நைசா மாறிய ரைசா .. மீண்டும் களத்தில் புது அவதாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகத்தில் ஏற்பட்ட காயத்தால் பெரும் களேபரத்தை உண்டு பண்ணி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த ரைசா தற்போது எல்லாம் சரியாகி பழையநிலைக்கு வந்துவிட்டார்.

மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விடலாம் என விதவிதமான போட்டோக்களை வெளியிடிருக்கிறார்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எப்படி இருந்த நான் இப்படி மாறி விட்டேன் என புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

பழைய பார்முக்கு வந்தாச்சு

பழைய பார்முக்கு வந்தாச்சு

மீண்டும் நான் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டேன் என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் ரைசா .ஆனால் நெட்டிசன்கள் இந்தப் போஸ்ட் பார்த்து கலாய்த்து வருகின்றனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போதைய நிலைமையை விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார் .அதுவும் முகத்தை அருகில் வைத்து எல்லாமே சரியாகிவிட்டது என போட்டோ வெளியிட்டுள்ளார்.

இனிய அதிர்ச்சி

இனிய அதிர்ச்சி

அதைப் பார்த்து ரசிகர்களும் கொஞ்சம் ஸ்வீட் ஷாக்காகி இருக்கின்றனர். இதுக்குதான் அந்த ஆர்ப்பாட்டமா என பலர் கமெண்ட் களில் கேட்டு வருகின்றனர். திரைப்படங்களில் சைட் ரோலில் நடித்துக் கொண்டிருந்த ரைசா மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு ஒரு நல்ல பிளாட்பாரம் கிடைத்துவிட்டது .

ஆக்டிவ்

ஆக்டிவ்

இதிலிருந்து இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் வந்ததால் தன்னுடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் தன்னுடைய ரசிகர்களின் ஆதரவும் தனக்கு இருக்கிறது என நன்றாகவே திரைப்படங்களில் கலக்கி வந்தார் . திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்ததால் இவருக்கு ரசிகர்கள் வட்டாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

பார்லரில் நடந்தது என்ன

பார்லரில் நடந்தது என்ன

ரசிகர்கள் அதிகரித்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர் முகத்தின் அழகை மேலும் கூட்டுவதற்காக பியூட்டி பார்லரில் ஒரு சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதில் அவர் தவறாக செய்து விட்டதால் எனது முகம் கண்னருகில் வீங்கி விட்டது என அதற்கு நஷ்ட ஈடாக அந்த டாக்டரிடம் ஒரு கோடி கேட்டு இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார் .

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

இவருக்கு எதிராக அவர் கூறிய அதே டாக்டரும் நாங்கள் சரியாகத்தான் சிகிச்சையினை செய்தோம் இதிலுள்ள கண்டிஷன்ஸ் எல்லாம் தெரிந்துதான் ரைசா கையெழுத்துப் போட்டு இதற்கு ஒப்புக் கொண்டார் .ஆனால் நாங்கள் சொன்னதை அவர் நாங்க செய்யக்கூடாது என சொன்னதை இவர் செய்ததால் தான் இந்த மாதிரி ஏற்பட்டிருக்கும் அதனால் அவர் எங்களுக்கு 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என பதிலுக்கு வழக்கும் பதிவு செய்துவிட்டனர்.

செம அமைதி

செம அமைதி

அதற்குப் பிறகு ரைசா தரப்பிலிருந்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கப்பு சிப்பு என்று மூடிவிட்டனர் .தற்போது சில மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் ரைசா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருக்கிறார் .அதில் தளதளவென நைசாக மாறி விட்டேன் என லேட்டஸ்ட்டாக தன்னுடைய அழகை அப்படியே தெரியும் வகையில் விதவிதமாக உடை அணிந்து வீடியோக்களையும் போட்டோக்களையும் அப்லோட் பண்ணி வருகிறார்.

வந்தாச்சு

வந்தாச்சு

இவருடைய போட்டோக்கள் ரசிகர்களாலும் நெட்டிசன்களாளும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது .சில மாதங்களுக்குப் பிறகு இவருடைய போட்டோஸ்கள் மீண்டும் இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியோ ரைசா மீண்டும் அழகாக ரைஸ் ஆகி விட்டதால் ரசிகர்களும் ஹேப்பியாகியுள்ளனர். இனி அடிக்கடி போட்டோ பார்க்கலாம் இல்லையா..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+