எனக்கு எமன் இந்த நடிகர் தான்! மேடையில் பேசிய ராதா ரவி! என்னை விட யாரும் கஷ்டப்பட்டு இருக்க மாட்டாங்க! உருக்கம்
சென்னை: நடிகர் ராதாரவி, சமீபத்தில் கலா மாஸ்டரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான மற்றும் உருக்கமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில், நடிகர் பிரசாந்த் தன்னுடைய படத்தைக் காணாமல் போகச் செய்ததாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டது, அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

என் வாழ்க்கைக்கு எமன் பிரசாந்த் தான்
பன்முக நடிகரான ராதாரவி, வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். கலா மாஸ்டருக்காக நடத்தப்பட்ட விழாவில் பேசிய அவர், "நான் 'சின்னமுத்து' என்ற ஒரு படத்தை ரிலீஸ் பண்ணினேன். அந்த நேரத்தில் பிரசாந்த் அவருடைய ஒரு படத்தை ரிலீஸ் பண்ணி, என்னுடைய படத்தைக் காணாமல் போக வைத்துவிட்டான். ஒரு வாரத்திலேயே அந்தப் படத்தை வெளியே தூக்கிவிட்டார்கள்," என்று வெளிப்படையாகப் பேசினார். இதைக் கேட்டு மேடையில் இருந்த பிரசாந்த் சிரித்துக்கொண்டிருந்தார்.
கலா மாஸ்டர் குறித்து ராதாரவி
கலா மாஸ்டர் பற்றிப் பேசிய ராதாரவி, "கலா மாஸ்டர் ஆரம்பத்தில் ரொம்ப ஒல்லியாக இருப்பார். அவர் தமிழ் சினிமாவில் அத்தனை நடிகர்களையும் ஆட வச்சிருக்காங்க. அவங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பிரமிப்பாக இருக்கும். இன்னைக்கு இந்த நிலைமைக்கு இருக்கிறாங்கன்னா, அவங்க எவ்வளவு எதிர்ப்பையும், எவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி வந்திருப்பாங்க. ஒருமுறை என்கிட்ட பேசும்போது, 'வாழ்க்கையில் நான் அனுபவித்த கஷ்டங்கள் வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது' என்று சொன்னாங்க. அது உண்மைதான். அந்தளவிற்கு கலா மாஸ்டர் கஷ்டப்பட்டிருக்காங்க," என்று உருக்கத்துடன் பேசினார்.
"நான் கூட அவருடைய கணவரிடம், 'நீங்க வீட்ல கணவரா இருக்கீங்களா இல்ல மனைவியாக இருக்கீங்களா?' என்று கிண்டல் செய்வேன். காரணம், கலா மாஸ்டர் அவ்வளவு ஆளுமையோடு இருப்பாங்க. அவ்வளவுதான், என்னையே சில இடங்களில் டான்ஸ் ஆட வைத்திருக்கிறார்," என்று ராதாரவி அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
கலா மாஸ்டர் குறித்துப் பேசிய மற்ற பிரபலங்கள்
கலா மாஸ்டரின் நடனம் மற்றும் ஆளுமை குறித்துப் பல நடிகர்களும் பிரபலங்களும் பேசியுள்ளனர்.
ரஜினிகாந்த்:"கலா மாஸ்டர் நடனம் சொல்லிக் கொடுக்கும்போது, அவர் ஒரு குருவாகத் தெரிகிறார். அவருடைய நடன அசைவுகள் மிகவும் தனித்துவமானவை," என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசன்: "கலா மாஸ்டர் ஒரு சிறந்த நடன இயக்குனர். அவர் பல வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என்றால், அதற்கு அவருடைய கடின உழைப்பும், திறமையும் தான் காரணம்," என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கலா மாஸ்டர், தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடன இயக்குனராக வலம் வருவதோடு, பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
அதுபோல கே பி ஒய் பாலா உட்பட பலர் கலா மாஸ்டர் தங்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவரால் உதவி பெற்ற பலர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் செய்த உதவிகள் மற்றும் அவர் தற்போதும் செய்து கொண்டிருக்கும் உதவிகள் போன்றவற்றையும் வெளிப்படையாக பேசியிருந்தனர். சிலர் கலா மாஸ்டரை ட்ரோல் செய்திருந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பயணத்தில் அடுத்தடுத்து வெற்றிகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications