தூங்க கூட முடியல.. ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க.. விலகலுக்கு இதுதான் காரணம்.. உண்மைகளை உடைத்த ரியா
ராஜா ராணி சீரியலில் இருந்து ரியா விலகியதற்கு காரணம் பற்றி கூறியிருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் இருந்து ரியா விலகியதற்கு உண்மையான காரணம் இதுதான் என்று கூறியிருக்கிறார்.
ஒரே நாளில் எனக்கு இரண்டு முறை வேலை பார்க்கும் நிலை வந்தது என்றும் தனக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கவில்லை என்றும் பல காரணங்களை ரியா கூறியிருக்கிறார்.
தொடர்ந்து வேலை பார்த்து வந்ததால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் தான் உடல் எடை கூடி விட்டதாகவும் அதனால் தன்னுடைய கான்பிடென்ட் குறைந்து இருக்கிறது என்றும் ரியா கூறி இருக்கிறார்.

விலகலுக்கான காரணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் இரண்டாவது முறையாக சந்தியா கேரக்டரில் நடித்து வந்த ரியா சமீபத்தில் வீடியோ வெளியிட்டு விலகி இருந்தார். ஆனால் அப்போது அதற்கு என்ன காரணம் என்று கூறாமல் இருந்த நிலையில் முதல் முறையாக தான் எதற்காக சீரியலை விட்டு விலகினேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு ஒரு நாள் கூட லீவு கொடுக்கவில்லை என்றும் ஆரம்பத்தில் தனக்கு மாதத்தில் 15ஆம் நாளில் இருந்து 30-ஆம் நாள் வரைக்கும் தான் கால்ஷீட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆலியா மானசா வெளியேறிய நேரத்தில் கைவசம் எந்த எபிசோடுகளும் இல்லை என்பதற்காக என்னை இரண்டு ஷிப்ட் வேலை பார்க்க சொன்னார்கள். நானும் பார்த்தேன் பிறகு சில மாதங்கள் கழித்து எனக்கு ஒரு சில நாட்கள் விடுமுறை தந்திருந்தார்கள்.

அதிகப்படியான நேரம்
ஆனால் அதற்குப் பிறகு காலை தொடங்கி இரவு வரை முழு நேரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களுக்கு ஆறு மணி உடன் முடிவடைந்து விடும். முதலில் வளசரவாக்கம் பகுதியில் சூட்டிங் எடுத்து கொண்டிருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு போலீஸ் ட்ரைனிங் காக வண்டலூர் பகுதியில் சூட்டிங் மாற்றினார்கள். காலை 7:30 மணிக்கு சூட்டிங் தொடங்கிவிடும் என்பதால் நான் வீட்டில் இருந்து 6:30 மணிக்கு எழுந்து செல்ல வேண்டும். அப்படி சென்றாலும் ஆறு முப்பது மணிக்கு மற்றவர்களுக்கு சூட்டிங் முடியும் நிலையில் எனக்கு மட்டும் இரவு 9 மணி 10 மணி வரை சூட்டிங் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
சூட்டிங் முடிவடையும் நிலையில் நான் மட்டும் இரவு ஒன்பது முப்பது வரை சூட்டிங் நடித்துக் கொண்டிருந்தேன். இதனால் எனது குடும்பத்தோடு நான் வளர்க்கும் செல்லப் பிராணியிடம் கூட என்னால் நேரம் செலவழிக்க முடியவில்லை.

விடுமுறையே கிடையாது
குறிப்பாக டிரைனிங்கில் அந்த அறையில் சரவணன் ஆங்காங்கே தோன்றும் காட்சிகள் எல்லாம் இரவு 10:00 மணி வரை சூட்டிங் எடுக்கப்பட்டது. இதனால் என்னால் போனில் கூட என் குடும்பத்துடன் பேச முடியவில்லை. எனக்கு இது முதல் சீரியல் என்பதால் என்னால் இந்த சூழ்நிலைகளை கையாளவும் தெரியவில்லை. இன்றைக்கு எடுக்கும் சூட்டிங் வைத்து தான் நாளை அடுத்த நாள் சீரியல் ஒளிபரப்பாகும் எனவே கடைசி நிமிடம் தயாரித்து சீரியல் எடுக்கப்பட்டது. எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருந்தது. உடைமாற்ற கூட நேரம் கொடுக்க முடியாமல் என்னை அவசரப்படுத்தினார்கள். இதனால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், மாதத்தில் ஒன்று முதல் 15 நாட்கள் லீவு தர வேண்டும். 15 முதல் 35 ஆம் தேதி வரை சூட்டிங் ஆனால் எனக்கு ஒன்று முதல் 15 நாட்கள் லீவு கிடைக்காது. ஆறு நாட்கள் மட்டுமே லீவு கிடைக்கும் அதுவும் இடையில் ஒரு நாள் கிடைக்கும். அந்த லீவு போவதே தெரியாது. அடுத்த நாள் கிளம்பி சூட்டிங் செல்வது போல தான் இருக்கும்.

சீரியல் நேரம் மாற்றம்
இதே நிலைமை தொடர்ந்து கொண்டிருந்ததால் எனக்கு தூக்கம் வரவில்லை. பிரஷர் அதிகமானது மன அழுத்தம் அதிகமானது. இதனால் எனக்கு உடல் எடை ஏறிக்கொண்டே போனது என்னால் உணவு பழக்கத்தையும் டயட்டையும் ஃபாலோ பண்ண முடியவில்லை. இதனால் தான் சீரியலை விட்டு விலகினேன். நான் சீரியலை விட்டு விலகிய போது என்னை திருப்தி படுத்திக் கொள்ளும் வகையில் எந்தவித முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இந்த சீரியல் விரைவில் மதிய நேரத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. அதனால் இந்த சீரியலின் புகழ் குறையலாம் என்றும் அவர் கூறினார்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை











Click it and Unblock the Notifications