வலிச்சாதான்.. "வாரியர்" ஆக முடியும்.. நச்சுன்னு சொன்ன ரச்சிதா!
சென்னை: அடடா என்று பார்ப்பவர்கள் எல்லாம் மிரண்டு போகிற வகையில் புல்லட் பைக்கை எடுத்துக்கொண்டு கலக்கலாக ரவுண்ட் போட்ட ரச்சிதாவின் போட்டோஸ்கள் தான் தற்போது வைரலாக வலம் வருகிறது. கூடவே அவர் போட்டுள்ள கேப்ஷனைப் பார்த்து ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.
சுதந்திர தினத்திற்கு சுதந்திரமாக காற்று வாங்கும் அழகினை பார்ப்பதற்காக ஓடோடி வந்த ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பெரிய டிராபிக் ஜாம் ஆகிவிட்டதாம். இருந்தாலும் ரச்சிதா ரொம்பவே அழகா இருக்காருப்பா என்றும் பலர் சிலாகித்துக் கொள்கின்றனர்.
இப்ப இருக்குற பெண்கள் அஞ்சு கிலோ வெயிட்டையே தூக்குவதற்கு கஷ்டப்படும்போது புல்லட் பைக்கில் சும்மா கெத்தாக வலம் வரும் ரச்சிதாவிற்கு லைக்குகள் குவிகிறது. பார்க்க புல்லட் ராணி மாதிரியே இருக்கீங்க என்றும் பலர் செல்லமாக கலாய்க்கின்றனர்.

அது எல்லாம் ரீல். ..இது தான் ரியல்
நான் சீரியலில் மட்டும்தான் கதாநாயகி அல்ல நிஜத்திலும் கதாநாயகி தான் என தற்போது சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா அனைவருக்கும் நிரூபித்திருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து தான் அவருடைய ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போய் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல பல விதமான போட்டோக்களை விதவிதமான அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார். இவர் போட்டிருக்கும் போஸ்ட் பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி ஆர்ப்பரித்து வருகின்றனர். சும்மா சொல்லக் கூடாது. அந்தக் காலத்து ரிவால்வர் ரீட்டா ரேஞ்சுக்கு பார்க்கவே படு பயங்கர கெத்தாக காணப்படுகிறார் ரச்சிதா இந்த போட்டோக்களில்.

நம்புங்க பாஸ்
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதாநாயகியாக மகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும், ரச்சிதா விறுவிறு போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா இல்லையா என்று ரசிகர்களின் மத்தியில் பேரும் குழப்பம் நிலவி வருகிறது. பல பேர் இந்த சீரியலில் தொடர்ந்து இவர் தான் நடிக்க வேண்டும் என்று தங்களுடைய ஆசையை தெரிவித்து வந்தாலும், ஒரு சிலர் இவர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதால் இதில் கவனத்தை செலுத்த முடியாது. அதனால் இவர் சின்னத்திரையை விடவும் வெள்ளித்திரையில் கில்லியாக வலம் வரவேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அது வேறு இது வேறு
இதுவரைக்கும் இவரை பாவாடை தாவணியிலும் புடவையையும் பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது புல்லட்டில் மார்டன் உடையோடு இவர் வலம் வருவதை பார்த்து ஷாக்காகி இருக்கின்றனர். கெத்தாக இவர் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் சிங்கம் சிலிர்த்து விட்டது இனி போகிற பக்கமெல்லாம் இவருக்கு வெற்றி தான் என உசுப்பேற்றம் ரசிகர்கள் ஒரு பக்கம் கமெண்டுகளில் கவிதைகளை கொட்டுகின்றனர். இவரை ஹோம்லியாகவே பார்த்து வந்த சில ரசிகர்களால் திடீரென்ற இவருடைய கெத்தான போட்டோக்களை பார்த்ததும் ஷாக் ஆனாலும் இது எல்லாம் எதற்கு?? இப்படி எல்லாம் இவர் போஸ்ட் போடுகிறார் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனால் அதற்கு ரச்சிதா பதில் அளிப்பதை விடவும் அவருடைய ரசிகர்களே நெகட்டிவ் கமெண்ட் போடுபவர்களுக்கு நச்சென்று கமெண்ட் களால் தலையில் தட்டி வருகின்றனர்.

இதுதான் சுதந்திரம்
சுதந்திர தினத்திற்கு ரசிகர்கள் கேட்காமலே ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும் ரச்சிதா தன்னுடைய போட்டோவிற்கு வேற லெவல் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் வலிதான் ஒரு பெண்ணை ஒரு போராளியாக வடிவமைக்கிறது என்று தான் இந்த அளவிற்கு மாறி இருப்பதற்கு பல வலிகளும் காரணம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சுதந்திரத்திற்கும் ஒரு புது விளக்கத்தைக் கொடுத்து இருக்கிறார்.சுதந்திரம் என்பது உங்கள் சொந்த காரியத்தை செய்வது அல்ல...உங்கள் சொந்தமாக சரியானதை செய்வது பற்றியது என்று கூறியிருக்கிறார். அதாவது வலி இல்லாமல் சந்தோஷம் இல்லை, வலி இல்லாமல் வாய்ப்புகள் இல்லை, வலி இல்லாமல் வெற்றி இல்லை என்பதையே இத்தனை ரத்தினச் சுருக்கமாக அவர் கூறியிருக்கிறார்.

நேற்றுவரை பூ...தான் இப்போது புயல்
தற்போதைய சூழ்நிலையில் இவருடைய இந்த மாதிரி போட்டோக்களை பார்த்ததும் சில ரசிகர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்ப போகும் சர்வேயர் நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொள்ள போகிறீர்களா? அதனால்தான் இந்த கெட்டப்பா என்று கேட்டு வருகின்றனர். ஏற்கனவே பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டிருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா??இல்லையா??என்பதைப் பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்டாலும் ரச்சிதா அதற்கு வாய் திறக்கவில்லை. பொருத்து இருந்து பார்த்தால்தான் தெரியும் இந்தப் பூ. ..புயலாக மாறிய கதை என்று ரசிகர்களும் மனதை தேற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

அதிரடி தொடர் ஆரம்பிக்கலாமே
பேசாமல் ரச்சிதாவை வைத்து அதிரடியான ஒரு தொடரை விஜய் டிவி சட்டுப்புட்டென்று ஆரம்பித்தால் அதுவும் சூப்பராக கல்லா கட்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. அதுமாதிரியான ரோலுக்கு ஏற்ற உடல் கட்டமைப்பும், நடிப்புத் திறமையும், தோற்றமும் கொண்டவர்தான் நம்ம ரச்சிதா. எனவே இதுமாதிரியான கதைகளையும் நம்ம இயக்குநர்கள் யாராச்சும் யோசிச்சு கையில் எடுத்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை என்பதே ரச்சிதாவை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரின் அன்பு வேண்டுதலாக இருக்கிறது. சொல்லிட்டீங்கள்ள.. விரைவிலேயே விஜய் டிவி களம் குதிக்கலாம் வெயிட் பண்ணுங்க.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications