அழகுன்னா அழகு.. பெண்களே கண்டு பொறாமைப்படும் பேரழகு.. வேற லெவலில் ரட்சிதா!
சென்னை: சீரியல் பிரியர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக கலக்கிக் கொண்டிருந்த ரட்சிதா இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலிலும் பெரும் ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இந்த சீரியலுக்காக இவர் கொடுத்திருக்கும் கலக்கல் போஸ்ட் வேற லெவலில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு சர்ப்ரைஸ் வேற இருக்கு என்று கூறியிருக்கிறார். அது என்னவாக இருக்கும் என்று பல ரசிகர்களும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தற்போது மகாவாக கலக்கிக் கொண்டிருக்கும் ரட்சிதா மகாலட்சுமிக்கு ரக்ஷிதா என்று பெயரும் உண்டாம். இந்த பெயருக்கு பின்னாடி ஒரு ரகசியமும் வைத்திருக்கிறாராம்.

ரசிகர்கள் கூட்டம்
இவங்க வீட்டில் இவர் இரண்டாவது பெண்ணாக இருப்பதால் இவர் எதுவுமே கிரியேட்டிவ் ஆக பண்ணவேண்டும் என்று தன்னுடைய பெயரில் ரக்ஷிதா என்று மாற்றிக் கொண்டாராம். ரக்ஷிதா என்பதற்கு கிரியேட்டிவ் என்றும் ஒரு பெயர் உண்டாம். இவருடைய ஓவர் எக்ஸ்பிரஷனுக்கும் நடிப்புக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

கன்னடத்தில் நடிப்பு
இவர் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளி கல்லூரியும் முடித்திருக்கிறார். காலேஜ் படிக்கும்போது படங்களில் நடிக்க வேண்டும் என்றுதான் ஆசையாம். அதன் காரணமாகவே இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீரியல்கள் மட்டுமல்ல கன்னடத்திலும் தமிழிலும் இவர் படமும் நடித்திருக்கிறாராம். இவருக்கு கன்னடத்திலும் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

தமிழில் முதல் சந்திப்பு
இவருடைய போட்டோஸ்கள் வைரலாக பரவி வந்ததாம். அதன் மூலமாக தான் இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முதலில் இவருக்கு விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .ஆனால் அந்த சீரியலில் இவர் டார்க் ஸ்கின்னில் தான் நடித்து இருக்கிறார். இதில் இவர் கருப்பாக நடிக்க வேண்டும் என்று சொல்லும் போது ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறாராம் .

ஏர்றம் கொடுத்த சீரியல்
பெங்களூரில் இருந்து வந்திருக்கிறோம் எப்படி இந்த மாதிரி நடிக்க இருக்குமா என்று யோசித்திருக்கிறார். இருந்தாலும் கதையின் ஆழத்தை புரிந்து அரை மனதோடு தான் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அது பிறகு அவருக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும் என்று அவருக்கு அப்போது தெரியவில்லையாம்.
முதலில் அவருக்கு தமிழில் பிரன்ட்ஸ் யாருமே கிடையாதாம். கல்யாணி மட்டும்தான் பிரண்டாக இருந்திருக்கிறார்.

கணவராக மாறிய நண்பர்
அதன்பிறகுதான் அந்த சீரியலில் அவர்கூட நடித்த தினேஷ் பழக்கமாகி இருக்கிறார் . சீரியல்களைப் பற்றி அடிக்கடி இவர்கள் இருவரும் பேசி பேசி தான் இவர்களுக்குள் காதல் வந்திருக்கிறது. இருவருமே காதலை வெளிப்படையாக சொல்லாமல் வீட்டில் தான் பேசி இருக்கிறார்கள். வீட்டிலும் சரி என்று கூறி இவர்களது காதல் திருமணத்தில் முடிந்திருக்கிறது. திருமணத்தின் போது தான் இவருக்கு இன்னொரு அதிர்ஷ்டமும் கிடைத்திருக்கிறது.

கல்யாணப் பரிசு
பிரிவோம் சந்திப்போம் 2 சீசனாக நடைபெற்று அதன் வெற்றியை தொடர்ந்து இவருக்கு இளவரசி சீரியலிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து இவர் இனி நடிக்க வேண்டாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் இவர் தனக்கு திருமணம் நடைபெறப் போகிறது. அதனால் இனி வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்,

நாடி வந்த சரவணன்
தயாரிப்பாளர்களும் சரி ஓகே என்று கூறி வேற மூன்று பேரை வைத்து டெஸ்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த கதைக்கு ஒத்து வந்த மாதிரி தெரியவில்லை. அதனால் மீண்டும் இவரிடமே வந்து பேசி இருக்கிறார்கள். இவரும் சரி ஓகே என்று சொல்லி இதில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு வரைக்கும் நடித்துவிட்டு திருமணம் முடிந்ததும் மறுபடியும் சரவணன் மீனாட்சி சூட்டிங்குக்கு சென்றுவிட்டாராம்.
இந்த சீரியல் மூலமாக இவருக்கு பெரும் பேரும் புகழும் கிடைத்திருந்தாலும் பல சர்ச்சைகளும் வதந்திகளும் இவரைப் பற்றி பரவ ஆரம்பித்தது.

தொடர்ந்து நடித்து அசத்தல்
இந்த சீரியலில் இரண்டாம் சீசன் மூன்றாம் சீசனில் இவர் நடித்திருந்தார். அதில் நடிகர்கள் பலர் இவருடன் இணைந்து நடித்திருந்தாலும் அவர் ஒரே கதாநாயகியாக இருந்தார். அது பல ரசிகர்கள் இவரை பற்றி தப்பாக பேசவும் வைத்தது ஒரு பெண் எப்படி மூன்றுபேரை காதலிக்க முடியும் என்றும் பலர் கலாய்த்து வந்தனர். இந்த மாதிரி சிலரின் பேச்சுக்களைக் கேட்டு இவர் பல நாள் அழுது இருக்கிறாராம் .ஆனால் இவர் மனம் தளரும் ஒவ்வொரு நேரத்திலும் இவர் கணவர் தான் இவருக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார்.

கணவருடன் நடிப்பு
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நாச்சியார்புரம் என்னும் சீரியலில் நடித்தார்கள். இது பெரும் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு காரணமாக இந்த சீரியலை தொடர்ந்து ஒளிபரப்ப முடியாததால் இதனை நிறுத்தி விட்டார்கள். தற்போது மீண்டும் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகாலட்சுமியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

மகா போல்டு கேரக்டர்
இந்த சீரியலில் இவரது கேரக்டர் மிகவும் போல்டானதாக இருக்கிறது. சீரியல் கதைப்படி இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் திருமணத்திற்கான திருமண காட்சி ஒளிபரப்பப்படும் நிலையில். தற்போது இவர் மணப்பெண் உடையிலும் கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு சஸ்பென்ஸ் இருக்கு
நாம் இருவர் நமக்கு இருவர் திருமணத்தில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அது என்ன சஸ்பென்ஸ் என்று நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் பலரும் பல விதமாக கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். ஆனால் என்ன மாதிரியான சஸ்பென்ஸாக இருந்தாலும் எங்களுக்குப் பிடிச்ச மாதிரி வைங்கப்பா என்றும் ரசிகர்கள் அன்புக் கோரிக்கையையும் வைத்துக் கொண்டுள்ளனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications