மறைந்த மனைவியின் தாலியை மீட்டு தந்த ராகவா லாரன்ஸ்! என் மனதை தொட்டது என உருக்கம்! இப்படி ஒரு காரணமாம்!
சென்னை: நடிகர் மற்றும் சமூக சேவகரான ராகவா லாரன்ஸ் மகளின் கல்விக்காக தனது மறைந்த மனைவியின் தாலியை அடகு வைத்த ஒரு தந்தையை கண்டு உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார். அந்த தாலியை மீட்டு அவரிடம் திருப்பித் தந்ததை பற்றி ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் ஒரு நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சமூக சேவகர் என பன்முகத் திறமை கொண்டவர். இவர் தனது அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய மாணவர்களுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவி செய்து வருகிறார். பல ஆண்டுகளாக நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல ராகவா லாரன்ஸும் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். இவர் செய்த உதவிகளை பார்த்துதான் நடிகர் ரஜினிகாந்த் கூட "ராகவா லாரன்ஸ் ஒரு அதிசய மனிதர்" என்று பாராட்டி இருக்கிறார்.
உருக்கமான பதிவு
இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தனது பதிவில் "அனைவருக்கும் வணக்கம். மகளின் படிப்பு செலவுக்காக தனது மறைந்த மனைவியின் தாலியை அடகு வைத்த ஒரு தந்தையை பற்றி அறிந்தேன். அது என் மனதை மிகவும் தொட்டது. ஏனென்றால் எனது குடும்பமும் ஒரு காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டது" என்று கூறி இருக்கிறார்.
தாலி மீட்பு
"மாற்றம் அறக்கட்டளை மூலம் தாலியை மீட்டு அவரிடம் திருப்பித் தர முடிந்தது. அது வெறும் தங்கம் மட்டுமல்ல அவரது அன்பு மனைவியின் விலைமதிப்பற்ற நினைவு. இன்று என் இதயம் உண்மையிலேயே நிறைந்துள்ளது" என்று தெரிவித்திருக்கிறார். ராகவா லாரன்ஸின் இந்த செயலை பார்த்த பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். "இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை ராகவா லாரன்ஸ் நிரூபித்து விட்டார்" என்று பலரும் அவருக்கு நன்றி சொல்லி வருகிறார்கள்.
ஆதரவு
ராகவா லாரன்ஸ் செய்த உதவி ஒரு தாலியை மீட்டது மட்டுமல்ல ஒரு தந்தையின் மனச்சுமையையும் ஒரு மகளின் கல்வி கனவையும் மீட்டெடுத்திருக்கிறது. அவருடைய இந்த செயல் பலருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது. ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகளை பார்த்து அவருடன் சேர்ந்து பல சினிமா பிரபலங்கள் உதவிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். விஜய் டிவியின் மூலம் பிரபலமான கேபிஒய் பாலா செய்யும் உதவிகளை பார்த்து வியந்து போன ராகவா லாரன்ஸ் அவரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
-
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications