உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? ராஜா ராணி சீரியல் மாமியாரை திட்டும் ரசிகர்கள்

ராஜா ராணி சீரியலில் மாமியார் சந்தியாவை படுத்தும் பட்டை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ராஜா ராணி இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் போலீஸ் ஆபீஸராக இருக்கும் மருமகளுக்கு மாமியார் செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மாமியார் சிவகாமியால் சந்தியா பனிஷ்மென்ட் வாங்கிக் கொண்டு வந்த நிலையில் மாமியார் திட்டிக் கொண்டிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

இப்படியுமா மாமியார்

இப்படியுமா மாமியார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் என் கணவன் என் தோழன் என்ற சீரியலின் தழுவலாக இருந்தாலும் இதை அதிகமான ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த மாதிரி ஒரு மாமியாரு இவ்வுலகத்திலேயே இருக்க மாட்டாங்க. இப்படியுமா வீட்டில் மருமகள்களை அடிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்த சீரியலில் மாமியாருக்கு வசைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சந்தியாவின் மாமியார் ஆகிய சிவகாமி சந்தியாவின் வாக்கி டாக்கியை இரவு முழுக்க கத்திக் கொண்டே இருக்கிறது என்று அதை ஆப் செய்து வைத்து விட்டார்.

சந்தியாவுக்கு வந்த புது பிரச்சனை

சந்தியாவுக்கு வந்த புது பிரச்சனை

ஒரு முக்கியமான பிரச்சினையை பற்றி சந்தியாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷனில் இருந்து எத்தனையோ முறை முயற்சி செய்தாலும் சந்தியாவை ரீச் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. அதே நேரத்தில் அங்கு வந்த உயர் அதிகாரி சந்தியாவிற்கு தகவல் சொல்லி ஆச்சா என்று கேட்டதற்கு அவருக்கு ரீச் ஆக முடியவில்லை என்று போலீஸில் போட்டு கொடுத்து விட்டனர். இந்த நிலையில் அடுத்த நாள் ஆபீஸுக்கு சென்ற சந்தியாவிற்கு உயர் அதிகாரி அதிகமாக திட்டு கொடுத்து அவருக்கு வெளியே நின்று கொண்டிருக்க பனிஷ்மென்ட் கொடுத்து விட்டார்.

என்னது சினிமாவா

என்னது சினிமாவா

இந்த நிலையில் வெளியே மணிகணக்கில் நின்று கொண்டு கால் வலியோடு வீட்டிற்கு வந்த சந்தியாவை சிவகாமி திட்டி தீர்க்கிறார். ஒரு அவசரத்துக்கு போன் செய்தால் போனை எடுக்க மாட்டியா? உனக்கு அவ்வளவு பெரிய வேலையா என்று கோபமாக பேசுகிறார். அதுமட்டுமல்லாமல் சரவணனும் சந்தியாவும் ஒன்றாக வருவதால் நீங்க ரெண்டு பேரும் சினிமாவுக்கு போயிட்டு வந்திருக்கீங்களா? வீட்டில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று தெரியுமா? என்று சரவெடியாக வெடித்துக் கொண்டிருக்கிறார். சந்தியா இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்கள் கலாய்க்கப்பட்டு வருகிறது.

இது எல்லாம் ரொம்ப ஓவர் தான்

இது எல்லாம் ரொம்ப ஓவர் தான்

ஒரு ஐபிஎஸ் அதிகாரி அதுவும் தன்னுடைய சொந்த உழைப்பினால் கஷ்டப்பட்டு போராடி இந்த இடத்திற்கு வந்திருக்கும் நிலையில், அவரை வேலை செய்ய விடாமல் மாமியார் செய்யும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பார்க்கும் வீட்டில் இருக்கும் மாமியார்களும் இதே போலத்தான் அதிகாரம் செய்ய நினைப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் பல வீட்டில் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலையிலும் இதே நிலைமை வந்து விடக்கூடாது. அதனால் இந்த மாதிரி பிறமொழி சீரியல்களை தமிழில் கொண்டு வந்து எங்கள் கழுத்தை அறுக்காதீர்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தான் செய்த தப்புக்கு மருமகள் தண்டனை அனுபவித்து வந்திருக்கிறார் ஆனால் அந்த குற்ற உணர்ச்சி இல்லாமல் மருமகள் மீது குறை சொல்லும் மாமியாரை என்ன சொல்வது? இதுவெல்லாம் கேவலமாக இல்லையா என்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் இந்த சீரியல் மற்றும் கதாபாத்திரத்திற்காக வந்த வண்ணமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+