ராஜா ராணி சீரியல் நடிகையின் கணவர், மகள் உயிரிழப்பு..கொடூரமாக கொலை செய்த மகன்.. வெளிவந்த காரணங்கள்!?
துணை நடிகை சாந்தியின் கணவர் மற்றும் மகளை அவருடைய மகன் கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: சின்னத்திரை நடிகை சாந்தியின் கணவர் மற்றும் மகளை அவருடைய மகனே கொலை செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
நடிகை சாந்தி ராஜா ராணி சீரியலில் முதல் பாகத்தில் கதாநாயகனின் வீட்டில் பணி செய்யும் பெண்ணாக நடித்திருப்பார்.
பல சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் சாந்தியின் மகன் செய்த செயலால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

துணை நடிகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில் கதாநாயகன் சஞ்சீவ் வீட்டில் பணி செய்யும் பெண்ணாக நடிகை சாந்தி நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சென்னை மாங்காடு அரசன் நடிகர் பகுதியில் தனது கணவர் செல்வராஜ் மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

தவறான பழக்கவழக்கங்கள்
இருப்பினும் இவருடைய மூத்த மகன் திருமணமாகி குடும்பத்துடன் சென்னை அடுத்த படைப்பையில் வசித்து வருகிறார். அதுபோல அவர்களின் ஒரே மகளான பிரியாவுக்கும் திருமணம் ஆகி விட்டது. ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு அருகிலே தனது குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் செல்வராஜ் சாந்தி தம்பதியின் இளைய மகனான பிரகாஷ் கஞ்சா போதைக்கு மிகவும் அடிமையுள்ளவராக இருந்திருக்கிறார். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிரகாஷை குடும்பத்தினர் மனநல மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

அப்பா கொலை
தனியார் மருத்துவமனையில் பிரகாஷை சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால் பிரகாஷை மருத்துவமனையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் வீட்டிலிருந்த பிரகாஷ் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அருகில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த தனது அப்பா செல்வராஜை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அருகில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று பிரகாஷ் அங்கு அவருடன் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

குடும்பமே கண்ணீரில்
இதற்கிடையே இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது சகோதரியை சரமாரி குத்தி கொலை செய்திருக்கிறார். அந்த நேரத்தில் நடிகை சாந்தி தனது மகன் பிரகாஷூக்கு மருந்து வாங்க கடைக்கு சென்று இருந்தாராம். அதனால் அவர் உயிர் தப்பி இருக்கிறார். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட தந்தை செல்வராஜ், மகள் பிரியா ஆகியோர்களின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த பிரகாஷையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மகனின் போத வெறிக்கு கணவரையும் மகளையும் பறிகொடுத்துள்ளார் சினிமா நடிகை சாந்தி. இந்த சம்பவமானது அவர்களின் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
-
நடிகர் தியாகராஜனுக்கு கார் ஷோரூமில் நடந்த அவமானம்! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கலையே! நெகிழ வைத்த தருணம் -
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications