் கேள்விப்பட்டதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் நீங்க அழுகிறதை பார்க்கும்போது மேலும் துக்கம் ஆக இருக்கிறது என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வருடம் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்துக்கொண்டிருந்த சித்ராவின் மரணம் இவரைப் பெரிதும் பாதித்து இருந்த நிலையில் அந்த துயரத்திலிருந்து மீளாமல் இருக்கும் நிலையில் மீண்டும் இப்படி ஒரு மரணமா என அனைவரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரட்சிதாவின் வேதனை
எப்போ யார் இருப்பார் யார் போவங்க என்று தெரியவில்லை என கேப்ஷன் போட்டு ரக்ஷிதா வெளியிட்ட வீடியோக்களை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அது உண்மைதான் எங்கள மாதிரி ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக எவ்வளவுதான் கஷ்டத்தோடு இருக்கும்போது நீங்கள் அதை மனதிற்குள் வைத்துக்கொண்டு வெளியே சிரித்து நடித்துக் கொண்டிருந்தாலும் உங்களுடைய வேதனைகளும் எங்களுக்கு நன்றாக தெரிகிறது.

சந்தோஷமா இருங்க
ஆனால் திடீரென இப்படி ஒரு நாள் எல்லோரும் போய்தான் ஆகவேண்டும் கடைசி வரைக்கும் சந்தோசமாக அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டு அவர் போய் விட்டார் அவருக்காக நாம் அழுதால் அது அவருக்குப் பிடிக்காது அவருடைய ஆசை கனவான இயற்கையை பாதுகாத்து வளர்த்தாலே போதும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications