முட்டாள்தனமாக முடிவெடுத்த சிவகாமி.. அதிர்ச்சியில் சந்தியா.. சரவணன் முடிவால் எதிர்பாராத திருப்பம்
சந்தியா என்கவுண்டர் செய்ததால் பெரிய பாவம் செய்துவிட்டார் என்று அவரை சிவகாமி திட்டுகிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2இல் மார்ச் எட்டாம் தேதிக்கான எபிசோட் வெளியாகி இருக்கிறது.
சந்தியா மார்க்கெட்டில் ரவுடிசம் பண்ணிக் கொண்டிருந்த ரவுடியை என்கவுண்டர் செய்து இருக்கிறார்.
என்கவுண்டர் செய்தது பாவம் என்றும் சந்தியா மற்றும் சரவணனை சிவகாமி திட்டுகிறார்.

என்கவுண்டர் செய்த சந்தியா
ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பாகத்தில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் எஸ் பி ஏற்கனவே என்கவுண்டர் செய்ய சொன்ன ரௌடி மார்க்கெட்டுக்குள் புகுந்து இருக்கிறார். அங்கே சத்யாவின் போலீஸ் படைகள் அந்த ரவுடியை சுற்றி வளைக்கின்றனர். அப்போது அதே மார்க்கெட்டில் சிவகாமியும் வந்திருக்கிறார். ரவுடிக்கு சந்தியா போலீஸ் தன்னை சுற்றி வளைத்து விட்டது தெரிந்து, அங்கே ஓடிக்கொண்டிருந்த ஒரு நபர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருக்கிறார். பிறகு அவரை பிடிக்க வந்த ஒரு போலீஸ் ஆபீஸரை கத்தியால் வெட்டி விட்டு அவருடைய முதுகில் குத்த போகும் போது சந்தியா அந்த ரவுடியை என்கவுண்டர் செய்கிறார்.

சிவகாமியின் கோபம்
அடுத்ததாக வீட்டுக்கு வேகமாக ரத்த கரையோடு வரும் சிவகாமியை பார்த்து அவருடைய கணவர் அதிர்ச்சியாகி என்ன ஆனது என்று கேட்க, அங்கு இருக்கும் தண்ணீரை எடுத்து தலைமுழுகியப்படி மார்க்கெட்டில் நடந்த விஷயத்தை கூறுகிறார். இதுக்கு தான் நான் நம்ம வீட்டில் போலீஸ் வேண்டாம் என்று சொன்னேன். இப்போ சந்தியா செஞ்ச பாவம் என்னுடைய மகனையும் சேர்ந்து பிடித்து விடும். என்னுடைய மகனுக்கு இப்படி ஒரு பொண்ணா கிடைக்க வேண்டும்? என்று சிவகாமி புலம்பியபடி புடவையை மாற்றிக் கொண்டு வந்து தான் கட்டி இருந்த புடவையை நடுத்தெருவில் வைத்து தீ வைத்து கொளுத்துகிறார்.

சந்தியாவின் விளக்கம்
பிறகு சந்தியா அங்கே வர என்ன நடந்தது என்று சரவணன் கேட்க, இது எனக்கு எஸ் பி கொடுத்த ஆர்டர். எஸ்பி சொன்ன வேலையை தான் நான் சென்று இருக்கிறேன். நான் அப்பொழுது சுடவில்லை என்றால் அந்த ரவுடி இன்னும் பல பேரை வெட்டி இருப்பான் என்று தன்னுடைய நிலைமை எடுத்துச் சொல்ல, சரவணன் சந்தியாவுக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருப்பதை கேட்டு சாமி கும்பிட்டு படி இருந்த சிவகாமி மீண்டும் வந்து சந்தியாவை திட்டுகிறார்.

சந்தியாவின் வேண்டுதல்
அடுத்ததாக சந்தியா சரவணன் இடம் நான் மட்டும் அந்த ரவுடியை கொல்லவில்லை என்றால் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை அவன் வெட்டி இருப்பான். அது மட்டுமில்லாமல் பல குழந்தைகளுடைய வாழ்க்கையை அந்த ரௌடி நாசமாக்கி இருக்கிறான். ஆனாலும் அவன் என்னுடைய கையால் இறந்து இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளின் நிலைமை என்ன ஆகும் அவர்கள் யாரும் கஷ்டப்படக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!











Click it and Unblock the Notifications