அந்த மேலுதட்டு மச்சம்.. கூடிப்போன அழகு.. இளசுகளுக்கு.. டைப் ஃபைட் கொடுக்கும் ரட்சிதா!
சென்னை: இன்றைய இளசுகளுக்கு கடும் போட்டியைக் கொடுக்கிறார் சரவணன் மீனாட்சி நாயகி ரட்சிதா மகாலட்சுமி என்று சொன்னால் மிகையே ஆகாது.
இப்போது இருக்கிற சூழ்நிலைக்கு மக்கள் தங்களுடைய நேரத்தை கழிப்பது தொலைக்காட்சிகளில் தான் என்று சொல்லலாம். குறிப்பா வீட்டில் இருக்கும் பெண்கள்..
சினிமாவில் இருக்கும் ரசிகர் நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால்தான் சினிமா ஸ்டார்களும் டிவி பக்கம் ஓடி வருகிறார்கள்.

அனைவருக்கும் பிடிக்கிறது
இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கிறார்கள். அவர்களுக்கு பெரும் பொழுது போக்கு என்றால் சீரியல்தான். அப்படி அதிகமாக ரசிகர்களை வைத்து இருக்கின்ற சீரியல் நடிகைகள் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'பிரிவோம் சந்திப்போம்' என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார்.

ரட்சிதா தினேஷ்
இந்த நிகழ்ச்சியில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த சீரியலில் தினேஷ் கார்த்திக் ஆகவும் ரட்சிதா ஜோதி ஆகவும் நடித்திருப்பார்கள். அந்த டைம்ல இவர்கள் இணை நட்சத்திரங்கள் மட்டுமே. பின்னர் 2013இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ரட்சிதா.

உச்சிக்குப் போனார்
இந்த சீரியல் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. மீனாட்சி கேரக்டருக்கு இவர் தான் பொருத்தம் என்கிற மாதிரி ஆகிவிட்டார். சரவணன் மீனாட்சி மூன்று பாகங்களைக் கொண்டது. அதில் இரண்டாவது மூன்றாவது பாகத்தில் இவர் நடித்துள்ளார். இவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாக அமைந்தது. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இந்த சீரியலுக்கு பிறகு இவர்களுக்கு வந்துள்ளது.

கணவருடன் ஜோடி
இதனை தொடர்ந்து மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். நாச்சியாபுரம் தான் தற்போது அவர் நடித்து வரும் சீரியல் . இதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது லாக்டவுன் டைம் என்பதால் புதியதாக எபிசோடுகளை ஷூட் செய்து ஒளிபரப்ப முடியவில்லை. சீரியல் வராமல் போய் விட்டதால ரட்சிதா சோகமாகி விட்டார்.

சும்மா இருக்காத ரட்சிதா
இதனால் வீட்டில் இருந்துகொண்டே விதவிதமாக போட்டோ எடுத்து இணையத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார் .அப்படி அவர் இப்போது அப்லோட் பண்ணி இருக்கும் போட்டோஸ் தான் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. அவருடைய போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட், பண்ணி கலாய்க்கிறார்கள். பார்க்க அப்படியே பழைய ரட்சிதாவாக இருக்கிறார்.. என்ன.. அழகுதான ரொம்பக் கூடிப் போயுள்ளது.. அம்புட்டு அழகா மாறிருக்காங்க.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications