காதல் திருமணத்தால் கஷ்டம்! தேவயானிக்கு பிரசவ நேரத்தில் யாரும் இல்லை! அந்த இருவர்? ராஜகுமாரன் எமோஷனல்
சென்னை: நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ராஜகுமாரன் சமீபத்தில் தானும் தேவயானியும் காதல் திருமணம் செய்ததால் பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு நெடுநாட்கள் மகிழ்ச்சியாக வாழ்வது யாரெல்லாம் என்று கைவிட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு ஒரு சிலர் மட்டும்தான் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை தேவயானி மற்றும் இயக்குனர் ராஜ்குமாரன் தம்பதி இடம் பிடித்திருக்கிறார்கள்.

தேவயானி புகழின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் ராஜகுமாரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நேரத்தில் இவர்கள் உடைய காதல் திருமண செய்திகள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என எல்லோரும் இவர்களுடைய திருமணத்தைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருந்தனர். காரணம் தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் அழகில் ஒற்றுமை இல்லை என்று பலரும் விமர்சித்து வந்தனர்.
அதுபோல தேவயானி வீட்டில் இவர்களுடைய காதலுக்கு சம்மதிக்காததால் தான் தேவயானி வீட்டை விட்டு வெளியேறி ராஜகுமாரனை திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் ராஜகுமாரன் தன்னுடைய மகள் இனியாவோடு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து ராஜகுமாரன் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் ,நானும் தேவயானியும் திருமணம் செய்ததை பலர் அந்த நேரத்தில் விமர்சித்தார்கள். நான் அழகா இல்லை என்று எவ்வளவோ பேர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தேவயானி எந்த இடத்திலும் என்னை விட்டுக் கொடுத்தது கிடையாது. எங்களுடைய திருமணம் முடிந்த நேரத்தில் நாங்களும் குழந்தைத்தனமாக தான் இருந்தோம்.
அதோடு நான் நமக்கு குழந்தை வேண்டாம் என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் தேவயானி அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. என்னை என்னுடைய அம்மா, அப்பா இப்படி பெற்றுவிட்டதால் தான் எல்லோரும் என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்கள். இனி என்னைப் போல இன்னொரு குழந்தை பிறந்து அந்த குழந்தையும் இந்த உலகத்தில் கஷ்டப்பட வேண்டாம் என்று நான் தேவயானிடம் சொன்னேன். ஆனால் தேவயானி அதற்கு மறுத்துவிட்டார்.
பிறகு தேவயானி குழந்தை வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். அதற்கு பிறகு தான் எங்களுடைய முதல் குழந்தை உருவாகி இருந்தார். தேவயானி கர்ப்பமாக இருக்கும் போது பிப்ரவரி கடைசியில் தேதி கொடுத்திருந்தார்கள். ஆனால் தேவயானிக்கு அதற்கு 48 நாட்களுக்கு முன்பே வயிறு வலி வந்துவிட்டது. உடனே நாங்கள் ஹாஸ்பிடலுக்கு போனோம் அங்கு 12.5க்கு குழந்தை பிறந்தது. அன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறக்கிற நேரத்தில் குழந்தை பிறந்தது.
தேவயானி ஹாஸ்பிடலில் சேர்த்திருந்த நேரத்தில் எங்களுக்கு துணையாக யாருமே கிடையாது. நாங்கள் இருவரும் ஹாஸ்பிடலில் நிற்கிறோம். அந்த நேரத்தில் எங்க பக்கத்து வீட்டில் கணவன் மனைவி ரெண்டு பேரு இருந்தாங்க அவங்க தான் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்து சின்ன சின்ன உதவிகள் செய்து கொண்டு இருந்தாங்க. அவங்க தேவயானியை ஹாஸ்பிடலில் சேர்த்ததை கேள்விப்பட்டு வந்தாங்க.
அந்த நேரத்தில் 12.5க்கு குழந்தை அழுற சத்தம் கேட்டதும் நான் ஹாஸ்பிடலில் எங்கேயோ குழந்தை அழுகிறது என்று சொன்னேன் அவங்க உனக்கு தான் குழந்தை பிறந்திருக்கு என்று சொன்னாங்க, குழந்தை பிறந்தது சந்தோஷமான விஷயமா இருந்தாலும் கூட எனக்கு அந்த நேரத்தில் நிறைய விஷயங்கள் தெரியாமல் தான் இருந்தது. பிறகு குழந்தையை வளர்த்து எடுப்பதற்கு தேவயானியும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க என்று அந்த பேட்டியில் ராஜகுமாரன் பேசியிருக்கிறார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications