கட்டு கட்டாக பணத்தை எடுத்து ராகவா லாரன்ஸ் பண்ண வேலை.. ரூபாய் நோட்டு அபிஷேகம்.. மாற்றம் தந்த மாற்றம்
சென்னை: ரயில்களில் தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக இனிப்புகளை விற்று பிழைப்பு நடத்தி வரும் ஒரு முதிய தம்பதியை பற்றி கேள்விப்பட்ட ராகவா லாரன்ஸ், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி சமீபத்தில் அறிவித்திருந்தார்.. அந்த முதிய தம்பதிகளின் தொடர்பு விவரங்கள் தெரியாததால், அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார்.. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் செய்துள்ள சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.தன்னுடைய தனித்துவமான டான்ஸ் அசைவுகளால் அமர்க்களம் படத்தில் அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ்.. ராகவா லாரன்ஸ் நடன கலைஞராக இருந்து மெல்ல மெல்ல உழைப்பால் டான்ஸ் மாஸ்டராக உயர்ந்தவர்.. 'முனி' படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்ததுடன், அதில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார்..
காஞ்சனா, முனி வெற்றியையடுத்து, பேய், அமானுஷ்ய படங்களிலேயே முழு கவனத்தை செலுத்தினார்.. காஞ்சனா உள்ளிட்ட படங்களை எடுத்து, அதில் வெற்றியையும் பெற்றார்..

இதையடுத்து டான்ஸ் மாஸ்டர், நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர், என அத்தனை துறைகளிலும் வெற்றி மகுடம் சூடியிருக்கிறார்.. ஆனால் ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய உதவும் குணத்தாலும், கருணை உள்ளத்தாலும் மக்களிடம் நெருக்கமாகிவிட்டார். தன்னால் முடிந்த சமூகப்பணிகளை செய்ய துவங்கிய லாரன்ஸுக்கு பொதுமக்கள் அபரிமிதமான வாழ்த்தை கூறி பாராட்டுக்களை தந்தனர்.
மாற்றம் தந்த மாற்றம்
இதற்கு பிறகு மிகப்பெரிய அளவில் 'மாற்றம்' என்ற இயக்கம் மூலம் தன்னுடைய சமூக பணிகளை விரிவுபடுத்தி பல உதவிகளை செய்ய துவங்கினார்.. ராகவா லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் இப்போதுவரை தொடர்ந்து வருகிறது.. 2 நாட்களுக்கு முன்புகூட, தன்னுடைய வீட்டையே இலவச பள்ளியாக அறிவித்தார்..
ராகவா லாரன்ஸ் நடன மாஸ்டராக இருந்தபோது உழைத்து சம்பாதித்ததில், ஒரு வீட்டை முதன்முதலாக வாங்கியிருந்தார்.. அந்த வீட்டைதான், ஆதரவற்றோர் இல்லமாக மாற்றி, தன்னுடைய குடும்பத்துடன் வாடகை வீட்டிற்கு சென்றார். இப்போது அதே வீட்டை, குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் பள்ளியாக மாற்றி அறிவித்திருக்கிறார்..
புதுக்கோட்டை மாணவி
ராகவா லாரன்ஸின் ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்து, படித்து முடித்து, சமூகத்திற்கு சேவை செய்ய தயாராக இருக்கும் ஒருவரையே, இந்த பள்ளியின் முதல் ஆசிரியராக லாரன்ஸ் நியமனம் செய்ய போகிறாராம்..புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கடந்த வருடம் செயற்கை கால் பொருத்த உதவிய நிலையில், கடந்த வாரம் அவரை பள்ளிக்கு செல்ல பைக் ஒன்றை வாங்கி தந்தார் ராகவா லாரன்ஸ்.. இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு வீட்டையும் கட்ட உதவி செய்துள்ளார்..
ராகவா லாரன்ஸ் பண மழை
இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.. அதில், கை நிறைய கட்டுக்கட்டாக பணத்தை வைத்திருக்கிறார் லாரன்ஸ்.. அந்த பணத்தை அங்கிருந்த மாற்று திறனாளிகளின் தலையில் கொட்டி, பணத்திலேயே அபிஷேம் செய்துள்ளார்.. பண மழை தங்கள் மீது கொட்டியதுமே திக்குமுக்காடிய மாற்றுத்திறனாளிகள் நெகிழ்ந்து போய்விட்டார்கள்.. தன்னுடைய மாற்றம் டிரஸ்ட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த பணத்தாலேயே அபிஷேகம் செய்திருக்கிறார்..
பணத்தால் அபிஷேகம்
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வீடியோவில் சொல்லும்போது, சின்ன வயதில் நிறைய கோவில் விழாக்களில் டான்ஸ் ஆடியிருக்கிறேன்..அப்போது நான் ஆடி முடித்ததுமே, அங்கிருப்பவர்கள் 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுகளை மாலையாக தொடுத்து, என்னுடைய கழுத்தில் போடுவார்கள்.. அது எனக்கு பயங்கர சந்தோஷத்தை அப்போது தந்தது. மாலை கட்டி போடுவது என்பது பழசு.. இவர்களை உட்கார வைத்து அபிஷேகமே செய்துவிடலாம் என்று எனக்கு தோன்றியது என்று விளக்கத்தையும் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications