புசுபுசு ரட்சிதாவைச் சுற்றி .. கொஞ்சி விளையாடும் குறுகுறு பப்பிக் குட்டிகள்!
சென்னை: சீரியல்களில் கதாநாயகியாக இருந்தாலும் வெள்ளித்திரை கதாநாயகிகளை போலவே பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்களில் ஒருவர் ரட்சிதா.
இவர் பல ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். வீட்டில் ஒரு குழந்தை போல பப்பி குட்டிகளை கொஞ்சி விளையாடி அதை போட்டோக்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
குழந்தைகளுக்கு எப்போதுமே நாய்க்குட்டிகள் ரொம்பவும் பிடிக்கும். அதுவும் பப்பிகுட்டி என்றால் அதிகமாக பிடிக்கும். அதே போலவே குழந்தையோடு குழந்தையாக மாறிப் போன ரட்சிதாவின் போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் பலரும் கமெண்டுகள்ஆக குவித்து வருகிறார்கள்.

கூப்பிடுங்கள் ரட்சிதாவை
கிராமத்துப் பெண் சாயலில் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் கேரக்டராக உடனே ரட்சிதாவை கூப்பிடுங்கள் என்று ரசிகர்களும் இயக்குனர்களும் சொல்லுமளவிற்கு அனைவரையும் மயக்கி வைத்திருக்கும் ரக்ஷிதா இன்ஸ்டாகிராமிலும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் பெங்களூரில் பிறந்து இருந்தாலும் தமிழ், கன்னடம் ,தெலுங்கு ,இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாக பேசுகிறார்.

திருப்புமுனை சீரியல்
பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் முதல் முதலில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். இந்த சீரியலை இவருக்குப் பெரும் வரப்பிரசாதமாகும் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அந்த அளவிற்கு அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. அந்த சீரியலில் அவரும் கல்யாணியும் ஒன்றாக நடித்திருப்பார்கள். அதில் ரக்ஷிதா கிராமத்துப் பெண்ணாகவும் அழகில் கருப்பு நிறத்திலும் நடித்திருப்பார்.

காதலித்து கல்யாணம்
முதல் சீரியலில் இவரது கேரக்டர் நன்றாக பேசும்படி இருந்தது .அதுவும் இவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அந்த சீரியலில் இவர் கூட இவரின் ஜோடியாக நடித்த தினேஷ் கோபால்சாமி அவர் காதலித்து காதலித்து திருமணமும் செய்து கொண்டார். சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்துகொண்டு இருந்தாலும் இவர் இப்ப வரையிலும் ஒன்றாகவே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

வாழ்க்கையில் வசந்தம்
இருவரும் தற்போது ஜீ தமிழில் நாச்சியார்புரம் என்னும் சீரியலிலும் ஜோடியாக நடித்து இருந்தார்கள். ஆனால் இந்த கொரோனா காரணமாக அந்த சீரியல் தொடர்ந்து ஒளிபரப்ப முடியாமல் பாதியிலேயே முடிக்கப்பட்டுவிட்டது. இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலுக்கு பிறகு மசாலா குடும்பம், இளவரசி போன்ற சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் இவருக்கு வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியிருக்கிறது.

சரவணன் மீனாட்சி சீசன் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் அளவில் வெற்றி பெற்ற சரவணன் மீனாட்சி சீசன் 2 எடுக்கப்பட்டது, அதில் இவர் மீனாட்சி கேரக்டரில் நடித்தார். இது இவருக்கு வாழ்க்கையில் பெரும் முக்கியமான தருணமாக இருந்தது. இந்த சீரியலில் இவர் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு உருவானது. சீசன் இரண்டின் வெற்றியை தொடர்ந்து சீசன் 3 ம் எடுக்கப்பட்டது.

மீனாட்சி பார்ட் 3
3வது சீசனிலும் இவரே மீனாட்சியாக நடிக்க, நடிகர்கள் மாறி மாறி வரும்போது நடிகையாக இவரே தொடர்ந்து சாதனை படைத்து வந்தார். சீரியலில் மட்டுமல்லாமல் ஜீ தமிழில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடி நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் கலந்து கொண்டு பட்டையை கிளப்பியிருப்பார். அதன் பிறகு அதே ஜீ தமிழில் இருந்தார் ஜூனியர் சீனியர் ,ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் நடுவராக பணியாற்றி இருந்தார்.

மகா வேடத்தில் கலக்கல்
கொஞ்ச நாளா இவரைக் காணாது ரசிகர்கள் இவரை தேடி கொண்டிருக்கும் போதுதான் மறுபடியும் இவருக்கு விஜய் டிவியில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இதில் மகா கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் வீட்டில் செல்ல நாய் குட்டிகளுடன் கொஞ்சி விளையாடும் வீட்டு வராண்டாவில் குனிந்தபடி இயற்கையின் அழகை ரசித்தும் போட்டோஸ் போட்டு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் ஹேப்பிதான்
எப்பவுமே இவருக்கு ரசிகர்களிடம் தனி மரியாதையும் மதிப்பும் இருக்கிறது இப்போ இவர் போட்டிருக்கும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கொஞ்சி கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். விலங்குகளிடமும் அன்பு காட்டுங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளார் இந்த மகா என்று ரசிகர்களும் அந்த போட்டோக்களைப் பார்த்து ரசித்து கமெண்ட்டுகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications